Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

ஆற்காடு கிச்சிலி சம்பா இடுபொருள் பற்றிய விவரங்கள்.

பயிரின் மொத்த நிலப்பரப்பு : ஒன்னரை ஏக்கர்.




நாற்றின் வயது :18 நாள்.
ஜீவாமிர்தம், மீன்அமிலம், கடலைபுண்ணாக்கு, கலந்த பாசனம் - 9

தெளிப்புகள் :
1.சூடோமோனஸ் (38 வது நாள்)
2.மீன்அமிலம் (53 வது நாள்)
3. அக்னி அஸ்திரம் (85 து நாள்)


ஊட்டஉரம் அளித்தது மொத்தத்தில் 1785  கிலோ.
1. அடியுரம்
2.68 வது நாள்
3.109 வது நாள்
# கைக்களை -33 நாள்
கோனோவீடர் -1 (58 வது நாள்) 


குறைகள் :


ஆள்பற்றாக்குறையால் நடவு மற்றும் களையெடுப்புகள் தாமதமாகி போனது. வழக்கமாக 13 நாள் நாற்றை நடவு செய்வோம்.
கோனோவீடரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதால் கிளைப்புகளின் எண்ணிக்கை 20 -25 என்ற அளவிலேயே இருந்தது.
மூன்று முறை போடும்போது 40- 50 கிளைப்புகள் இருக்கும்.
பயிரில் எந்த பிரச்சனைகளும் இல்லை, நெல்மணிகள் நன்கு திரட்சியாய் உள்ளது.


நோய், பூச்சி தாக்குதல், எலி வெட்டு அறவே இல்லை.
பூச்சி கட்டுபாட்டிற்கு விளக்குபொறி, இனக்கவர்ச்சி என எதையும் எங்கள் பண்ணையில் வைப்பதில்லை, காரணம் உயிர்பன்மயசூழல் மற்றும் உயிரினங்களின் உணவு சங்கிலி சிறப்பாய் எங்கள் பண்ணையில் அமைந்திருப்பதாக  உணர்கிறேன்.
பூச்சிகளை கட்டுபடுத்த பொறிவண்டுகள் தட்டான்கள்,சிலந்திகள்,நாவாய் பூச்சிகள், குளவிகள் என இயற்கை காவலர்கள் பண்ணையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
பாம்புகளும், கீரிகளும், ஆந்தைகளும் உயிர்சங்கிலியின் தொடரை சிறப்பாக கவனித்து கொள்கிறார்கள

குறுகிய வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை 
வயது : 110 லிருந்து 120 நாள் வரை.
நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(13 லிருந்து 18 நாள்)  நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம்  தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .
ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம்.


ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம்.


நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஊட்டஉரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.


நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.


பயிரின் மொத்த வளர்ச்சி காலத்தில் 
# 10 முறை கடலைபுண்ணாக்கு கலந்த ஜீவாமிர்த பாசனம்.
200 லிட்டருக்கு 2 லிட்டர் நன்கு புளித்த கடலைபுண்ணாக்கு (1 கிலோ கடலைபுண்ணாக்குடன் 2 லிட்டர் தண்ணீர் விட்டு  3 நாட்கள் புளிக்க வைத்து பயன்படுத்தவும்)    கலந்து விடுவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் மிக சிறப்பாக இருக்கும்.


# 8 இலைவழி தெளிப்புகள் .


8 ல் நான்கு பயிர்வளர்ச்சி ஊக்கியும், நான்கு பயிர்பாதுகாப்பும் இருத்தல் நலம்.


# 4 முறை ஊட்டஉரம் பயன்பாடு.


ஒன்று அடியுரமாகவும், இரண்டு மற்றும் மூன்றாவது உரம் வளர்பருவத்திலும், நான்காவது தொண்டை உருட்டும் (கதிர்கள் உருவாகும் தருணம்) பருவத்திலும் இட வேண்டும்.


ஊட்டஉரம் இடும்போது நிலத்தில் தண்ணீர் நிறுத்துதல் அவசியம். பாசனத்தில் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் நிறுத்திய பின் ஊட்டஉரம் இட வேண்டும்.


வளர்பருவத்தில் தரப்படும் ஊட்டஉரத்திற்கு பின்னர் கோனோவீடர் பயன்பாடு மற்றும் இலைவழி தெளிப்பு போன்றவற்றை முறையே மேற் கொள்வதின் மூலம், வேருக்கும், இலைக்கும் ஒரே சமயத்தில் ஊட்டம் கிடைப்பதால் வளர்ச்சி தொய்வில்லாமல் சீராய் இருக்கும்.


# 3 முறை கோனோவீடர் பயன்பாடு.


ஒவ்வொரு கோனோவீடர் பயன்பாட்டிற்கு முன் தினம் பாசனநீரில் கடலைபுண்ணாக்கு கலந்த ஜீவாமிர்தம் மற்றும் இஎம், மீன்அமிலம், பஞ்சகவியம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளில் ஏதேனும் ஒன்றை கலந்து நிலத்தில் தண்ணீரை ஒரு நாள் நிறுத்திய பின்னர்,  மறுநாள் கோனோவீடர் போடவும்.


இவ்வாறு இடுபொருள் கலந்து தண்ணீரை நிறுத்துவதால் நிலத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் பன்மடங்கு பெருகுவதோடு, நிலத்தின் வெடிப்புகளால் உருவான மண்ணின் இறுக்கம் தளர்ந்து, மண்ணின் தன்மை  இலகுவாக இருக்கும்,இதனால் கோனோவீடரை பயன்படுத்தும்போது,

சேறு நன்கு கலங்கி களைகள் மடியும்.


# 1 கைகளை எடுக்க வேண்டும்.

நடவிலிருந்து 3 ம் நாள் உயிர்தண்ணீர் விட வேண்டும், பாசன நீரில் ஜீவாமிர்தம் ,
 கடலைபுண்ணாக்கு, இஎம் கலந்து விடவும்.(2)
13வது நாள் -- ஜீவாமிர்தம், கடலைபுண்ணாக்கு, மீன்அமிலம்  பாசன

Post a Comment

0 Comments

Ad Code