நீங்கள் போய் ஒரு விவசாயிடம் உங்களுடைய விவசாயம் உங்களுக்கு லாபகரமாக இருக்கிறதா என்று கேட்டால் நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு செல்வார் ஆனால் உண்மை நிலை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் . பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தில் கணக்கு பார்ப்பதில்லை ஏன் என்றால் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது விவசாயிக்கு தெரியும் . விவசாயம் கூட ஒரு ஷேர் மார்க்கெட் மாதிரிதான் கொஞ்சம் கொஞ்சம் ஆக போட்டு பெரிய லாபம் எடுக்கலாம் . அதற்கு சரியான நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும் . இல்லையென்றால் பாதாளத்தில் விழவேண்டியதுதான் . நீங்கள் 5 சென்ட் நிலம் வைத்திருந்தாலும் 50 ஏக்கர் வைத்திருந்தாலும் சரியான நுணுக்கம் தெரிந்திருந்தால் விவசாயமும் உங்களுக்கு பணம் கொடுக்கும் .
விவசாயம் மட்டுமல்ல நீங்கள் எந்த ஒரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் முக்கியமாக மூன்று விஷயங்களை கவனிக்கவேண்டும் முதலாவது மூலதனம் எந்த ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் பணம் தேவை என்பது மிக முக்கியம் அது எந்த இடத்தில அதிகம் தேவை எந்த இடத்தில் குறைவாக தேவை என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . உங்களுடைய நிலத்தில் குறைந்தது மூன்று முதல் ஐந்து முறை ஒரு டிராக்டர் தேவை என்றால் நீங்கள் சொந்தமாக ஒரு டிராக்டர் வாங்கிக்கொள்ளலாம் மற்ற நிலங்களுக்கும் டிராக்டர் ஓட்டி சம்பாதித்து கொள்ளலாம் . எனக்கு ஐந்து மாதத்திற்கு ஒருமுறைதான் டிராக்டர் தேவை என்றால் வாங்குவது வீண் செலவு. .இரண்டாவது கடின உழைப்பு மூன்றாவது ஸ்மார்ட் ஒர்க் உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால் கொஞ்சம் புத்திசாலித்தனமான வேலை என்று சொல்லலாம்
இப்படி வீண் செலவுகளை குறைத்தாலே உங்களுக்கு லாபத்தின் அளவு கூடும் . அடுத்ததாக கடின உழைப்பு எந்த ஒரு உழைப்பும் ஜீராவில் இருந்துதான் ஆரம்பிக்கும் . ஆனால் ஒன்றை நீங்கள் மறந்துவிடக்கூடாது மறுபடியும் எக்காரணத்தை கொண்டும் ஜிரோவிற்கு வரக்கூடாது . அதற்க்கு உங்களுக்கு சரியான திட்டமிடல் வேண்டும் . ஆனால் இந்த திட்டமிடலுக்கு முதல் முக்கிய எதிரியாய் உங்களுக்கு நிற்பது காலநிலை . இதற்க்கு கீழ்தான் வரட்சி , கடும் மழை , பூச்சி நோய் தாக்குதல் எல்லாம் வரும் . எனவே சரியான திட்டமிடல் இல்லையெனில் ஜிரோவிற்கு போகவேண்டியதுதான் . இதை சமாளிக்க ஒரேவகை பயிர் செய்வதை தவிர்க்கலாம் அல்லது எந்த சூழ்நிலையிலும் தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்கள் உள்ளன . நாட்டு வகை பயிர்களை பயிரிடலாம் . ஒருங்கிணைந்த பண்ணையம் செய்யலாம் , முக்கியமாக எல்லா பயிர்களுக்கும் காப்பீடு செய்யலாம் .
மூன்றாவதாக ஸ்மார்ட் ஒர்க் , இதுதான் உங்களுடைய லாபத்தின் அளவு என்ன என்பதை தீர்மானிக்க போகிறது . இந்த வேலை நீங்கள் என்ன பயிர் செய்யபோகிறீர்கள் என்பதிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. டிமாண்ட் - இது ஒரு சின்ன வார்த்தைதான் இதுதான் ஒரு பொருளோட விலையை கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் விற்க வைக்கும் , இரண்டு ஜீரோ கட் பண்ணி 10 ரூபாய்க்கும் விற்க வைக்கும் ஒரு உதாரணமாக பார்த்தால் கடந்தகாலங்களில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கிலோ நூறு ரூபாய்க்கு மேல் ஏறியிருக்கும் . தக்காளி விற்றே வட நாட்டில் கோடீஸ்வரர் ஆனா வரலாறு உண்டு அது எப்பொழுது ஏறும் என்பதை கணித்து பயிரிட்டால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் . பூக்களோட விலையும் வருடத்திற்கு சில நாட்கள் ஏறும் . குறிப்பாக அதிக திருமண நாட்கள் உள்ள மாதங்கள் , திருமண நாட்களும் திருவிழா நாட்களும் உள்ள மாதங்களில் பூக்களின் விலை அதிகமாக வாய்ப்புண்டு .
அடுத்து இந்த ஸ்மார்ட் ஒர்க்ல நீங்க கவனிக்க வேண்டியது ஒரு வார்த்தை ஒன் ஹேண்ட் சேல் . உங்களுக்கு புரியும்படியா சொல்ல வேண்டுமென்றால் உற்பத்தியாளரும் நீங்களே விற்பனையாளரும் நீங்களே. இது உங்களுக்கு பெருமளவு செலவுகளை குறைத்து லாபத்தை கொடுக்கும் . நீங்களே விற்பனையாளராக மாறும்போது சில சிக்கல்கள் இருக்கும் சரியான திட்டமிடல் இருந்தால் போதும் சமாளித்துவிடலாம், இந்த விற்பனை பற்றி பின்னால் விவரமாக பார்க்கலாம். மதுரையில ஒரு சின்ன காய்கறி கடை இருக்கு அவர்களிடம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கு . அந்த காய்கறி கடைக்கு தேவையான 70 சதவீத காய்கறிகளை , சொந்த நிலத்திலேயே பயிரிட்டு விற்பனை செய்கின்றனர் , 30 சதவீத காய்கறிகள் வெளியிலிருந்து வாங்கப்படுகிறது . அவர்களுடைய காய்கறி கடை அருகிலேயே ஒரு சாப்பாட்டு கடை மாலை முழுவதும் இயங்குவது போல் நடத்தி வருகின்றனர் . விற்காமல் மீதமிருக்கும் காய்கறிகளை பயன்படுத்திக்கின்றனர் . இதனால் காய்கறி கெட்டு போய் வெளியில் கொட்டாமல் தவிர்க்கப்படுகிறது . அவர்களுக்கு இரட்டிப்பு வருமானமும் கிடைக்கிறது . வாடிக்கையாளர்களுக்கு தினமும் புது காய்கறிகள் கிடைக்கிறது . இதுதான் ஒன் ஹேண்ட் சேல் .
By
0 Comments
Smart vivasayi