Ad Code

மாடித்தோட்டம் சில டிப்ஸ்

மாடித்தோட்டம் பராமரிப்பு குறிப்புகள் 




நாம் எப்பொழுதும் மாடித்தோட்டத்துக்குள் நுழைஞ்சா செடிகளே நம்மளோடு பேசும். செடிக்கு தண்ணி பற்றாக்குறையா, எந்தச் செடிக்கு என்ன நோய் தாக்கியிருக்கு, ஏன் வளர்ச்சி குறைவாக இருக்குங்கிற விஷயத்த சொல்லிடும். செடிக்குத் தேவையானதைச் செய்தாலே செடி வளர்ந்துவிடும். காலை 8 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு மேலும் தண்ணி விடணும். கோடைக்காலத்தில தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் ஆடிப்பட்டத்தில் மட்டும் மாடித்தோட்டம் அமைச்சு பிப்ரவரி வரை வெச்சு கோடைக் காலங்கள்ல வளர்ப்பதை தவிர்த்துவிடலாம். திரும்பவும் ஆடிப்பட்டத்தில் அமைத்துக் கொள்ளலாம்.


மாடித்தோட்டத்தில் பூச்சி நோய்  பராமரிப்பு 



“இலையின் நிறத்தை வைத்தே அதில் என்ன நோய் தாக்கியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். செடியில் இலைப்பேன் தாக்குதல் இருந்தால் பூந்திக் கொட்டையைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளித்தாலே போதும் கட்டுப்படும். பூஞ்சணத்தாக்குதல், பூச்சிகளுக்கு வராமல் தடுப்பதற்கும் 1 லிட்டர் தண்ணீருக்கு, 3 மி.லி வேப்ப எண்ணெய் என்கிற விகிதத்தில் கலந்து தெளித்தால் போதும். செடிகளின் அளவைப் பொறுத்து தயாரித்துக்கொள்ள லாம். வைரஸ் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், 1 லிட்டர் தண்ணீரில், 30 கிராம் மஞ்சள்தூளைக் கரைத்து 4 பல் பூண்டைக் கலந்து வடிகட்டி தெளிக்கலாம். அதேபோல, மீன் அமிலத்தைத் தெளிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சி களைத் தக்கவைத்து, தீமை செய்யும் பூச்சிகளை விரட்ட முடியும்.



செடிகளில் நோய்களின் தாக்கம் இருந்தால் மட்டுமே பூச்சிவிரட்டிகளைக் கொடுங்கள். சில நேரங்களில் செடிகளே தனக்கு வரும் நோயை சரிப்படுத்திக்கொள்ளும். எனவே, அதற்கேற்றவாறு செயல்படுங்கள். அதேபோல மாவுப் பூச்சி பெரும் சேதத்தை விளைவிக்கும். இது அதிகமாகத் தாக்கியிருந்தால் அந்தக் கிளையைப் பிடுங்கி அப்புறப்படுத்திவிடலாம். இல்லையென்றால் முதற்கட்டமாக வேப்ப எண்ணெய் கரைசல் தெளியுங்கள். கட்டுப்படவில்லையென்றால் 3ஜி கரைசல் என்றிழைக்கப்படும் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டை அரைத்து வடிகட்டி, அந்தக் கரைசலை 1 லிட்டருக்கு 50 மி.லி என்ற கணக்கில் கலந்து தெளித்தால் பூச்சித்தாக்கு தலை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். பூச்சித் தாக்குதலை அறிய வேண்டு மென்றால் இலையின் அடிப்புறத்தைப் பாருங்கள். மாடித்தோட்டத்தில் பட்டாம் பூச்சிகள், தேனீக்களைப் பார்த்தால் மகிழ்ச்சி யடையுங்கள். ஏனென்றால் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக் கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.



மகரந்த சேர்க்கை 



செடியை நடுவதற்கு 1:1:1 என்ற விகிதத்தில் மண், தேங்காய் நார்க்கழிவு, வேப்பம் பிண்ணாக்கை கலந்து செடிகளை நடலாம். வெயில் காலத்தில் தண்ணீர் சரிவரக் கொடுக்கவில்லையென்றால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. அதனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் கொடுத்து செடிகளை வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல தேவையில்லாமல் செடிகளுக்கு உரங்களைக் கொடுக்கக் கூடாது. மாசத்துக்கு ஒருமுறை கொடுத்தால் போது மானது”

Post a Comment

0 Comments