terrace farming at home
இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்னதா மாடிதோட்டம் வைக்கவேண்டும் என்று எல்லாரிடமும் ஆசை உள்ளது . அடுக்கு மடியில் உள்ளவர்கள் கூட பால்கனியில் சின்னதாக தோட்டம் வைக்க ஆசை படுகின்றனர் . இது ஆசைக்காக மட்டுமில்லாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை உன்ன வேண்டும் என்ற விழிப்புணர்வையே காட்டுகிறது . நாம் இந்த கட்டுரையில் மாடி தோட்டத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் மற்றும் அதிக மகசூல் எடுக்க 7 நாள் கவனிப்பு பற்றியும் பார்ப்போம் .
புதிதாக மாடி தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு - terrace farming
குரோ பேக் - Grow bag
புதுசா ஆரம்பிக்க போரிங்கான முதலில் குரோ பேக் கவனம் செலுத்துங்கள் எந்த செடி வைக்கபோகிறீர்களோ அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுங்கள் , அடுத்ததாக சரியான மண் கலவை இடுங்கள் , குரோ பேக்ல் போட்டவுடன் நடுவதை விட இரண்டு நாட்கள் நீர் ஊற்றி பின்பு நட்டால் நன்றாக இருக்கும் . இந்த குரோ பேக்கை நேரடியாக தரையில் வைக்காமல் மரப்பலகை , செங்கல் வைத்து அதன் மேல் வைக்கலாம்
ஷேடு நெட் - shade net
மாடித்தோட்டம் வைக்கும் பெரும்பாலோர் வெயில் அதிகம் இருக்கும் என்று ஷேடு நெட் வைப்பார்கள் , ஒரு செடி வளர்வதற்கு தேவை வெயில்தான் . பின்பு ஏன் ஷேடு நெட் போடவேண்டும்மென்றால் முதல் இரண்டு வாரத்தில் சின்ன செடிகளால் நேரடி வெயிலை தாங்கமுடியாது , மேலும் உங்களால் நீர் வாரத்திற்கு இரண்டு தடவைதான் நீர் கொடுக்க முடியும் என்ற நிலையில் வெயில் அதிகம் அடிக்கும்போது நீர் மற்றும் அதனுடன் நாம் கொடுக்கும் உரங்களும் ஆவியாகும் அதை தவிர்க்க போடலாம்.
அதிக காய்கறிகள் வர 7 நாள் கவனிப்பு
முதல் நாள்
இந்த முதல் நாள் உங்கள் மாடி தோட்ட பயிர்களுக்கு இயற்கை உரம் கொடுக்கவேண்டும் . இந்த இயற்கை உரத்தை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம் . 10 கிலோ மாட்டு சாணம் அதனுடன் 1 கிலோ கடலை புண்ணாக்கு , வேப்பம் புண்ணாக்கு , போன் மீல் , போன்றவற்றை தண்ணீரில் கலந்து ஒரு சின்ன ட்ரம்மில் போட்டு மூடி வைக்கவேண்டும் . தினமும் கலக்கி விட வேண்டும் 4 நான்கு நாள்களில் உங்கள் இயற்கை உரம் தயாராகி விடும் .
இந்த உரத்தை 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி செடிகளுக்கு ஊற்றலாம் மாலை வேளைகளில் ஊற்றுவது நன்று காலையில் ஊற்றினால் உரம் ஆவியாகி விடும்
இரண்டாம் நாள்
எதுவும் தேவை இல்லை நீர் மட்டும் கொடுக்கலாம்
மூன்றாம் நாள்
சூடோமோனாஸ் பிளோரோசென்ஸ் இது திரவ வடிவிலோ அல்லது பவுடர் வடிவிலோ கடைகளில் கிடைக்கும் 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் செடிகளுக்கு ஊற்றலாம் . திரவமாக இருந்தால் 5 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்றலாம் . இந்த சூடோமோனாஸ் செடிகளின் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது , வேர் வளர்ச்சி மற்றும் வேர்கள் சத்துக்களை எளிதாக எடுத்துக்கொள்ள உதவும் . blight மற்றும் பூஞ்சாண நோய்கள் வராமல் கட்டுப்படுத்துகிறது மாதம் ஒரு முறை இதை செய்யலாம் .
நான்காவது நாள்
இந்த நாள் வேப்ப இலைக்கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் அதனுடன் காதி சோப் கலந்து தெளிக்கலாம் 20 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம் செடிகளை தாக்கும் அணைத்து பூச்சிகளும் கட்டுப்படுத்தும் . அனால் காய்கறிகள் அறுவடை செய்யும் 7 நாட்களுக்கு முன்பு இதை தெளிக்கவேண்டாம் ஏன் எனில் இதன் கசப்புத்தன்மை நாம் சாப்பிடும்போது கசப்புத்தன்மை தெரிய வாய்ப்புண்டு .
ஐந்தாவது நாள்
இந்த நாள் மீன் அமிலம் கொடுக்கலாம் நாமே தயாரித்தும் கொடுக்கலாம் கடைகளிலும் கிடைக்கும் . நீங்களே தயாரிக்கிறீர்கள் என்றால் ஒரு சின்ன டிரம்மில் 1 கிலோ மீன் அமிலம் 1 கிலோ வெல்லம் கலந்து மூடி விடவும் 15 நாட்கள் கழித்து , திரவம் உருவாகியிருக்கும் அதை வடிகட்டி 2 மில்லி கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம் (எப்படி தயாரிக்கலாம் என நிறைய விடியோக்கள் உள்ளன ) இந்த மீன் அமிலம் பூச்சி நோய் கட்டுப்படுத்துகிறது , பூக்கள் கிழே விழாமல் இருப்பதற்கு அதிகம் காய் பிடிக்க மற்றும் காய்கள் நல்ல நிறத்துடன் பெரிதாக வளர பயன்படுகிறது .
ஆறாவது நாள்
இந்த நாளில் நீர் மட்டும் விட்டால் போதும்
ஏழாவது நாள்
இந்த நாள் உங்கள் காய்கறி செடியில் தேவை இல்லாத கிளைகள் குப்பைகள் இருந்தால் அகற்றிவிடுங்கள் . உங்கள் செடியை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் , நல்ல மகசூல் கிடைக்கும் .
உங்கள் மாடித்தோட்டத்தில் செடிகள் வளர்ப்பதற்கு மண் தேவையில்லை , அதை தவித்து கோகோ பிட் , காயர் பிட் , போன்றவற்றை பயன்படுத்தலாம்
by
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi