Ad Code

உழவோன் -1

                                  மனிதன் ஒரு ஆரம்பம் - 1

 


விவசாயம் என்பது ஒரு படி நிலையில் உருவாகவில்லை மனித இனம் தோன்றி அந்த இனம் நன்றாக உருவெடுத்து வளர்ந்து வேட்டையாடி ஒருநிலையில் தங்கி பின்பு விவசாயம் உருவெடுத்து இன்று முதல் நம்மை உருவாக்கி கொண்டிருக்கிறது . நான்  முதலில் மனிதன் எப்படி தோன்றினான் இந்த விவசாயம் எப்படி தோன்றி இருக்கலாம். அது எப்படி நம்முடன் பரினாமித்து வளர்ந்தது என்று பார்க்கலாம்

 

கிட்டத்தட்ட ஒரு மூணு மில்லியன்  வருஷத்துக்கு முன்னாடி இன்றைய ஆபிரிக்க காடுகளில் ஒரு புத்திசாலியான குரங்கினம் எழுந்து நிமிர்ந்து  நடக்க ஆரம்பித்தது. அது என்ன புத்திசாலியான குரங்கினம் ? ஏன்னா அந்த  ஒரு குரங்கினம் மற்றும் நிமிர்ந்து நடக்கல நியாண்டர்தால் போன்ற நான்கு வகையான குரங்கு இனங்கள் நடந்தது . இயற்கை ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒரு தனி சக்தியை கொடுத்தது . நியாண்டர்தால் மனித இனம் ரொம்ப பலசாலியாக இருந்தனர் . அப்ப நம்ம ஆரம்பத்தில் சொன்னேனே ஒரு புத்திசாலி அது நாமதான் ஹோமோ சேப்பியன்ஸ் ஆண்கள் , பெண்களை ஹோமோ லெஸ்பியன்ஸ் என்று அழைப்பார்கள் . இந்த இடத்துல ஒரு கேள்வி , பலசாலியான மனித இனத்தை , புத்திசாலியான மனித இனம் வென்றதா ? ஒரு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் நாம்தான் வென்றோம் . உங்களுக்கு கொஞ்சம் புரியும்படி சொல்லணுமுன்னா , ஒரு பலசாலியான மனிதனால் ஒரு டன் கல்லை கையால் துக்கமுடியாது , ஒரு புத்திசாலி மனிதன் அந்த கல்லை உருட்டிவிடுவான் , யானையை வைத்து இழுப்பான் , தன்  மூளையால் ஒரு கிரேன்னை உருவாக்கி அதன் மூலம் ஒரு டன் என்ன அவனால் ஐந்து டன் எடையுள்ள கல்லை கூட தூக்க  முடிந்தது .  இதனால்தான் அந்த புத்திசாலியான மனித இனம் தழைத்து வளர்ந்தது , வளமுள்ளது வாழ்ந்தது

 


ஆதி காலத்துல மனிதனின் பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையான ஒரு விஷயம் இருந்தது அதுக்கு பேரு பசி , அந்த பசிதான் பலவித தேடல்களை மனிதனிடம் உருவாக்கியது , பகையையும் உருவாக்கியது , ஆசையையும் அது உருவாக்கியது  . இது என் இடம் நீ உள்ளே வரக்கூடாது , நான் சாப்பிட்டது போகத்தான் உனக்கு . இப்படி பலவிதமான சிக்கல்கள் உருவானது . இத சரிபண்ண எல்லோரும் ஒரு இடத்தில் இருந்ததானே பிரச்சனை நம்ம குடும்பத்தோட வேற இடத்திற்கு போகலாம் என்று முடிவு எடுத்தான் . அங்கேதான் முதல் பிரச்சனை உருவானது , வேட்டையாட 50 அடி வெளியில போனாலே அவன வேட்டையாட  அம்பது மிருகம் பயங்கர நகத்தோடயும் கோரப்பல்லோட  கிழிக்க காத்துகிட்டு இருந்தது , அப்புறம் அதுக்கும் பசிக்கும்முள்ள , போதாக்குறைக்கு வானத்துல வேற தூக்கிட்டு போக ரெடியா டெரர் பறவை இனம் மாதிரி பல நான் வெஜ் பறவை இனங்கள் . பரவாயில்லை தண்ணியாவது குடிக்கலாம் பார்த்தா, தலைய மட்டும் துண்டா தூக்கிட்டுப்போக முதலை மாதிரி பல உயிரினங்கள் நீருக்கடியில் இருந்தது , சரி ஒரு பழமாவது சாப்பிடலாம் பார்த்தா  விஷ பழங்களை சாப்பிட்டு இறந்த மனிதர்கள் ஏராளம் அப்புறம், விஷக்கடி தனி வகை. இடி, மின்னல் காட்டுத்தீ வேறு வகை இதையெல்லாம் தாண்டி , தாங்கி மூன்று லட்சம்  வருடங்களுக்கு முன்னாடி மனிதன் நடக்க ஆரம்பித்தான்

 


அப்பொழுதுதான் மனிதன் சிந்திக்க ஆரம்பிச்சான் இடி மின்னல்னா குகைக்குள் ஓடி தப்பிக்கலாம் ஆனா விலங்குகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது , அப்பொழுது ஒரு மின்னல் வெட்டியது மின்னலில் இருந்து  தீ உருவாவதை பார்த்தான் அதை பார்த்து விலங்குகள்  பயந்து ஓடியதை பார்த்தான் . மனிதனின் மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டியது , தீயை கண்டால் விலங்குகள் பயந்து ஓடுகின்றன . அன்றுலிருந்து எப்பொழுது தீ வந்தாலும் ஓடி தண்ணீர் குடத்தில் நீர் எடுத்து வ்ருவது போல வைத்து கொண்டான் . அந்த தீயில் கிடந்த விலங்குகளை எடுத்து உண்டான் சுவையாக இருந்தது , கறியை பச்சையாக உண்பதிலிருந்து சுட்டு சாப்பிட ஆரம்பித்தான் . குறுக்க இந்த கௌஷிக் வந்தா என்பது போல் மழை வந்து தீயை அனைத்து . வேற எப்படி தீயை எப்படி உருவாக்கலாம் என்று தீயாய் யோசித்தான் . காய்ந்த மரங்கள் உரசிக்கொள்வதில் தீப்பொறி உருவாகியது , இவன் அதை முயற்சி செய்தான் , வெறும் காத்துதான் வந்தது . அப்புறம் அவன் சிந்தித்ததுதான் கல் அதன் பெயர் சிக்கி - முக்கி கல்.

 

மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு நெருப்பு , ஒருவேளை நாம் தீயை கண்டுபிடிக்காமல் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்கலாம் . பல ஆபத்தான மிருகங்களிடம் காத்து நின்றது . நெருப்பை வைத்து மிருகங்களை துரத்தலாம் ஆனால் வேட்டையாட , தனியாக சென்றால் நிச்சியமாக திரும்ப வர முடியாது , கூட்டத்தோடு சென்றாலும் அதே நிலைமைதான் .என்ன செய்யலாம்?  கூரான கல்லை கொண்டு எறியலாமா , சின்ன விலங்குகளுக்கு சரி ஆனால் , மான் , எருமை, யானை போன்ற விலங்குகளுக்கு  . கூரான எலும்புகளை வைத்து தாக்கினான் அடுத்து கம்புகளை பயன்படுத்தினான் , அந்த கம்புகளில் கூரான கற்களை வைத்து தாக்கினான் . அன்றிலிருந்து கற்காலம் தொடங்கியது .

 

ஹோமோசேபியன்ஸ் குடும்பம்

 

அடுத்து நடக்க ஆரம்பித்த மனிதன் என்ன ஆனான் ? கூட்டம் கூட்டமாக இடப்பெயர்வு நடக்கவில்லை இங்கொன்றும் அங்கொன்றும்மாக நடந்தது, லட்சக்கணக்கான வருசமாக நடந்தான் . அமெரிக்கா , கனடா , இந்தப்பக்கம் ஜப்பான் ,ஆஸ்திரேலிய , டாஸ்மேனியா உலகில் ஒரு இண்டு இடுக்கு விடாமல் குடியேறினான் . இடையில் கடல் வராத என்ற கேள்வி எழலாம் , அப்பொழுது இயற்கை ஒரு வழி செய்திருந்தது அதன் பெயர் பனியுகம் . இதனால் மனிதனால் அணைத்து இடங்களுக்கும் நடந்தே செல்ல முடிந்தது . ஆனால் ஐரோப்பா போனவர்களின் நிலைமை வேறு ஏன்னா அங்கே இவனுக்கு முன்னாடி ஒருத்தன் இருந்தான் நல்ல உயரமா நல்ல உடம்போட சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் , அவன் ஓங்கி அடிச்ச உண்மையிலே ஒன்றடன் வெய்ட்டுதான் அவன் பெயர் நியாண்டர்தால்.

 

இன்றைய ஐரோப்பா பகுதிகளில் மற்றும் ஆசியாவில்  பரவலாக அந்த இனம் காணப்பட்டது. குறிப்பாக நெதர்லாந்து , நியாண்டர்தால் பெயர் மருவிதான் நெதர்லாந்து ஆனது . அந்த இனம் அழிந்து போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன அதில் இந்த சண்டையும் ஓன்று . நம்மால் அவர்களை நேரடியாக தாக்கி அழிக்க முடியாது . ஏன்எனில் அவர்கள் சிறந்த வேட்டையாடிகளாக இருந்தனர் . அவர்களிடமும் ஆயுதம் இருந்தது அவர்களும் போர் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள் , நமக்கு அது கொஞ்சம் கம்மிதான் . இன்னொரு விஷயம் அவர்களுக்கும் நெருப்பை கையால தெரிந்திருந்தது . இரண்டு இனத்திற்கும் சண்டை நடந்தது உண்மை , அதுவும் இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும்மாக ஆயிரக்கணக்கான வருசமாக அந்த சண்டை  நடந்தது .

 


நியாண்டதால் வீரர்களிடம் சிறந்த போர் ஆயுதங்கள், உத்திகள் நம்மை விட சிறந்ததாக இருந்தது . பின் எப்படி அந்த இனம் அழிந்தது என்று கேள்வி எழலாம் . முதல் காரணம் காலநிலை கடுங்குளிரில் தாக்கு பிடிப்பது அவர்களுக்கு சிரமமாக இருந்தது . அடுத்து ஒரு நியாண்டர்தால் குழு என்று எடுத்துக்கொண்டால் 10 முதல் 15 பேர்வரைதான் இருப்பார்கள். அதுவே சேப்பியன்ஸ் குழுவில் குறைந்தது 150 பேர் வரை இருப்பார்கள். 

 


அந்த குழுவில் ஆண்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் . அதிக பட்சமாக ஐந்து ஆண்கள் வரை இருக்கலாம் . ஆயுதங்கள் என்று பார்த்தல் கூர் ஆயுதங்கள் அவர்களிடம் குறைவுதான் ஆனால் பீமசேனன் கையில் இருக்கும் கதாயுதத்தை போன்று தண்டம் என்ற ஆயுதத்தை எப்பொழுதுமே அவர்கள் கையில் வைத்திருப்பார்கள் . நம் கையில் வைத்திருந்த ஆயுதத்தை வைத்து போர் செய்தோம் . என்னதான் அதிக வீரர்கள் சேப்பியன்ஸ் குழுவில் இருந்தாலும் , சுலபமாக  ஒரு நியாண்டர்தால் குழுவை ஒரே நாளில் அழித்து விட முடியாது சண்டை பல வாரங்களுக்கு நீடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழுவின் ஆண்களை பலவீனப்படுத்தி அவர்களை அழிப்பார்கள்  இப்படி மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்த சண்டை இருபத்தி நாலாயிரம் வருடங்களுக்கு முன் நின்றது நியாண்டர்தால் இனம் முற்றிலுமாக அழிந்துபோனது . சில ஆராய்ச்சியாளர்கள் இரு இனங்களுக்கும் கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சொன்னாலும் அது மிக குறைவுதான் .


G. Muthuraman

Founder Of Smart Vivasayi

Email - imperialhorticulturetips@gmail.com








Post a Comment

0 Comments

Comments

Ad Code