பயிரின் மொத்த நிலப்பரப்பு : ஒன்னரை ஏக்கர். நாற்றின் வயது :18 நாள். ஜீவாமிர்தம், மீன்அமிலம், கடலைபுண்ணாக்கு, கலந்த பாசனம் - 9 தெளிப்புகள் : 1.சூடோமோனஸ் (38 வது நாள்) 2.மீன்அமிலம் (53 வது நாள்) 3. அக்னி அஸ்திரம் (85 து நாள்) ஊட்டஉரம் அளித்தது மொத்தத்தில் 1785 கிலோ. 1. அடியுரம் 2.68 வது நாள் 3.109 வது நாள் # கைக்களை -33 நாள் கோனோவீடர் -1 (58 வது நாள்) குறைகள் : ஆள்பற்றாக்குறையால் நடவு மற்றும் களையெடுப்புகள் தாமதமாகி போனது. வழக்கமாக 13 நாள் நாற்றை நடவு செய்வோம். கோனோவீடரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதால் கிளைப்புகளின் எண்ணிக்கை 20 -25 என்ற அளவிலேயே இருந்தது. மூன்று முறை போடும்போது 40- 50 கிளைப்புகள் இருக்கும். பயிரில் எந்த பிரச்சனைகளும் இல்லை, நெல்மணிகள் நன்கு திரட்சியாய் உள்ளது. நோய், பூச்சி தாக்குதல், எலி வெட்டு அறவே இல்லை. பூச்சி கட்டுபாட்டிற்கு விளக்குபொறி, இனக்கவர்ச்சி என எதையும் எங்கள் பண்ணையில் வைப்பதில்லை, காரணம் உயிர்பன்மயசூழல் மற்றும் உயிரினங்களின் உணவு சங்கிலி சிறப்பாய் எங்கள் பண்ணையில் அமைந்திருப்பதாக உணர்கிறேன். பூச்சிகளை கட்டுபடுத்த பொறிவண்டுகள்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்