Skip to main content

Posts

Showing posts from September, 2024

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள்

1. 1 லிட்டர் வேப்ப எண்ணெயில் 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணத்தை 3 நாட்கள் ஈரம் காயாமல் ஈரச்சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து ஏக்கருக்கு தெளிக்க சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். 2. 10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல் சேர்த்து அதிகாலை வேளையில் தூவினால் சாறு உறிஞ்சும் பூச்சி சாம்பல் மற்றும் துருநோயைக் கட்டுப்படுத்தலாம். 3. வெட்டி வேர் புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச் சுற்றி நட்டால் மண் அரிப்பைத் தடுக்கலாம். 4. கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால் கிணற்று நீர் ஆவியாவதைக் குறைக்கலாம். 5. கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யலாம். 6. எருக்கு இலை மற்றும் வேப்பம்புண்ணாக்கை மண் கலத்தில் இட்டு மூழ்குமாறு நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்த வாடையால் அந்திப்பூச்சிகள் கவரப்படும். 7. ஊமத்தை காயோடு, எருக்கு இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊற வைத்து வடிகட்டி தெளித்தால் அனைத்து வகைப்பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். 8. பிரண்டையை   வயலைச்சுற்றி நட்டால் கரைய...