இன்றய காலகட்டத்தில் விவசாயத்தில் டெக்னாலஜி என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது . இதற்கு முக்கிய காரணம் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் உரங்கள் , பூச்சி விரட்டிகள் சரியான நேரத்திற்கு செய்யவேண்டிய சூழ்நிலை . இதை தவிர்பதற்குத்தான் ட்ரோன்களை பயன்படுத்தி தெளிக்கப்படுகிறது . குறைந்த நேரத்தில் வேலைகளை முடிப்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் ட்ரோன்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது .
சாதாரண தெளிப்பான்களை பயன்படுத்தும்போது நேர விரயம் அதிகமாகிறது . மேலும் மருந்து தெளிக்கும்போது விவசாயிகள் பூச்சிக்கொல்லியுடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள் . அதுவே நாம் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும்போது அறவே அது தடுக்கப்படுகிறது . ட்ரோன்கள் மூலம் தெளிக்கும்போது காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்காலவேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது . ட்ரோன் மூலம் மருந்துமற்றும் உரம் தெளிக்க ஒரு ஏக்கருக்கு 10 நிமிடம் மட்டுமே. தேவைப்படுகிறது. மேலும் 90%தண்ணீர் உபயோகத்தையும், 40% பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க நம்மால் முடியும் .
ட்ரோன் மூலம் தாவரங்களின்மேல் சரியான அளவில் சீராக மருந்துதெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. மேலும் துல்லியமாகவும், வேகமாகவும் மருந்து தெளிக் முடிகிறது. ட்ரோன் மூலம் தெளிக்கும் போது, நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவில் முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது, லாபம் அதிகரிக்கிறது . இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மரங்கள், செடிகள், பந்தல் கொடிகளுக்கும் மருந்து தெளிக்கலாம். மேலும் சவாலான மலைச்சரிவுகள், மனிதர்கள் நுழைய முடியாத பகுதிகளில் குறிப்பாக கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்ற அடர்த்தியான பயிர்களில் ட்ரோன் மூலம் விரைவில் மருந்து தெளிக்கலாம்
வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது மற்றும் காலத்தே பயிர்சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியும். வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி, நோய் கண்காணித்தல் போன்ற பணிகளைமேற்கொள்ள, தமிழ்நாடு அரசு வேளாண் ட்ரோன்களை மானியத்தில் வழங்குகிறது.தனிப்பட்ட சிறு, குறு, ஆதி திராவிடர், பெண் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகளுக்கு 50% மானியமும் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக 4 லட்சம் ரூபாயும் வழங்குகிறது.மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ட்ரோன் வாங்க 40% மானியமும் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. ட்ரோனை வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து
3 % வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
ட்ரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaad - agai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து, உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்று பயன்பெறலாம். ட்ரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சியினைப் பெற்று அதற்கான உரிமத்தினையும்பெற்று ட்ரோனை இயக்கலாம் (அ) ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம். மோசமான கால நிலைகளில் ட்ரோன்களை பயன்படுத்துவது கடினம். விவசாய ட்ரோன்களை இயக்குவதற்கு அடிப்படை அறிவும், திறமையும் தேவை. மேலும் உரிமம் மற்றும் டிஜிசிஏ சான்றிதழ் பெற்ற விமானிகள் மட்டுமே வேளாண் ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும்.
By
Comments
Post a Comment
Smart vivasayi