plants for balcony garden and planting Tomato
ஒரு தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும் செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில் குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் . அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் .
சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்
தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம் அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் .
சரியான குரோபேக் தேர்ந்தெடுக்க வேண்டும்
ஒரு சின்ன தொட்டியிலும் தக்காளி செடி வளரும் ஆனால் நாம் எதிர்பார்த்த மகசூலை எடுக்கமுடியாது எனவே ஏற்கனவே சொன்னதுபோல் தக்காளி பெரிதாக வளரக்கூடியது , ஆகவே அதற்கான குரோபேக் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகிறது . சிறிய ரகத்தை தேர்ந்தெடுக்கும்போது 10-15 gallons குரோபேக்கை தேர்ந்தெடுக்கலாம் அதுவே பெரியரகமாக இருந்தால் 20 gallons குரோபேக்கை தேர்ந்தெடுக்கலாம்
சரியான மண்கலவையை தேர்ந்தெடுக்க வேண்டும்
உங்கள் தக்காளி செடியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மண்கலவைதான் . குரோபேக்ல் செடி வளர்க்கும் போது சரியான மண் கலவை இல்லையெனில் நாம் நீர் ஊற்றும்போது அதிகப்படியான சத்துக்கள் நீருடன் அடித்துச்சென்று விடும் . செம்மண் + கோகோபிட் + மண்புழுரம் 1:1:1 என்ற அளவில் பயன்படுத்தலாம் .
சரியாக நடவு செய்யுங்கள்
ஒருவேளை நீங்கள் நாற்றாக வாங்கினால் அதை உடனே நட்டுவிடுங்கள் நேரம் ஆக செடி பலவீனம் அடையலாம் , தக்காளி நாற்றில் கிளைகள் அதிகம் இருந்தால் இரண்டு கிளையை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை எடுத்துவிடலாம் , தக்காளி செடி நன்றாக தழைந்துவரும் . சிறு செடியாக இருப்பதால் நன்றாக வேர் விடும் கொஞ்சம் ஆழமாக நடலாம் .
ஸ்டேக்கிங்
குறைந்த உயரம் உடைய தக்காளி ரகத்தை தேர்வு செய்யும்போது சாயும் தன்மை குறைவு . இருந்தாலும் அதிக காய்கள் இருக்கும்போது சாய்வதற்கு வாய்ப்பு அதிகம் இதனால் செடியின் தண்டு பாதிக்கப்படும் எனவே குச்சி வைத்து ஸ்டேக்கிங் அல்லது கேஜிங் செய்து தக்காளி செடி படரும் படி வளர்க்கலாம் .
எந்த இடத்தில் வைக்கலாம்
பொதுவா ஒரு செடின்னு எடுத்துக்கொண்டால் சூரிய ஒளி என்பது முக்கியம் . தக்காளி செடியை பொறுத்தவரை குறைந்தது 6 மணிநேரமாவது சூரிய ஒளி இருந்தால்தான் நன்றாக வளர்ந்து அதிகமான பழங்கள் கொடுக்கும் . அதற்கேற்றாற்போல் இடத்தை தேர்வுசெய்யுங்கள் .
சரியான அளவு நீர்
நீரை பொறுத்தவரை சரியான அளவு கொடுக்கவேண்டும் அதுவும் தொட்டி செடியை பொறுத்தவரை தண்ணீர் மிக அளவாக கொடுக்க வேண்டும் . இரண்டு டம்ளர் நீரே போதுமானது . அளவிற்கு அதிகமான நீர் கொடுக்கும்போது தொட்டியில் உள்ள சத்துக்கள் அடித்து சென்றுவிடும் அடுத்து அழுகல் நோய் வந்து செடி சாய்ந்துவிடும் .
அளவான உரம்
நாம் வீட்டில் காய்கறிகள் வளர்ப்பதன் நோக்கமே சுத்தமான இயற்கையான காய்கறிகள் உண்பதற்காகவே எனவே முடிந்த அளவு இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள் . 10 நாட்களுக்கு ஒரு முறை மண் புழு உரம் கொடுக்கலாம் , 15 நாட்களுக்கு ஒரு முறை ஈ . எம் கரைசல் கொடுக்கலாம் . நைட்ரஜன் சத்துக்களோட அளவை குறைத்து பாஸ்பரஸ் , பொட்டாஷ் சத்துக்கள் அதிகம் கொடுக்கலாம் .
G.M
Smart Vivasayi
1 Comments
Great Blog
ReplyDeleteSmart vivasayi