Skip to main content

Posts

Showing posts from April, 2024

மாடித்தோட்டம் சில டிப்ஸ்

மாடித்தோட்டம் பராமரிப்பு குறிப்புகள்  நாம் எப்பொழுதும் மாடித்தோட்டத்துக்குள் நுழைஞ்சா செடிகளே நம்மளோடு பேசும். செடிக்கு தண்ணி பற்றாக்குறையா, எந்தச் செடிக்கு என்ன நோய் தாக்கியிருக்கு, ஏன் வளர்ச்சி குறைவாக இருக்குங்கிற விஷயத்த சொல்லிடும். செடிக்குத் தேவையானதைச் செய்தாலே செடி வளர்ந்துவிடும். காலை 8 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு மேலும் தண்ணி விடணும். கோடைக்காலத்தில தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் ஆடிப்பட்டத்தில் மட்டும் மாடித்தோட்டம் அமைச்சு பிப்ரவரி வரை வெச்சு கோடைக் காலங்கள்ல வளர்ப்பதை தவிர்த்துவிடலாம். திரும்பவும் ஆடிப்பட்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். மாடித்தோட்டத்தில் பூச்சி நோய்  பராமரிப்பு  “இலையின் நிறத்தை வைத்தே அதில் என்ன நோய் தாக்கியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். செடியில் இலைப்பேன் தாக்குதல் இருந்தால் பூந்திக் கொட்டையைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளித்தாலே போதும் கட்டுப்படும். பூஞ்சணத்தாக்குதல், பூச்சிகளுக்கு வராமல் தடுப்பதற்கும் 1 லிட்டர் தண்ணீருக்கு, 3 மி.லி வேப்ப எண்ணெய் என்கிற விகிதத்தில் கலந்து தெளித்தால் போதும். செடிகளின் அளவைப் பொறுத...