Skip to main content

Posts

Showing posts from July, 2023

மரமும் மரம் சார்ந்த பயனும்

மரங்கள் மனிதன்  தோன்றுவதற்கு முன்னால் இருந்தது , தற்பொழுது  மனிதனோடு இருக்கிறது , மரம் மனிதனை கடந்தும் இருக்கும் . இன்று எல்லாம் நவீனமயம் ஆக்கப்பட்டாலும் ஒருகாலத்தில் மரங்கள் நமக்கு எல்லாம்முமாக இருந்தன .நாம் சமையலுக்கான எரிபொருளாக , வீடு கட்டுவதற்கான சட்டங்களாக , ஜன்னல்களாக , உணவுக்காக , கால்நடை தீவனங்களாக தேவைப்பட்டன . அவ்வளவு ஏன் , நாம்  பிறந்து தொட்டிலில் போடுவது முதல் நாம் இறந்து எரிக்கும் வரை மரங்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படியல்ல பல்வேறு வகையான தொழிற்சாலைகளுக்காக  மரங்களை வேளாண் காடுகள் மூலமாக உற்பத்தி செய்கிறோம் .  விவசயிகளுக்கு பொருளாதார ரிதியாக பயனளிக்க கூடிய மரங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 30 லிருந்து 40  சதவீதம்  மரங்கள் இருக்கும் . காகிதம் தயாரிப்பதற்கான மரங்கள் , எரிசக்திக்கான மரங்கள் , தடிமரங்கள் எண்ணெய் வித்து மரங்கள் ( வேப்பமரம், புங்கமரம் ) ஒட்டு பலகை . இவைகள்  அனைத்தும் வணிகம் சார்ந்த தொழில்களாகும் இதற்காக வளர்க்கப்படும் காடுகளை . தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் என்கிறோம் நாம் இந்த பகுதியில் தடி மரங்கள் மற்றும் அத...