பனை மரம்
பனை மரம் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகம் வருவது கோடை காலத்தில் சாப்பிடும் நுங்கு சிலருக்கு சிறுவயதில் பனை மரம் ஏறியது ஞாபகம் வரலாம் , சிலருக்கு அதன் மருத்துவ குணம் ஞாபகம் வரலாம் , சிலருக்கு தெய்வமாய் வழிபட்டது ஞாபகம் வரலாம் 90 - குழந்தைகளுக்கு ஒற்றை பனையில் முனி பேய் இருந்தது ஞாபகம் வரலாம் சிலருக்கு பனை விசிறி ஞாபகம் வரலாம் , சிலருக்கு பனை வெள்ளம் , சிலருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட கொட்டான் கூட ஞாபகம் வரலாம் , ஏன் , பல நூற்றாண்டுகளாக நாம் பனை ஓலைகளில்தான் செய்திகளை பரிமாறி உள்ளோம் . அந்த அளவிற்கு பனை நம் வாழ்வில் ஒன்றாக பின்னி பிணைந்தது , இந்த பனை மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் பாப்போம் .
பனை மனிதனோடு பயணம்
தமிழ் நாட்டின் மாநில மரமாக பனை இருக்கிறது , பனை பற்றி சற்று கூர்ந்து கவனித்தால் அது மனிதனின் வாழ்விட பகுதியை சுற்றியே காணப்படும் . தென்னையை போன்று காட்டு பகுதி அல்லது தீவு பகுதிகளிலோ இருக்காது அதே சமயம் இது பயிரிட படுவதில்லை , இயற்கையாகவே வளரக்கூடியது . ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட பனை ,அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களால் பனை விதைகளை தங்கள் கைகளுடன் எடுத்து செல்லப்பட்டதால் அடர் காடுகளில் இல்லாமல் ஊரை சுற்றியே இந்த பனை மரங்கள் காணப்படுகின்றன . ஆன் மற்றும் பெண் பனை என இரண்டு வகை உள்ளன , பெரும்பாலும் பூ வந்த பிறகுதான் பனை அடையாளம் காண முடிகிறது . பனை பத்து வருடங்களில் 15 அடி உயரம் வளரும் பனைக்கு மனிதனின் சராசரி வயதை விட இதன் வயது அதிகம் .
பனை மரங்கள் ஆசிய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன , இந்தியா , இலங்கை , இந்தோனேசியா , சீனா , வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன . கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமம் எடுத்த கணக்கின் படி இந்தியாவில் பத்து கோடிக்கு மேல் பனை மரங்கள் இருக்கலாம் . தமிழகத்தில் மட்டும் சுமார் 5 கோடி பனை மரங்கள் இருக்கும். அதுவும் , இதில் 50 விழுக்காடு மரங்கள் திருநெல்வேலி , தூத்துக்குடி , ராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாகவும் , சிவகங்கை , சேலம், சென்னை , செங்கற்பட்டு மாவட்டங்களில் அதிக அளவும் , பிற மாவட்டங்களில் 30 லச்சத்திற்கு குறைவாகவும் உள்ளன
பனையின் பயன்கள்
பனை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவனாக 200 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது . பெரும்பாலும் அமெரிக்க ,ஜெர்மனி , பிரிட்டன் , பிரான்ஸ் , இத்தாலி , ஆஸ்திரேலிய , ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது . பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை உணவு பொருட்கள் மற்றும் உணவு அற்ற பொருட்கள் என பிரிக்கலாம் . பதநீர் ,கருப்பட்டி , வெல்லம் , பனஞ்சீனி , பங்கற்கண்டு , பனமிட்டாய், பனங்கூழ் போன்றவற்றை உணவு பொருட்களாகவும், பனந்தும்பு , காலிகள் , மரம் , பனை ஓலை பொருட்கள் , அலங்கார பொருட்கள் , மற்றும் மரப்பொருட்கள் போன்றவற்றை நாம் உணவற்ற பனை பொருட்கள் மரத்தில் இருந்து கிடைக்கின்றன .
உயிர் வேலி
பனை மரத்தை சிறந்த உயிர் வேலி என்று சொல்லலாம் . ஏன் இது உயிர் வேலியாக இருந்தால் யானை கூட உள்ளே வர முடியாது . ஆடு மாடு தின்னாமல் பார்த்துக்கொண்டால் ஓரளவு நீர் வசதியுள்ள பகுதிகளில் எட்டு ஆண்டுகளில் பலன்தரக்கூடியது .தென்னை பிற்கால மரபு பயிர் ஆனால் , பனை சங்ககாலம் முதல் தமிழ் நாட்டில் தோன்றிய மரம்
பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு
சுண்ணாம்பு கலவாவது கள் என்ப்படும்
உடல் குளிர்ச்சி வயித்துப்புண் போன்றவற்றுக்கு பால் நல்லது
நுங்கு வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சாப்பிடலாம் ,
பனம்பழம் சிறந்த சத்துணவாகும் . உயிர் சத்து அதிகம் உள்ளது , பித்தம் வரலாம் அதனால் இதனை சுட்டு சாப்பிடுவது நல்லது
By
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi