red lady papaya plant
குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான் அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் .
பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்
ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் மூலம் உழுது பத்து நாட்கள் காயவிடுங்கள் .
மண்கலவை மற்றும் விதைநேர்த்தி
விதை நேர்த்தி என்பது மிக முக்கியம் , விதை நேர்த்திசெய்வதால் பப்பாளியில் ஏற்படுகிற பாதி பிரச்னையை தவிர்த்துவிடலாம் . மண்கலவைக்கு கரைந்தைய் மண் தயார் செய்து கொள்ளுங்கள் . பாதி கரந்தை மண்ணும் பாதி நல்ல தூளாக்கின தொழுஉரமும் இதனுடன் எந்த அளவு தேவையோ ஒரு வாளியில் மெட்டாரைசியம் கலந்து வைத்துகொள்ளுங்கள் இதனுடன் பாஸ்போ பாக்டீரியா கலந்து கொள்ளுங்கள் மேலும் இதனுடன் அசோஸ்பைரில்லம் கலந்து கொள்ளலாம் . இந்த மண் கலவையில் தெளித்து தெளித்து நன்கு பிரட்டி விடவும் . இதை மட்டை போட்டு மூடி விடவும் குறைந்தது 8 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும் அதே சமயம் சூடு ஆறுவதற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்கவேண்டும் . 8வது நாள் சீட்லிங் பையில் போட்டு இரண்டு நாட்கள் கழித்து மிகவும் ஆழம் இல்லாமல் சுண்டு முதல் கோடுவரை குழியில் பப்பாளி விதை நடலாம் , விதைப்பதற்கு முன் சூடோமோனாஸ் 20 மில்லி அசோஸ்பைரில்லம் 20 மில்லி வைத்து விதை நேர்த்தி செய்யவும் 7 நாட்களுக்கு ஒருமுறை ஈ . எம் கரைசல் கொடுக்கலாம் 25 வது நாளில் இருந்து நடவுக்கு தயாராகிவிடும்
நடவு
நடவு ஒன்றை அடி காலம் அதேஅளவு நீளம் எடுத்து ஒருவாரம் காயவிட்டு குழிக்கு 5 கிலோ தொழு உரம் உடன் சூடோமோனாஸ் கலந்து 25 முதல் 40 நாள் ரெட் லேடி பப்பாளி கன்றை நடலாம்
உரமேலாண்மை
10 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகாவியா கொடுக்கவேண்டும் (10lit *300ml கன்றுக்கு )
20 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுக்கவேண்டும் (10lit *300ml கன்றுக்கு )
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வேப்பம் புண்ணாக்கு , கடலை புண்ணாக்கு , ஆமணக்கு புண்ணாக்கு தூரில் வைத்து நீரில் விடலாம் .
4 மாதத்திற்கு ஒரு முறை மண் புழு உரம் , தொழு உரம் கொடுக்கலாம்
பூச்சி நோய் மேலாண்மை
பப்பாளியில் மாவு பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் கன்று நட்ட ஒரு மாதத்திலிருந்தே இதன் தாக்குதல் தென்படும் . ஆரம்பத்திலிருந்தே கவனித்து வாருங்கள் ஒரு மாவுப்பூச்சி தென்பட்டாலே கைத்தெளிப்பான் கொண்டு நீரை பீய்ச்சி அடியுங்கள் .இப்படி செய்த 1 அல்லது இரண்டு மணி நேரம் கழித்து வேப்பெண்ணை +காதி சோப் + நீருடன் கலந்து தெளிக்கவேண்டும் .
மகசூல் - red lady papaya yield per tree
3 வது மாதம் பூக்க ஆரம்பித்து 9வது மாதம் முதல் 18 மாதம் அதிகமாக அறுவடைக்கு பழங்கள் வர ஆரம்பிக்கும் நாலு நாளைக்கு ஒரு தடவைன்னு பழம் பறிக்கலாம். பப்பாளி மரத்துக்கு ஆயுசு மூணு வருஷம். ஒரு ஏக்கர் நிலத்துல, ஒரு மரத்துக்கு ஒரு பழம்னு வைச்சாலும், ஆயிரம் மரத்துக்கு ஆயிரம் பழம். ஒரு பழத்தோட எடை 2 கிலோன்னா, வாரத்துக்கு 2,000 கிலோ; மாசத்துக்கு 8,000 கிலோ. ஒரு கிலோ 10 ரூபாய்னு வைச்சாலும் மாசத்துக்கு, 80 ஆயிரம் ரூபாய். விதை, உரம், பராமரிப்புன்னு, 30ஆயிரம் ரூபா கழிச்சிட்டா கூட, 50 ஆயிரம் ரூபாய் லாபம் நிச்சயம்
G.M
0 Comments
Smart vivasayi