Skip to main content

Posts

Showing posts from October, 2024

நெல் வயல்களில் பாசி படர்வதை தவிர்க்க

1. உப்புத்தன்மை உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.  2. ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அல்லது ஒரு லிட்டர் வேம் 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசனத்தின் வழியாக கொடுக்கலாம்.  3. ஒவ்வொரு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு ஒரு முறை இ எம் கரைசல் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர்  பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம். 4. ஜிங்க் மொபைலைசிங் பாக்டீரியா ஒரு லிட்டரை 200 லிட்டருடன் கலந்து கொடுக்கலாம்.  5. மாலை வேளையில் மட்டுமே நீர்ப்பாசனம் செய்யலாம். இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் கொடுப்பது உப்பு பெருக்கத்திற்கும் அதன் மூலம் பாசிப் பெருகுவதற்கும் வாய்ப்பாக அமையும்.  6. நிலத்தின் ஈரம் குறைவதை உன்னிப்பாக கவனித்து மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தை காய விடக்கூடாது.  7. 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது 200 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் திரவத்தை தெளிப்பாக வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.