Editors Choice

3/recent/post-list

Ad Code

உழவோன் -2

                               2. வேட்டையாடிகள்



அப்பொழுது வாழ்ந்த மனிதனுக்கு உணவு என்பது பெரும்பாலும் வேட்டையாடி உண்பதுதான் அல்லது வேறு ஏதாவது விலங்கு வேட்டையாடி சாப்பிட்ட மிச்சத்தை  எடுத்து வந்து சாப்பிடுவது . அவ்வப்பொழுது அந்த பகுதியில் கிடைக்கும் பழங்கள் . நாடோடியாக  நடக்க ஆரம்பித்த பொழுது எல்லா நேரமும் உணவு கிடைப்பதில்லை . அப்பொழுது மாற்றுவழியாக பழங்கள் , காய்கறிகளை உன்ன ஆரம்பித்தான் . ஆனால் அதிலும் சிக்கல் ஓன்று இருந்தது . எது நல்ல காய்கறி , எது விஷமற்ற பழம் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது . இதை கண்டுபிடிக்க முடியாமல் இறந்த மனிதர்கள் ஏராளம் இன்றைக்கு நீங்கள் கத்தரிக்காய் சாம்பார் சாப்பிட்டு நீங்கள் சாகவில்லையென்றால் அதற்கான உயிர் இழப்பு என்பது லச்சக்கணக்கில் என்பதை மறந்துவிடாதீர்கள் . எப்படி நல்ல உணவு என்பது கண்டுபிடிப்பது . உட்காந்து யோசித்தான் இயற்கை உதவி செய்தது . பறவைகளை  பார்த்தான் அது எந்த மரங்களில் உட்காந்து பழங்களை சாப்பிட்டதோ அதை சாப்பிட்டான் . எந்த மரத்தில் அணில் உட்கார்ந்து பழங்களை சாப்பிட்டதோ , அதை சாப்பிட்டு அணில் கடித்த பழம் மிகவும் சுவை என்றோம் . சாப்பிட்டு அதன் விதையை போட்டால் திரும்ப முளைக்கும் என்பது தெரியாது . அப்போதைய பசி தீர்ந்தால் சரி அடுத்த இடத்தை பார்த்து நகர்ந்து கொண்டிருந்தான் .


 


மனிதன் உலகின் அனைத்து இடத்திற்கும் சென்றுவிட்டான் என்று நினைத்த இயற்கை கிட்டத்தட்ட  இருபதாயிரம் வருடங்களுக்கு ஒரு ஆட்டம் ஆடியது தன்னுடைய வெப்ப நிலையை ஒரு இரண்டு டிகிரி  கூட்டியது  . விளைவு பணிகள் உருக ஆரம்பித்தன பனி உருகி நதிகள் உருவாக ஆரம்பித்தன . கண்டங்கள் பிரிய ஆரம்பித்தன , அமெரிக்க அதோடு காணாமல் போனது . அமெரிக்க வெஸ்புகியோ அல்லது கொலம்பஸ்ஸோ வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான் . இங்கே ஆஸ்திரேலியாவிற்கு அதே நிலைமைதான்

 

பருவநிலை மாற்றத்தின் விளைவாக தொடர்ந்து அவனால் நடக்க முடியவில்லை . என்ன செய்யலாம் ஓர் இடத்தில் தங்கலாம் என முடிவெடுத்தான் . இவ்வாறு மூணு லட்சம் வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய பயணம் ஒருவராக பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன் நிறைவு பெற்றது . ஒரு விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பது மனிதனிடம் இயற்கையாகவே இருந்தது . ஒரு மானை எப்படி வேட்டையாடுவது , அதே போன்று யாணை , எருமை போன்றவற்றையும் எப்படி கொல்வது போன்றவற்றை குகையில் ஓவியமாக வரைந்து வைத்தான் . தீயை எப்படி உருவாக்கலாம் ஓவியங்கள் வரைந்தான் , எல்லா இடங்களிலும் சிக்கி முக்கி கல் கிடைக்காது . ஒரு குச்சியை எடுத்து மரத்துகள்கள் இடையே வைத்து தேய்த்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும் அதிலிருந்து அவனுக்கு நெருப்பு கிடைத்தது . அதையும் அவன்  ஓவியமாக தேய்த்தான் .

 


குளிர் பயங்கரமாக இருந்தது , பரிணாம வளர்ச்சி காரணமாக அவனை காத்து வந்த ரோமம் உதிர்ந்திருந்தது , என்ன செய்யலாம் இறந்து கிடந்த விலங்குகளின் தோலை எடுத்து ஒடுத்திக்கொண்டான் . அதே சமயம் மனிதனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான் அவன் பெயர் நாய் . ஆரம்பத்தில் அவனை பார்த்து குறைத்து துரத்தியது . அவன் சாப்பிட்ட மிச்ச உணவை நாய்க்கு போட்டான்  அதை சாப்பிட்டு அவனுக்கு வாலாட்டியது . ஆபத்தான விலங்குகள் வந்தால் ஆக்ரோஷமாக குரைத்தது , நன்கு நாய்கள் ஓன்று சேர்ந்து அந்த விலங்கை துரத்தியது அன்று முதல்  மனிதனும் நாயும் முஸ்தபா முஸ்தபா என்று பாட்டு பாடினார்கள் .

 

ஒரு இடத்தில் தங்கலாம் ஆனால்  எங்கே தங்குவது இனிமேல் குகையிலும் தங்க முடியாது குடும்பம் பெரிதாகிவிட்டது அதேசமயம் வெட்ட வெளியிலும் தங்க முடியாது  மழை வெயில் , விலங்குகள் ஆபத்து உண்டு . ஒரு பாதுகாப்பு கூடாரமாக இருந்தால் , இலை  தழைகளை கொண்டு ஒரு கூடாரம் அமைத்தான் , வெய்யில் மழைக்கு சரி குளிருக்கு , பெரிய மாமத் வகை யானைகளை கொன்று அதன் தோல் பயன்படுத்தப்பட்டது . அடுத்த பிரச்சனை நீர், நீர் நிலைகள் , ஆறுகளின் அருகில் கூடாரங்களை அமைத்தான் . இதனால் இரண்டு வசதிகள் கிடைத்தன ஓன்று நீர் , மற்றொன்று நீரை தேடி வரும் விலங்குகளை  வேட்டையாடினான் .

 

வேட்டையாடி மிருகங்களும் இவனை தாக்க  வருமல்லவா  அவர்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றி வேலியை அமைத்தார்கள். அப்படியிருந்தும் அவனை மிருகங்கள் தாக்க வந்தன  , இரவு நேரத்திலும் காவல் தேவை என்று உணர்ந்த மனிதன் கையில் தீப்பந்தத்தோடு இரவு பகலாய் காவல் காக்க ஆரம்பித்தான். எல்லாம் சரி அவனுடைய மொழி எப்படி இருந்திருக்கும் , எப்பொழுது அவன் பேச ஆரம்பித்திருப்பான் . சமீபத்திய ஆய்வின்படி நியாண்டர்த்தல்  மற்றும் சேபியன்ஸ் இரண்டு இணங்களுமே பேச தெரிந்தவர்களாக இருந்தனர் சுமார் ஒரு லட்சம் ஆரம்பித்து ஐம்பதாயிரம்  வருடங்கள் வரை நன்றாக பேச தெரிந்த மனிதர்களாக உருமாறி இருந்தனர் .  நாம் இப்பொழுது பயன்படுத்தப்படும்  சில வார்த்தைகள் ஆதி காலத்திலிருந்தே பயன்படுத்தியதை ஆகும் . உஸ்ஸ்... எதாவது விலங்குகள் வந்தால்  அமைதியாக இருங்கள் பயன்படுத்தப்பட்டது . ஹே , ப்ச்ச்,  போன்ற வார்த்தைகளை ஆரம்பகால மனிதன் பயன்படுத்திருக்கலாம் . பறவைகளோட சப்தங்களும் மனிதன் பேச ஆரம்பிப்பதற்கு ஒரு உந்துதலாக இருந்திருக்கலாம் .

 

அதே சமயத்தில் இந்த காலகட்டத்தில் எழுத்து என்பது உருப்பெறவில்லை அனைத்துமே அவை ஓவியங்களாகத்தான் இருந்தன . அதே நேரம் புள்ளிகள் அங்கங்கே ஓவியங்களின் அடியில் தென்பட ஆரம்பித்தன . அதுவே பிற்காலத்தில் கோட்டோவியங்களாகி  எழுத்துக்களாக உருமாறின

 


எவ்வளவு நாட்கள்தான்  நாம்  வேட்டையாட போவது . வேட்டையாடினாலும் , அந்த உணவை எடுத்து வருவதற்குள் போதும் போதும்  என்றாகிவிடுகிறது . கழுகு முதல் கழுதைப்புலி வரை போராடவேண்டும் . கழுகு கூட பரவ இல்லை கழுதைப்புலி கடைசி வரை சண்டைபோட்டு இரையை தூக்கி கொண்டு ஓடிவிடும் . இதற்கு என்ன வழி செய்யலாம் என்று விட்டத்தை பார்த்து யோசித்து கொண்டிருந்த ஒருவனிடம், அவன் மனைவி எருமை மாடு இப்படி  விட்டத்தை பார்த்து உட்காந்திருப்பதற்க்கு பதிலா எதையாவது வேட்டையாடி கொண்டு வரலாம்ல என்று கேட்டிருப்பானு நினைக்கிறேன் . டக்குனு அந்த ஐடியா அவனுக்கு வந்துருச்சு . ஏன் சாஃப்ட் ஆன  விலங்குகளை நமே வளர்க்கலாமே , அமைதியான விலங்குகள் என்று எதுவுமே கிடையாது , கண்டவுடன் அவனை மாடுகள் தாக்காது . நான்கு பேர் சேர்ந்து துரத்தி பிடித்துவிடலாம்

அப்புறம் என்ன பல வழிகளில் மாடுகளை பிடிக்க முயற்சி செய்தான் சில இழப்புகளுக்கு பின் மாடு வளர்ப்பும் அவனுக்கு கை கூடியது உலகத்தில் முதல் தொழில் மாடு வளர்ப்பு இனிதே தொடங்கியது . அடுத்து ஆடு , கோழி , பன்றி  இப்படி அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கினான் .  இப்படி ஆற்றங்கரை ஓரமாக நாகரிகம் வளர ஆரம்பித்தது . இது வரைக்கும் மனித நாகரிகம் மெதுவாகத்தான் வளர்ந்தது . அடுத்து அவன் கண்டுபிடித்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பால் நாகரிகம் ராக்கெட் வேகத்தில் பறக்க போகிறது . அந்த கண்டுபிடிப்பின் பெயர் சக்கரம் . அதுக்கு முன்னாடி நாம ஒருத்தவங்களை பார்க்க வேண்டியுள்ளது அவர்கள் பெயர் ஹோமோ லெஸ்பியன்ஸ் - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் .


Post a Comment

0 Comments

Ad Code