மாடித்தோட்டத்தில் சுலபமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் .
மாடித்தோட்டத்தில் நமக்கு , நமக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து கொள்ளலாம் . மாடித்தோட்டத்தை பொறுத்தவரை கத்தரி , வெண்டை ,தக்காளி போன்ற செடி வகை பயிர்களையோ அல்லது கேரட் ,உருளை ,முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் அடியில் விளையும் பயிர்களைத்தான் அதிகம் பயிர் செய்வோம் . ஆனால் அவரை ,புடலை , பீர்க்கன் போன்ற கொடிவகை பயிர்களை நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இதற்கு பெரும்பாலும் பணம் அதிகம் செலவாகும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நம்மால் குறைந்த செலவில் பந்தல் அமைத்து நம்மால் அதிகம் காய்கறிகள் எடுக்க முடியும் அதேசமயம் நமக்கு செடி வகை காய்கறிகளுக்கு பயிர் செய்ய இடம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் குறைந்த செலவில் எப்படி பந்தல் அமைக்கலாம் என்று பார்க்கலாம் .
குறைந்த செலவில் பந்தல்
மாடி தோட்டமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பின்புறமாக இருந்தாலும் சரி இரண்டு வகைகளில் நாம் காய்கறி பந்தல் அமைக்கலாம் . ஓன்று மூங்கில் மற்றும் மண் பைகளை வைத்து தாற்காலிகமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் அல்லது இரும்பு பைப் (L ஆங்கில் கம்பி ) கான்கிரீட் வைத்து நிரந்தரமாக வைக்கலாம்
ஒரு பைப் மற்றொரு பைப் இடைவெளியில் 10 முதல் 15 அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் . தரை பையிலிருந்து , அதாவது பையில் இருந்து ஒரு அடிக்கு மேல் கம்பிகளை (1.5 முதல் 2 இன்ச் ) இணைக்க வேண்டும் . ஆனால் அடுத்து அடுத்து இருக்கும் கம்பிகளுக்கு இரண்டு அடி இருக்க வேண்டும்
Helps images for pandal
Comments
Post a Comment
Smart vivasayi