Skip to main content

விதையும் விளையும் வரலாறும் - 1

விதையும் விளையும் வரலாறும் தக்காளி

                                               


                      

 

வரலாற்றில் தக்காளி

 

 நம்ம ஊர்ல தங்கம் விலை ஏறினா கூட கவலைப்பட மாட்டோம் ஆனா தக்காளி விலை ஏறினா போதும் காச் மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுருவோம் ,  கிலோ 110 ரூபாயை தாண்டினா உட்காந்து கவலைப்படுவோம் . ஒருவாரத்திற்கு மேல பிரிட்ஜ்லயும் வைக்க முடியாது நல்லா ருசியா சாப்பிட்டு வேற பழகிட்டோமா , நம்ம வீட்டுல தக்காளி இல்லாமலும்  சமைக்கவே முடியாது . வேற வழியில்லாம கிலோ நூத்திப்பத்துன்னு வாங்கலாம் என்று போனால்  நல்ல தக்காளியெல்லாம் நமக்கு முன்னாடி யாரவது எடுத்துட்டு போயிருப்பாங்க  வேற வழி இல்லாம அதுலயும் வடிகட்டி தக்காளியை வாங்கிட்டு வருவோம் . சரி தக்காளி நம்ம ஆதிகாலத்து உணவா , இல்ல இந்தியாவிற்கு இடையில் வந்ததுதான் . எப்ப வந்தது எப்படி வந்தது என்று பார்ப்போம் .

 

கிட்டத்தட்ட 8000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்காவில் தக்காளியை பயிரிட ஆரம்பித்து விட்டார்கள் . அப்போது பயிரிடப்பட்ட தக்காளி சிறியதாகவும் புளிப்பு சுவை அதிகமாகவும் இருந்துள்ளது .  கிமு. 700களில் தென் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் தக்காளியை உணவாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பரவி பெரு , பொலிவிய , சிலி மற்றும் ஈக்வடார் என்று அறியப்படும் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டஸ் மலைத் தொடர்களில் தக்காளி முதன்முதலில் தக்காளியை சாகுபடி செய்துள்ளனர் .  இது அடுத்த 1000 ஆண்டுகளில் ஆஸ்டெக்ஸ் மற்றும் இன்காஸ் நாகரிகங்களுக்கு பரவியது . சில சுற்றுலா பயணிகள் மூலம் தக்காளி செடி மத்திய அமெரிக்காவிற்கு பரவி மாயன் நாகரிக மக்களும் தக்காளி பயிர் செய்யப்பட்டது ஆனால்  இதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை , சில ஆயிவாளர்கள் கிமு 500 முன்பே மாயன்கள் தக்காளி செடியை பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்கின்றனர் .

 


600 வருடங்களுக்கு அமெரிக்க கண்டங்கள் கொலம்பஸ் மற்றும் அமெரிகோ வெஸ்புகியால் கண்டுபிடிக்கப்பட்டாலும். அடுத்து வந்த பெர்னல் டியாஸ் மற்றும்  டி காஸ்டிலோவுக்கு, 1538 இல் குவாத்தமாலாவிற்கு வந்தபொழுது காய்கறிகளோடு உப்பு மிளகாய் தக்காளி சேர்த்து சாப்பிடுவதை பார்த்தனர் . அதன் சுவை நன்றாக இருக்கவும் அதை ஐரோப்பாவிற்கு கொண்டுவர முடிவு செய்தனர் . 1540 களில் ஸ்பெயினில் உள்ள அப்போதைய சர்வதேச வர்த்தகமயம் ஆன செவில்லுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு வந்த வணிகர்கள் மூலம் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு பரவி இருக்கவேண்டும்

 

தக்காளி என்ற பெயர் வந்தது எப்படி

 

தென் அமெரிக்காவில் அஸ்டெக் இந்த பழத்தை வளர்க்கும்பொழுது சோடோமாட்டில் (Zotomatil) என்று அழைத்தனர். 1600 எழுதப்பட்ட புத்தகங்களில் Zotomatil என்றே பலரும் அழைக்கின்றனர் . பின்பு ஸ்பானியர்கள் தலை பலத்த "டொமேட் " என்று அழைத்தனர் அது மருவி ஆங்கிலேயர்கள் டொமட்டோ என்று அழைக்க ஆரம்பித்தனர் . தக்காளியோட  அறிவியல் பெயர் சோலனம் லைகோபெர்சிகம் மற்றும் அது சோலனேசி குடும்ப வகையை  சேர்ந்தது ஆகும் . தக்காளியோட சிகப்பு நிறத்திற்கு லைகோபீன் தான் காரணம் . 95 சதவீதம் நீரும் 5 சதவீதம்  வைட்டமின் சி,குளுட்டமேட்ஸ்,சிட்ரிக் அமிலங்கள், மாலிக் இருக்கின்றன .

 

ஓநாய் பழம்

 

சோலனேசி குடும்பத்தில் பல வகைகள் உள்ளன அதில் பெல்லடொன்னா என்ற வகை விஷத்தன்மை உடையது பார்ப்பதற்கு தக்காளியின் இலையை போன்றே இருக்கும் இதனால் தக்காளியும் விஷத்தன்மை உடையதாக இருக்கும் என்று பிரிட்டன் மக்கள் கருதினர். மேற்கத்திய நாடுகளில் தக்காளியை ஓநாய் பழம் என்றுதான் அழைத்தார்கள் சூனியக்காரிகள் மற்றும் மந்திரவாதிகள் இந்த பழத்தை சாப்பிட்டு தங்களை விலங்குகளாக மாற்றிகொள்ளவார்கள் இங்கிலாந்து மக்கள் 1590 வரை நம்பிவந்தனர் . பின்னர் இதை கட்டுக்கதைகளை அந்நாட்டைச் சேர்ந்த சவரத் தொழிலாளியும் அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் ஜோராடு என்பவர், தக்காளி சாப்பிடுவதற்கு உகந்த ஒன்று என்பதை நிரூபித்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். 1800களில் கூட அமெரிக்காவில் மேசை செடியாக வளர்த்தார்கள் . இருந்தாலும் அவர்கள் அதை சந்தேகத்துடனேயே பார்த்தார்கள் . சில புத்தகங்களில் தக்காளி விஷ தன்மை வாய்ந்த ஆப்பிள் என்று எழுதப்பட்டுள்ளது .

 


தக்காளியை சாப்பிட்ட சில பணக்காரர்கள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது .உண்மையில்  ,  அவர்கள் பயன்படுத்திய  'பியூட்டர்' பாத்திரங்கள்தான் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது . தக்காளியில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் அவை ஈயபாத்திரத்தில் சமைக்கும் பொழுது ஈயதுடன் வினையாற்றி புட் பாய்சன் ஆகியிருக்கலாம் என கூறப்பட்டது . அடுத்து இத்தாலியைச் சேர்ந்த பியட்ரோ ஆண்ட்ரியோ மாட்டியோல் என்ற மருத்துவர் தக்காளிச் செடியை மூலிகைச் செடி என்று கருதினார். தன் மருத்துவத்துக்கு அதைப் பயன்படுத்தி வந்தார். தக்காளியை அலங்காரத் தாவரமாகவே இத்தாலியில் கருதி வந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் உணவு உற்பத்தி குறைந்து பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது பஞ்சம் பசி வேறு வழியின்றி இத்தாலிய மக்கள் தக்காளியை சாப்பிட ஆரம்பித்தனர் தங்கள் வீட்டுப் பூந்தோட்டங்களில் பூந்தொட்டிகளில் வைத்துத் தக்காளிச் செடியை வளர்த்தனர். பூக்கூடைகளிலும் மேஜைகளிலும்கூடத் தக்காளிச் செடியை அலங்காரப் பூக்களாக வளர்த்தனர்.

 

அடுத்துதான் நம்மை சோதனை செய்யும்  தக்காளிக்கே சோதனை வந்தது அது தக்காளி காயா பழமா?  1887 லில்  ஒரு சட்டம் இயற்றப்பட்டு அணைத்து காய்கறிகளுக்கு வரி விதிக்கப்பட்டது .  தக்காளியை காய்கறியில்  சேர்பதா அல்லது பழத்தில் சேர்பதா என . இறுதியில் பஞ்சாயத்து கோர்ட்டுக்கு போனது தாவரவியல் படி பார்த்தால் பழமாகவும் , சமையல் வகைப்பாட்டின் படி பார்த்தால் காய்கறி இப்படி  அவர்கள் பலவருடமா பஞ்சாயத்து பண்ணி 1893 ல்  தக்காளி பழம் கிடையாது காய்கறிதான்  என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்றும் அமெரிக்காவில்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய தக்காளி ஆராய்ச்சி மையமே செயல்படுகிறது.

 

இத்தாலியில் தக்காளி செடியை அலங்கார செடியாகவே பயன்படுத்தி வந்தனர் வீட்டில் உள்ள பூத்தோட்டம் பூத்தொட்டிகளில்  வைத்துத் தக்காளிச் செடியை வளர்த்தனர். பூக்கூடைகளிலும் மேஜைகளிலும்கூடத் தக்காளிச் செடியை அலங்காரப் பூக்களாக இத்தாலியர்கள் வளர்த்தனர் . இத்தாலியை சேர்ந்த பியட்ரோ ஆண்ட்ரியோ மாட்டியோல் என்ற மருத்துவர் மூலிகை செடி என்று நினைத்து மருத்துவத்திற்காக பயன்படுத்தி வந்தார் .


Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...