மாடித்தோட்டத்தில் டீ தூளின் பயன்பாடு
நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வே ளையாவது டி குடிக்கலாம் . டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம் . ஆனால் அதை தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம் .
டீ பேக் முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் டீ தூளை கொட்டும்போது மக்கிவிடும் அதே டீத்தூளை பேக் உடன் போடும்போது அது மக்குமா ? தாராளமாக 3 முதல் 4 மாதத்திற்குள் மக்கிவிடும் . பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு பேக் உடன்பயன்படுத்தலாம்.
டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது .
வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக்கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்படுத்தும் பொது தேவையற்ற குப்பைகள் சேர்வது குறைகிறது . மேலும் காய்கறி கழிவுகளோடு டீ தூளை பயன்படுத்தும்போது அவை வேகமாக மக்குகின்றன
நீங்கள் மண் புழு உரம் தயாரிப்பவராக இருந்தால் அல்லது மாடித்தோட்ட தொட்டிகளில் மண்புழுக்கள் இருந்தால் அதில் இந்த டீ தூளை போடும்போது நிறைய சத்துள்ள இயற்கை உரம் பயிர்களுக்கு கிடைக்கிறது .
Coir Pith போன்று இதுவும் நீரை பிடித்து வைத்துக்கொள்வதால் வேர்களுக்கு தேவையான நீர் கிடைக்கிறது , நீரும் சேமிக்கப்படுகிறது .
டி தூளை செடிகளுக்கு போடுவதால் அதிலிருந்து வரும் வாசம் செடிகளை பூச்சிகளை செடிகளை தாக்காதவாறு செய்து சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது
Comments
Post a Comment
Smart vivasayi