பனை மரம் பனை மரம் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகம் வருவது கோடை காலத்தில் சாப்பிடும் நுங்கு சிலருக்கு சிறுவயதில் பனை மரம் ஏறியது ஞாபகம் வரலாம் , சிலருக்கு அதன் மருத்துவ குணம் ஞாபகம் வரலாம் , சிலருக்கு தெய்வமாய் வழிபட்டது ஞாபகம் வரலாம் 90 - குழந்தைகளுக்கு ஒற்றை பனையில் முனி பேய் இருந்தது ஞாபகம் வரலாம் சிலருக்கு பனை விசிறி ஞாபகம் வரலாம் , சிலருக்கு பனை வெள்ளம் , சிலருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட கொட்டான் கூட ஞாபகம் வரலாம் , ஏன் , பல நூற்றாண்டுகளாக நாம் பனை ஓலைகளில்தான் செய்திகளை பரிமாறி உள்ளோம் . அந்த அளவிற்கு பனை நம் வாழ்வில் ஒன்றாக பின்னி பிணைந்தது , இந்த பனை மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் பாப்போம் . பனை மனிதனோடு பயணம் தமிழ் நாட்டின் மாநில மரமாக பனை இருக்கிறது , பனை பற்றி சற்று கூர்ந்து கவனித்தால் அது மனிதனின் வாழ்விட பகுதியை சுற்றியே காணப்படும் . தென்னையை போன்று காட்டு பகுதி அல்லது தீவு பகுதிகளிலோ இருக்காது அதே சமயம் இது பயிரிட படுவதில்லை , இயற்கையாகவே வளரக்கூடியது . ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட பனை ,அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களால் பன...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்