மரங்கள் மனிதன் தோன்றுவதற்கு முன்னால் இருந்தது , தற்பொழுது மனிதனோடு இருக்கிறது , மரம் மனிதனை கடந்தும் இருக்கும் . இன்று எல்லாம் நவீனமயம் ஆக்கப்பட்டாலும் ஒருகாலத்தில் மரங்கள் நமக்கு எல்லாம்முமாக இருந்தன .நாம் சமையலுக்கான எரிபொருளாக , வீடு கட்டுவதற்கான சட்டங்களாக , ஜன்னல்களாக , உணவுக்காக , கால்நடை தீவனங்களாக தேவைப்பட்டன . அவ்வளவு ஏன் , நாம் பிறந்து தொட்டிலில் போடுவது முதல் நாம் இறந்து எரிக்கும் வரை மரங்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படியல்ல பல்வேறு வகையான தொழிற்சாலைகளுக்காக மரங்களை வேளாண் காடுகள் மூலமாக உற்பத்தி செய்கிறோம் .
விவசயிகளுக்கு பொருளாதார ரிதியாக பயனளிக்க கூடிய மரங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 30 லிருந்து 40 சதவீதம் மரங்கள் இருக்கும் . காகிதம் தயாரிப்பதற்கான மரங்கள் , எரிசக்திக்கான மரங்கள் , தடிமரங்கள் எண்ணெய் வித்து மரங்கள் ( வேப்பமரம், புங்கமரம் ) ஒட்டு பலகை . இவைகள் அனைத்தும் வணிகம் சார்ந்த தொழில்களாகும் இதற்காக வளர்க்கப்படும் காடுகளை . தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் என்கிறோம்
நாம் இந்த பகுதியில் தடி மரங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து பார்ப்போம் . ஜன்னல், கதவுகள், பீரோ, நாற்காலி, கட்டில்,மேஜை போன்றவற்றை செய்ய பயன்படுத்துவதை நாம் தடி மரங்கள் என்று கூறுவோம் . இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் தேக்கு, மகோகனி, குமிழ், சிசு போன்ற மரங்களை சொல்லலாம் . தேக்கு மரங்கள் என்று எடுத்துக்கொண்டால் வனப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் மேலும் அவற்றை வெட்டுவதற்கு கால நிர்ணயம் தேவைபட்டது விவசாய தோட்டங்களிலும் வயல் வரப்புகளில் மட்டுமே இருந்தது. ஒரு அவசர நிலை ஏற்பட்டால் கூட விவசாயிகள் அதை வெட்டமாட்டார்கள் முதிர்வு நிலைக்காக முப்பது வருடம் காத்திருப்பார்கள் .
ஆனால் இப்பொது அப்படி இல்லை . வேளாண் கடுகளுக்காக வளர்க்கப்படும் தேக்கு மரங்களை அதன் பருமண்ணை கணக்கிட்டு பல்வேறு தேவைக்கு விற்பனை செய்ய முடியும் . உதாரணமாக 2 அங்குலம் சுற்றளவு இருந்தால், எரிபொருள் தேவைக் காகவும்... 5 அங்குலம் சுற்றளவு இருந்தால் காகிதக்கூழ், 18 அங்குலம் இருந்தால் ஒட்டுப் பலகை மரமாகவும், 24 அங்குலம் சுற்றளவு இருந்தால் தடிமரமாகவும் விற்பனை செய்யலாம். சந்தையை பொறுத்து விலை மாறுபடும் . பருமன் அதிகரிக்க விலை அதிகமாக கிடைக்கும்
by
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi