Skip to main content

நம் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பூச்சி விரட்டிகள்.

natural pesticides



ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிட முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது , அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல் பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும் . இது வீட்டு  மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் , இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம் . நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் ,



வேப்ப இலை 



இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை . இந்த பூச்சிவிரட்டியை  மூணு விதமா தயாரிக்கலாம் . ஒன்னு நுனி வேப்ப இலையை நீர்ல போட்டு அதை செடிகளுக்கு தெளிக்கலாம் , வேப்பங்கோட்டை வைத்து கரைசல் செய்து பயன்படுத்தலாம் , கடைசியாக வேப்பஎண்ணெய் அதனுடன் சோப் கலந்து நீங்களே தயாரித்து தெளிக்கலாம் .


உப்பு கரைசல் 


குறைந்த செலவில் பூச்சியை விரட்டுவதில் இந்த உப்புக்கரைசல் . மிக சிறந்தது ஒரு வாளியில் நீரில் உப்பை கலந்து உங்கள் வீட்டுத்தோட்ட செடிகளுக்கு தெளிக்கலாம் (தெளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவும் மறந்தும் செடிக்கு ஊற்றிவிடாதீர்கள் ) 


வெங்காய -பூண்டு கரைசல் 



வெங்காயத்தையும் , பூண்டையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள் அதில் தண்ணீர் சேருங்கள் . கூட சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து காலையில் வையுங்கள் . மாலையில் பூச்சி விரட்டி தயாரிகிவிடும் . இதன் வாசம் பூச்சிகளை செடிகளிடம் நெருங்கவிடாது .



சாமந்தி பூ 


இந்த பூவில் பைரந்திரம் என்ற இயற்கையான வேதிப்பொருள் உள்ளது . வேப்பெண்ணை கரைசல் தெளிக்கும்போது அது பூச்சிகளின் செக்ஸ்வல் பகுதியை தாக்கி முட்டையிடாதபடி செய்யும்   ஆனால் இந்த சாமந்தி பூ கரைசலை தெளிக்கும்போது அது நரம்பு மண்டலத்தை தாக்கி பூச்சிகளையோ புழுக்களையோ உடனடியாக கொள்ளும் .  காய்ந்த சாமந்தி பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள் நீரில் பூட்டு 20 நிமிடம் கொதிக்க வையுங்கள் , சூடு குறைந்த பின்பு பாட்டிலில் போட்டு தெளிக்கலாம் . இதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து தெளிக்கும்போது நல்ல பலன் தரும் .


G.M

Smart Vivasayi








Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...