முருங்கை நிலம் -1
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏழைகளின் உணவு கீரை வகைகள் அதில் முக்கிய உணவு முருககீரை . கிராமத்து வீடுகளின் கொல்லைகளில் முருங்கை கட்டாயம் இடம் பிடிக்கும் . முருங்கையின் மருத்துவத்தை முந்தானை முடுச்சில் பாக்யராஜ் சொல்லியிருப்பார் . ஆனால் நாம் அறிந்து கொள்ளாத விஷயங்கள் வேர் முதல் விதை வரை முருங்கையில் உள்ளன . அதற்கான சந்தை வாய்ப்புகள் உலகம் முழுவது விரிந்து கிடைக்கின்றன . முருங்கையின் இலை , பூ , பிஞ்சு ,பட்டை, விதை , பிசின் , வேர் என அனைத்துமே விற்பனைக்குரிய பொருட்கள்தான் . ஆனால் தமிழ் நாட்டில் முருங்கை வியாபாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை .
நம்மை பொறுத்தவரை எளிதாக கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு குறைவுதான் அது முருங்கைக்கும் பொருந்தும் . எந்த மண்ணாக இருந்தாலும் , எப்படிப்பட்ட வறட்சியாக இருந்தாலும் சரி ஒரு முருங்கை குச்சியை நட்டுவிட்டால் போதும் வேகமாக துளிர்த்து வளர்ந்துவிடும் இந்த ஏழைகளின் உணவு . முருங்கைக்காய் சாம்பாரை தாண்டி நமக்கு அதன் மகத்துவம் தெரிவதில்லை . உலக அளவில் முருங்கை மருத்துவ புரட்சியிலும் , பொருளாதார புரட்சியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது
முருங்கை பானங்கள் ஒரு வரம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா . நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை . இந்த உலகத்தின் தொழிநுட்ப தலைநகரம் சிலிக்கான் வேலியில் பல பிரபலமான நிறுவனங்களில் தங்களின் ஊழியர்களுக்கு முருங்கையில் தயாரிக்கப்பட்ட எலிக்ஸிர் டிரிங்க் (Elixir Drink) என்ற பெயரில் டீயாகவும், ‘லேட்டே’ மற்றும் ‘லஸ்ஸி’யாகவும் தருகிறார்கள். அதிக மூளை உழைப்புக்கும், மன அழுத்தம் மற்றும் உடல் வலியை நீக்குவதற்கும்தரப்படுகின்றன .
இது எல்லாம் டெக்னாலஜி வந்தபிறகு சொன்னது. ஆனா இரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே நம்ம குறு முனி அகத்தியர் சொல்லியிருக்காரு முருங்கை கீரை நெய்யோடு கலந்து சாப்பிட்டா யாழி பலம் பெறலாமுன்னு . நினைவில் இருக்கட்டும் ஒரு யாழி சக்தி என்பது ஆயிரம் யானைகளுக்கு சமம் . நம்ம ஊரில் முருங்கையைத் தின்றால் முந்நூறும் போகும்’ என்ற பேச்சு வழக்கு உண்டு . இதற்கு முருங்கை உணவுகளை உட்கொண்டால் முந்நூறு நோய்களும் ஓடிவிடும் என்பதே பொருள்.
நாம் குக் கிராமங்களில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த நமது வாழ் வியல் சார்ந்த முறையே இன்று, உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகவே முருங்கை என்ற தாவரம் தமிழ் சமூகத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. இதில் மற்றொரு ஆச்சர்யம் என்னவெனில், இந்த உண்மையை அமெரிக்க தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவ நிறுவனம் (US National Institute of Health and Medicine) உறுதி செய்துள்ளது. முருங்கை சுமார் 300 நோய்களைத் தடுத்து நிறுத்தி குணப்படுத்தி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யும் வல்லமைமிக்கது என முருங்கையின் மருத்துவப் பயன்களைப் பட்டியலிடுகிறது.
By
Smart Vivasy
கிணறு வெட்டுபவர் அருண்
ReplyDelete8825989897