Ad Code

கோழி வளர்ப்பும் வங்கிகளின் கடன் உதவியும்

project report for poultry farm for bank loan



இந்தியாவில் கறிக்காக உற்பத்தி செய்யப்படும் கோழிகளின் என்னிக்கை ஒன்பது சதவிகிதத்தில் வளர்ந்துகொண்டிருகிறது கடந்த பத்து ஆண்டுகளில் இறைச்சி சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த கோழிவளர்ப்பு தொழிலை ஊக்குவித்து கடன் வழங்குவதால் தொழிலை உருவாக்கி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கி இருக்கிறது . 


நீங்கள் எந்த ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை ஓன்று அனுபவம் (நீங்கள் வங்கியில் லோன் கேட்கும்போது அனுபவம் இல்லையெனில் உங்கள் கடன் கொடுக்க மறுக்கலாம் ) மற்றொன்று முதலீடு. இந்த கோழி பண்ணை ஆரம்பிப்பதற்காக வங்கிகள் பல்வேறு கடன்கள் கொடுக்கின்றன . 


திட்ட அறிக்கை (project report)


எந்த ஒரு வங்கிக்கு சென்று கோழி வளர்ப்பதற்காக கடன் கேட்டால் வங்கியின் மேலாளர் உடனே கொடுத்து விடமாட்டார் பல விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வார் உங்களுக்கு அனுபவம் இருகிறதா அல்லது சான்றிதழ் இருகிறதா  , உங்களால் கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்தமுடியுமா அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்வார் . உங்களுக்கு கடன் கிடைக்க ஒரு திட்ட அறிக்கை தயார் செய்தால் உங்களுக்கு கடன் கிடைக்க ப்ளஸ் அமையும் . இந்த திட்ட அறிக்கையில் உங்கள் அனுபவம் எவ்வளவு கடன் வேண்டும் எப்படி கோழி பண்னையயை கட்டமைக்க போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும் . உங்கள் மாவட்ட கால்நடை  தலைமை அலுவலகத்தை அணுகினால் இந்த திட்ட அறிக்கையை தயாரித்து தருவார்கள் , இதற்காக 400 முதல் 600 வரை கட்டணம் வசூலிப்பார்கள் . ஒருவேளை உங்களிடம் அனுபவம் இல்லையெனில் அவர்கள் பயிற்சி கொடுத்து சான்றிதழும் கொடுப்பார்கள் . நாம் இந்த கட்டுரையில் எந்த எந்த வங்கி கோழி வளர்ப்பிக்காக கடன் கொடுக்கின்றன , தகுதி , தவணை காலம் போன்றவற்றை பார்க்கலாம் .


SBI வங்கி


இந்த வங்கியை பொறுத்தவரை கோழிவளர்ப்பிற்காக இரன்டு வகையான கடன் கொடுக்கப்படுகிறது 


A ) SBI Poultry Loan


நீங்கள் கோழி வளர்ப்பிற்காக கொட்டகையோ ,அல்லது தீவன அறை அமைப்பதற்காகவோ , கோழி வளர்ப்பிற்கான மற்ற தேவைகளுக்காக இந்த வகை கடன் கொடுக்கப்படுகிறது 



தகுதி என்று பார்த்தால் அனுபவம் இருக்கவேண்டும் கொட்டகை அமைப்பதற்கான நிலம் இருக்கவேண்டும் . அதேசமயம் வங்கியின் பாதுகாப்பிற்காக உங்கள் பேரில் உள்ள நிலம் வீடு அடமானம் வைக்க வேண்டும் . மேலும் கடன் வாங்கிய காலத்திலிருந்து 5 ஆண்டுகளில் திரும்பி செலுத்த வேண்டும் .


SBI Broiler Plus Loan


பிராய்லர் கோழி வளர்ப்பதற்கு என்றே SBI வங்கியால் விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படும் கடன் இது . இந்த கடன் மூலம் கொட்டகை , கட்டுமானம் , தீவன அரை  மற்றும் கோழி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வாங்கிகொள்ளலாம் .


நீங்கள் பண்ணை அமைக்கும் இடம் மற்ற கோழி பண்ணைகளில் இருந்து 500 மீட்டர் தள்ளி இருக்கவேண்டும் . மேலும் கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் பயிற்சி இருக்கவேண்டும் . கட்டாயமாக நீர் வசதி இருக்கவேண்டும் . உங்களுடைய கோழிப்பண்ணையில் குறைந்தது 5000 பிராய்லர் கோழிகளாவது இருக்கவேண்டும் அதிகபச்சமாக 10000 முதல் 15000 வரை பிராய்லர் கோழிகள் இருக்கலாம் 


உங்களுடைய மொத்த செலவில் 75 % வரை கடன் வாங்கிக்கொள்ளலாம் 5000 கோழிகள் மட்டும் முதலில் வளர்க்கலாம் என்று நினைத்தால் மூன்று லச்சம் வரை கடன் கிடைக்கும் அதிகபச்சமாக ஒன்பது லச்சம் வரை கடன் கிடைக்கும் . வங்கியின் பாதுகாப்பிற்காக உங்கள் நிலத்தை அடமானமாக வைக்க வேண்டி இருக்கும் . 


கடன் தொகையை 5 ஆண்டுகளில் திரும்பி செலுத்தலாம் 


PNB - Punjab National Bank



கொட்டகை அமைக்கவும் , உபகரணங்கள் வாங்கவும் , கோழி குஞ்சுகள் பராமரிக்க , தீவனம் மற்றும் மருந்துகள் வாங்கவும் இந்த வங்கி கடன் வழங்குகிறது .


அனுபவம் மற்றும் பயிற்சி  கோழி வளர்ப்பில் இருக்கவேண்டும் . கோழி வளர்ப்பிற்கான கொட்டகை அமைக்க நிலம் இருக்கவேண்டும் . சிறு விவசாயிகளுக்கும் இந்த வங்கி கோழி வளர்ப்பிற்கான கடன் தருகிறது 


மூன்றாம் நபர் உத்தரவாதம் மற்றும் நிலம் வங்கி கடனுக்கு உத்தரவாதமாக வைக்க வேண்டும் 


எந்த வகையான கோழி பண்ணை என்பதை பொறுத்து கடன் வழங்கப்படும் விவசாய்களின் திறனை பொறுத்து கடனை திரும்ப செலுத்தும் காலம் 6 முதல் 7 வருடம் ஆக இருக்கும் .


HDFC Bank loan



எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) கோழி வளர்ப்பிக்கான கடன் வழங்குகிறது . அணைத்து விவசாயிகளும் கோழி வளர்ப்பிற்கான முறையான பயிற்சி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது கோழிப்பண்ணையில் அனுபவம் உள்ள விவசாயிகளுக்கு இந்த வங்கி கடன் வழங்குகிறது.


கடனிற்காக ஈடாக நிலத்தை அடமானமாகவும் மூன்றாம் தரப்பு உத்தரவாதமும் கொடுக்கவேண்டும் . கடன் தொகை நீங்கள் வைக்க போகும் அளவை பொறுத்து கொடுக்கப்படும் . வாங்கிய கடனை 5 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் .


Federal Bank Loan



ஃபெடரல் வங்கியும் கோழிப்பண்ணை அமைப்பதற்கான கடனை வழங்குகிறது . இந்த வங்கியில் சொத்து மதிப்பில் அல்லது கோழி பண்ணையின் திட்ட மதிப்பில் 100 % கடனாக பெறலாம் .


கோழி வளர்ப்பு சம்பந்தமான பயிற்சி சான்றிதழோ அல்லது அனுபவ சான்றிதழோ கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் . திட்ட மதிப்பு 50000 ருபையாக இருந்தால் 100 % கடனாக பெற முடியும் அதுவே அதற்கு மேல் இருந்தால் திட்ட செலவு 85% கடனாக பெற முடியும் 


கடனை ஒன்பது ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தலாம் .


தேவையான ஆவணங்கள்


மேற்க்கூறிய அணைத்து வங்கிகளுக்கும் ஆவணங்களாக அடையாளச் சான்று ; வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை (Aadhar Card) / ஓட்டுநர் உரிமம் (Driving License) போன்ற முகவரி சான்றுகளுடனும் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து இதனுடன் திட்ட அறிக்கையும் சமர்ப்பித்தால் உங்களுக்கு கோழி பண்ணை அமைக்க கடன் வசதி கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

Post a Comment

0 Comments