மாடி தோட்டத்தில் ரோஜா செடி
மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்க கவனம் எடுத்து செய்தால் செடியும் நல்லா வளரும் பூக்களும் வந்து நிறைய பூக்கும் பொதுவா மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடி வச்சிருக்கீங்க அப்படின்னா தண்ணீர் அடிக்கடி கொடுக்கக்கூடாது ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர்ல தண்ணீர் கொடுக்கணும் உங்களுக்கு ஒருவேளை தினசரி தண்ணீர் கொடுக்கணும் நினைச்சீங்கன்னா காலை வேளையில் டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் வந்து உங்களுடைய ரோஜா செடிக்கு கொடுக்கலாம் . இதை மாலைவேளையில் செய்யக்கூடாது ஏன் எனில் காலைவேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீர் எடுத்து போக மீதம் ஆவியாக போய்விடும் .
டிரைக்கோடெர்மா விரிடி
பூஞ்சை தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் வந்து படுகிறது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி. இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தண்ணீரில் கலந்து வேர் பகுதிகளில் ஊற்றி விட வேண்டும் அல்லது லிட்டருக்கு 5 மில்லி சூடோமோனஸ் கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம் இதை மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்
அடுத்ததாக வீட்டில் இருக்கும் முட்டை ஓட்டை யோ அல்லது நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் வெங்காயத்தாள்களையோ நீங்கள் உங்களுடைய தொட்டிகளில் மேலே சிறிதளவு பள்ளம் தோண்டி அதில் போட்டு மூடி விடலாம் செடிக்கு நல்ல உரமாக இருக்கும் .
சாம்பல்
அடுத்த சாம்பல் வீட்டில இருக்கிற சாம்பல் வீட்டில் இல்லை என்றால் செங்கல் சூளையில் சாம்பல் இருக்கும் அங்கே இருந்து உங்களுக்கு தேவையான அளவு இப்போ ஒரு தொட்டிச்செடி ஒரு அஞ்சு விரல் அளவு சாம்பல் தேவைப்படும் அதாவது ஒரு 30 கிராம் வச்சுக்கலாம் அந்த சாம்பலை நீங்க வந்து எப்ப நீர் கொடுக்கிறீர்களோ அந்த நீர் கொடுப்பதற்கு முன்னாடி தொட்டில போட்டுட்டு அதுக்கப்புறம் நீர் கொடுக்கலாம்
மழைக்காலங்களில் தொட்டி செடிகளுக்கு அதிக பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கு இதை கட்டுப்படுத்துவதற்கு காதி சோப் அதாவது சர்வோதயாவில் கிடைக்கும் அதை ஒரு ரெண்டு பார் வாங்கி வச்சுக்குங்க தேவையான அளவு அதாவது ஒரு 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்
பாஸ்போபாக்டீரியா கடையில வந்து கிடைக்கும் அதை பவுடராகவோ அல்லது திரவமாகவோ வாங்கி ஒரு தொட்டி செடிக்கு 20 கிராம் என்கிற அளவில் நீரில் கலந்து வேரில் ஊற்றிவிடுங்கள் இதை சீரான இடைவெளியில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்
Comments
Post a Comment
Smart vivasayi