Skip to main content

Posts

Showing posts from January, 2025

விதையும் விளையும் வரலாறும் - 1

விதையும் விளையும் வரலாறும்   தக்காளி                                                                          வரலாற்றில் தக்காளி     நம்ம ஊர்ல தங்கம் விலை ஏறினா கூட கவலைப்பட மாட்டோம் ஆனா தக்காளி விலை ஏறினா போதும் காச் மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுருவோம் ,   கிலோ 110 ரூபாயை தாண்டினா உட்காந்து கவலைப்படுவோம் . ஒருவாரத்திற்கு மேல பிரிட்ஜ்லயும் வைக்க முடியாது நல்லா ருசியா சாப்பிட்டு வேற பழகிட்டோமா , நம்ம வீட்டுல தக்காளி இல்லாமலும்   சமைக்கவே முடியாது . வேற வழியில்லாம கிலோ நூத்திப்பத்துன்னு வாங்கலாம் என்று போனால்   நல்ல தக்காளியெல்லாம் நமக்கு முன்னாடி யாரவது எடுத்துட்டு போயிருப்பாங்க   வேற வழி இல்லாம அதுலயும் வடிகட்டி தக்காளியை வாங்கிட்டு வருவோம் . சரி தக்காளி நம்ம ஆதிகாலத்து உணவா , இல்ல இந்தியாவிற்கு இடையில் வந்ததுதான் . எப்ப வந்தது எப்படி வந்தது என்று ...

உழவோன் -2

                                2. வேட்டையாடிகள் அப்பொழுது வாழ்ந்த மனிதனுக்கு உணவு என்பது பெரும்பாலும் வேட்டையாடி உண்பதுதான் அல்லது வேறு ஏதாவது விலங்கு வேட்டையாடி சாப்பிட்ட மிச்சத்தை   எடுத்து வந்து சாப்பிடுவது . அவ்வப்பொழுது அந்த பகுதியில் கிடைக்கும் பழங்கள் . நாடோடியாக   நடக்க ஆரம்பித்த பொழுது எல்லா நேரமும் உணவு கிடைப்பதில்லை . அப்பொழுது மாற்றுவழியாக பழங்கள் , காய்கறிகளை உன்ன ஆரம்பித்தான் . ஆனால் அதிலும் சிக்கல் ஓன்று இருந்தது . எது நல்ல காய்கறி , எது விஷமற்ற பழம் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது . இதை கண்டுபிடிக்க முடியாமல் இறந்த மனிதர்கள் ஏராளம் இன்றைக்கு நீங்கள் கத்தரிக்காய் சாம்பார் சாப்பிட்டு நீங்கள் சாகவில்லையென்றால் அதற்கான உயிர் இழப்பு என்பது லச்சக்கணக்கில் என்பதை மறந்துவிடாதீர்கள் . எப்படி நல்ல உணவு என்பது கண்டுபிடிப்பது . உட்காந்து யோசித்தான் இயற்கை உதவி செய்தது . பறவைகளை   பார்த்தான் அது எந...

உழவோன் -1

                                   மனிதன் ஒரு ஆரம்பம் - 1   விவசாயம் என்பது ஒரு படி நிலையில் உருவாகவில்லை மனித இனம் தோன்றி அந்த இனம் நன்றாக உருவெடுத்து வளர்ந்து வேட்டையாடி ஒருநிலையில் தங்கி பின்பு விவசாயம் உருவெடுத்து இன்று முதல் நம்மை உருவாக்கி கொண்டிருக்கிறது . நான்   முதலில் மனிதன் எப்படி தோன்றினான் இந்த விவசாயம் எப்படி தோன்றி இருக்கலாம். அது எப்படி நம்முடன் பரினாமித்து வளர்ந்தது என்று பார்க்கலாம்   கிட்டத்தட்ட ஒரு மூணு மில்லியன்   வருஷத்துக்கு முன்னாடி இன்றைய ஆபிரிக்க காடுகளில் ஒரு புத்திசாலியான குரங்கினம் எழுந்து நிமிர்ந்து   நடக்க ஆரம்பித்தது. அது என்ன புத்திசாலியான குரங்கினம் ? ஏன்னா அந்த   ஒரு குரங்கினம் மற்றும் நிமிர்ந்து நடக்கல நியாண்டர்தால் போன்ற நான்கு வகையான குரங்கு இனங்கள் நடந்தது . இயற்கை ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒரு தனி சக்தியை கொடுத்தது . நியாண்டர்தால் மனித இனம் ரொம்ப பலசாலியாக இருந்தனர் . அப்ப நம்ம ஆரம்பத்தில் சொன்னேனே ஒரு புத்திசாலி அது நாமத...