mulching helps in vegetables crops
மூடாக்கு ஏன் அவசியம் - impotance of mulching
நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு உதாரணமாக வைக்கோல் , இலை தலைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பதை மூடாக்கு என்போம் , தோட்டக்கலை பயிரிகளில் மரங்களை சுற்றி உயிர் மூடாகும் போடப்படுகிறது . நம் நாடு நான்கு விதமான பருவ நிலைகளை கொண்டது மழை காலங்களில் அதிகமான களைகள் வளரும் அதுவே வெயில் காலங்களில் வரட்சி ஏற்பட்டு அதிக படியான நீர் ஆவியாகும் , நீர் மட்டும் ஆவியாகாது அதனுடன் சேர்ந்து நாம் கொடுத்துள்ள உரங்களும் ஆவியாகி சென்றுவிடும் மண் புழு பூமிக்கு அடியில் சென்று விடும் , சரியான நுண்ணுயிர் பெருக்கம் இருக்காது . இதை எல்லாம் தவிர்க்கவே மூடாக்கு செய்யப்படுகிறது. நாம் இந்த கட்டுரையில் எந்த பொருட்களை பயன்படுத்தி காய்கறி பயிர்களில் முடக்கு போடலாம் என்று பார்க்கலாம்
வைக்கோல் மூடாக்கு - straw mulching
இந்த மூடாக்கு பொதுவா எல்லாரும் பயன்படுத்துவது . இது அதிக சூரிய வெளிச்சம் போகவிடாது . மண் நன்றாக வளப்படுத்தும் , நெல் அல்லது கோதுமையில் இருந்து பெறப்படும் வைக்கோல்களை பயன்படுத்தலாம் . ஆனால் இந்த வைக்கோல்லை உங்களுக்கு மிக அருகாமையில் உள்ள பகுதியிலிருந்து வாங்கலாம் . வெளியிலிருந்து வாங்கும்போது களை விதைகளும் உடன் வரலாம் .
காய்ந்த இலைகள் - dry leaves mulching
இந்தவகையான மூடாக்கிற்கு காய்ந்த இலைகள் சுலபமாக கிடைக்கும் . நீர் ஆவியாகாமல் பாதுகாப்பதோடு மண் வளத்தை பாதுகாக்கும் . இலைதழைகள் நன்கு மக்கி செடிகளுக்கு நன்கு உரமாகவும் பயன்படும் .
கம்போஸ்ட் - compost mulching
காய்கறி பயிர்களில் அதிகம் பயன்படுத்துவது இந்த கம்போஸ்ட் முடக்குதான் . இதை நம்மால் வீட்டிலே தயாரிக்க முடியும் அல்லது நீங்கள் வெளியில் இருந்தும் வாங்கலாம் . கடேசி உழவின் போதும் போட்டுஇருக்கலாம் , இப்பொழுது மூடாக்காக போடவேண்டும் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கத்திற்கு இது உதவும் . இந்தவகை மூடாக்கு அடிக்கடி போட வேண்டும் ஏன் எனில் கம்போஸ்ட் வேகமாக மண்ணுடன் கலந்து மக்கிவிடும் இதனால் களைகள் வேகமாக முளைத்துவிடும் .
மர பட்டை மற்றும் மரத்தூள் - sawdust mulching
இந்த வகை மூடாக்கு பெருமைப்பாலும் வீட்டு தோட்டத்தில் வைக்கப்படும் காய்கறிப்பயிர்களுக்கு பயன்படுத்தலாம் . நிலங்களில் அசிட்டிக் வகை நிலங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துவிடவும் கார்பன் : நைட்ரஜன் அதிகம் இருப்பதால் வைக்கோல் வகை மூடாக்கை விட இது மக்குவதற்கு தாமதமாகும் . இந்த மரத்தூள் உங்கள் அருகில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் . ஆனால் மற்ற மூடாக்கு வகைகள் இல்லை என்றால் மட்டுமே இதை தேவையான அளவு பயன்படுத்தவேண்டும் அதிகமானால் மண்ணின் கார அமிலத்தன்மை மாறலாம் .
மூடாக்கின் அளவு
நாம் பயன்படுத்தும் காய்கறிப்பயிர்களை பொறுத்து 2 முதல் 3 இன்ச் வரை போடலாம் . 2 இன்ச்சுக்கு கிழே குறைந்தால் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது , அதேசமயம் அதிகம் போட்டாலும் நீர் மண்ணுக்குள் இறங்காது .
தோட்டத்தில் மூடாக்கு போடும்போது
களைகள் இருந்தால் அகற்றிவிடுங்கள் , செடியில் இருந்து சிறிது இடைவெளி விட்டு நன்றாக பரவிவிடலாம்
mulching images
G.M
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi