விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிகள் இயற்கை எதிரிகள் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, இந்த நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் அறிந்து, அவற்றைப்பாதுகாப்பது அவசியம். தீமை செய்யும் பூச்சிகளை தாக்கி அழிக்கும் இயற்கை எதிரிப் பூச்சிகள் சிலவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்
இரை விழுங்கி அல்லது ஊன் விழுங்கி
காட்டில் புலி மானை வேட்டையாடி சாப்பிடுவது போல சில நன்மை செய்யும் பூச்சிகள் நம் விளை நிலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடி தன் உணவாக எடுத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட நன்மை செய்யும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது ஊன் உண்ணி என்று அழைக்கப்படுகிறது. பின்வரும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது ஊன் விழுங்கிகளுக்கான சில உதாரணங்களாகும்.
கிரைசோபா:
இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாளும், பெண் பூச்சிகள் 35 நாளும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைவரை இடும். இது குஞ்சுப் பருவமாக இருக்கும்போதே தீமை செய்யும் பூச்சிகளைத் தாக்கத் தொடங்கும். இவை பயிர்களைத் தாக்கும் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சிகள், முட்டைகள், குஞ்சுகளைத் தாக்கி அழிக்கும். தன் வாழ்நாளில் 400 முதல் 500 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும். கிரைசோபா தாய்ப்பூச்சி பச்சை நிறத்தில் கண்ணாடி போன்ற இறக்கை உடையது. இதன் குஞ்சுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
நீள்கொம்பு வெட்டுக்கிளி:
இது உடலைக் காட்டிலும் 2 அல்லது 3 மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பைக்கொண்டிருக்கும். பச்சை நிறமுடையது. மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது. இவை பூச்சிகளின் முட்டைகள், தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இதன் வாழ்நாள் 110 நாள். கதிர் நாவாய்ப்பூச்சி மற்றும் குருத்துப்பூச்சியின்
முட்டையினை சாப்பிடும் .
நீர்த்தாண்டி பூச்சி
தத்துப்பூச்சியின் குஞ்சுகளை வேட்டையாடும். குளவிகள், குருத்துப்புழு மற்றும் இலைச்சுரட்டுப்புழுவின் முட்டைகளை சாப்பிடும்.
தரை வண்டு:
இவை வண்டினத்தை சேர்ந்தது. கருப்பு மற்றும் சிகப்பு நிறத்துடன் பளபளப்பாக காணப்படும். இவ்வண்டுகள் நெற்பயிரின் மேல் பகுதியில் இருந்து இலைச்சுருட்டு புழுவை உண்டு வாழும். ஒரு நாளைக்கு 10 புழுக்களை உண்ணக்கூடிய திறன் படைத்தது. இவைகள் நெற்பயிரில் காணப்படும் தத்துப் பூச்சிகளை உண்டு வாழும் தன்மை படைத்தது.
தட்டான் இனங்கள்:
தட்டான், ஊசித் தட்டான் போன்ற பூச்சிகள், வானிலும், நீர்நிலைகள் மீதும் பறந்துகொண்டே இருக்கும். பறந்துசெல்லும் கொசு, சிறு
பூச்சிகளைப் பிடித்து உண்ணும். தட்டான்கள் சுற்றி வளைத்து
இரைதேடும் சிறப்பு வாய்ந்தவை. இதன் கால்கள் இலகுவாக சாறு உறிஞ்சும் பூச்சிகள், இளம் புழுக்களை கவ்விப்பிடித்து தாக்க
ஏதுவாக அமைந்துள்ளன. இவைகள் நெற்பயிரின் மேற்பரப்பில் பறந்து கொண்டு நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும். குறிப்பாக பறக்கும் அந்து பூச்சிகள், தத்து பூச்சிகள் மற்றும் இலையின் மேல் உள்ள முட்டைகள் ஆகியவைகளை உண்டு வாழும். இவைகள் இலையின் மேற்பரப்பில் பறப்பதை பார்க்கலாம். தேவையின்றி மருந்து தெளிக்காமல் இருந்தால் இவைகளை நாம் வயலில் அதிக அளவில் பார்க்க முடியும். இவற்றின் குஞ்சுகள் நீரில் வாழக் கூடியது. பொதுவாக நெல் வயல்களில் தண்ணீர் எப்போதும்
இருப்பதால் தட்டான்களின் இளம்புழுக்கள் அதிக அளவில்
தண்ணீருக்குள் இருக்கும் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் நீர்பரப்பில் விழும்போது இந்த தட்டான்களின் இளம்புழுக்கள் அவற்றை
உணவாக்கிகொள்கின்றன .பூச்சியானதும் பறந்து பயிரின்
மேல்மட்டத்திற்கு வந்துவிடும்.
பொறி வண்டு:
இதன் தாய்ப் பூச்சி முழுவதும் மஞ்சள் அல்லது முழு சிவப்பில் கரும்புள்ளிகள் இருக்கும். குஞ்சு கருப்பு அல்லது கருநீலமாக இருக்கும். இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள். இது 150 முதல் 200 முட்டைவரை இடும். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை ஈ, முட்டைகள், குஞ்சுகளை அழிக்கும். தன் வாழ்நாளில் 400 முதல் 500 பூச்சிகளைத் தேடி அழிக்கும்.இவைகள் சுறுசுறுப்பாக இரையை தேடும் திறன் படைத்தது. இவைகள் பயிரில் ஒவ்வொரு இலையாக பூச்சிகளும், முட்டைகளும் இருக்கிறதா என பார்த்து இரையை தேடவல்லது. வண்டுகளைவிட இவைகளின் குஞ்சுகள் அதிகமாக உண்ணும் திறன் படைத்தது. வண்டும், குஞ்சுகளும் நெற்பயிரில் காணப்படும் முட்டைகள்,தத்துப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் தத்துப்பூச்சிகளை உணவாக உண்ணும். தட்டைபயிரில் தோன்றும் அசுவினியை
தின்பதற்காகவே அதிக அளவில் இப்பொறி வண்டுகள்உண்டாகும்.இவை புகையான் பூச்சிகளை சாப்பிடும்.
Comments
Post a Comment
Smart vivasayi