Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு சத்துகளின் பங்கு

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு



பயிர்களின் மகசூலை தீர்மானிப்பதில் சுண்ணாம்பு சத்தின் (CALCIUM) பங்கு முக்கியமாக உள்ளது. பயிருக்கு பேரூட்ட சத்துகளின் தேவைக்கு (NPK) அடுத்தப்படியாக இரண்டாம் நிலை ஊட்டசத்துகளில் (CMS) சுண்ணாம்பு சத்து உள்ளது. பயிருக்கு சுண்ணாம்பு அவசியம் அதே நேரத்தில் அளவாக இருக்க வேண்டும். வெற்றிலைக்கு சுண்ணாம்பு எப்படியோ அதை போலத் தான் பயிருக்கு. மண்ணில் சுண்ணம்பு அதிகமானால், மண் புரை யோடி பயிர்களின் வளர்ச்சி தடைபடும்


கால்சியம் கார்பனேட் எனப்படும் இந்த சுண்ணாம்பு சத்து மண்ணில் சரியான அளவிற்கு இருக்கிறதா? என்பதை கண்டறிய ஒரு எளிய தோதனை உள்ளது.


அது என்ன என்பதை பார்ப்போம்?


நிலத்து மண்ணை கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு 10% ஹைட்ரோ குளோரிக் அமில (HCL) த்தை அதில் ஊற்ற வேண்டும். மண் பொங்கி கொண்டு வந்தால் மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருக்கிறது எனவும் சுமாராக நுரைத்தால் நடுத்தர நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சுண்ணாம்பு மண்ணின் தன்மை?

இந்த மண் பெரும்பாலான வறண்ட பகுதியிலும், கருப்பு கலந்த மண்ணில் அதுவும் எங்கு எங்கு சிமெண்ட் ஆலை உள்ளதோ அப்பகுதியில் 30 கிமி சுற்றளவு உள்ள பகுதியில் காணப்படும்.இது டோலமைட், ஜிப்சம், சூப்பர் பாஸ்பேட், ராக் பாஸ்பேட் போன்றவை சுண்ணாம்பு சத்தின் மூலகங்களாக உள்ளது. இதனை (CAL- CAREOUS SOIL) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.


 பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பின் பங்கு?


பயிர் நன்றாக வளர்ச்சியை அடையவும், செல் சுவற்றின் அமைப்புகள் உருவாகிட சுண்ணாம்பு சத்து அவசியம். உயிரணுக்களின் வேறுபாட்டை செயல்பாடுகளை ஒழங்குப் படுத்தவும் பயிரின் செயல்பாடுகளை கடத்தும் காரணியாகவும் உள்ளதால் இது சத்துகளின் ராஜா' என்று அழைக்கப்படுகின்றன. சுண்ணாம்பு சத்து சரியான அளவில் இருந்தால் மண் பொல பொலப்பாக இருக்கும்.


பற்றாக்குறை அறிகுறிகள்?


இளம் இலைகள் அளவில் வழக்கத்திற்கும் மாறாக காட்சியளிக்கும். இலையின் விளிம்புகள் காய்ந்து நீண்டு கூர்மையாக காணப்படும். அதாவது இலைபரப்பு உருமாறிக் காணப்படும். இது புதியதாக நட்ட திசு வளர்ப்பு கன்றுகளில் காணப்படும். வாழைக்குலையின் தரம் குறைந்து தக்காளி போன்ற பழங்களில் தோலில் வெடிப்புகள் தோற்றுவிக்கும்.


பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது எப்படி?


சுண்ணாம்பு தன்மை அதிகமாக இருக்கும் நிலங்களில், காரத்தன்மை உண்டாகாத உரங்களை இட வேண்டும். இதற்கு தழைசத்து அதிகமாக உள்ள உரங்களே இடலாம். அதிகமாக தொழு உரம் உயிர் உரங்கள் கலந்து இடலாம். நீர் நீக்க பட்ட சுண்ணாமாபினை 50 கிராம் / ஒரு மரத்திற்கு இடலாம்.

Post a Comment

0 Comments

Ad Code