Ad Code

ஆடு வளர்ப்பில் லாபம் பெற என்ன செய்யலாம் part-1

goat rearing part - 1 



ஆடு வளர்ப்பை ஒரு சரியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் விவசாயிகளின் ATM மிஷின் என்று சொல்லலாம்,  அந்த அளவிற்க்கு விவசயிகளுக்கு வருமானத்தை கொடுக்கக்கூடியது . விவசாயத்தோடு உப தொழில்தான் கால்நடை வளர்ப்பு ஆனால் விவசாயத்தின் மகசூல் குறையும் போது நமக்கு கைகொடுத்து நல்ல லாபத்தை தருவது இந்த கால்நடை வளர்ப்பே . இன்றய இளைஞர்களில் கோழி வளர்ப்பு தொழிலுக்கு அப்புறம் அதிகம் இருப்பது ஆடு வளர்ப்புதான் ஆனால் 10 பேர் இந்த தொழிலை ஆரம்பித்தாள் 2 பேர்தான் தொடர்ந்து நடத்துகின்றனர் மற்றவர்களால் அது முடியவில்லை இதற்கான காரணம் என்று பார்த்தல் போதிய அனுபவம் இன்மை , எடுத்தவுடன் சரியான பயிற்சி மற்றும் ஆலோசகர்கள் இல்லாமல் பெரிய முதலீடு செய்வது  போன்ற காரணங்களை  சொல்லலாம்  ஆடு வளர்ப்பை பொறுத்தவரை நல்ல லாபகரமான தொழில் இதில் நஷ்டம் வராமல் லாபம் பெற சில தொழில் நுட்பங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் .

எந்த ஆடு ரகத்தை தேர்ந்தெடுக்கலாம்



ஆடு வளர்ப்பை பொறுத்தவரை முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது எந்த ரக ஆடுகள் வாங்கலாம் எந்த ஆடு வேகமாக எடைபோடும் , நம்முடைய வளர்ப்பு முறைக்கு சாதகமாக இருக்குமா , அல்லது நம்முடைய தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் இப்படி தேர்ந்தெடுப்பது நல்லது .


அடுத்ததாக எந்த ரக ஆடுகள் வளர்ப்பதற்கு எளிமையா இருக்கும் , எந்த ரக ஆடுகள் அதிகமாக விற்பனை ஆகிறது இந்த இரண்டு விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் .



தமிழ் நாட்டை பொறுத்தவரை நாட்டு ஆடுகளான கன்னி ஆடு , கொடி ஆடு , சேலம் கருப்பு ஆடு, மோளை ஆடுகள்  போன்ற ஆடுகள் மாவட்ட வாரியாக இருக்கிறது சிவகங்கை , ராமநாதபுரம் விழுப்புரம் பகுதிகளில் கன்னி மற்றும் கொடி  ஆடுகளோட விற்பனை அதிகமாக இருக்கும் . சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் சேலம் கருப்பு ஆடுகளின் விற்பனை அதிகமாக இருக்கும் .


தலைச்சேரி ஆடு 


தமிழ் நாடு முழுவதும் தெரிந்த ரகம் , அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகம் , இரண்டு குட்டி போடக்கூடியரகம் இரண்டு குட்டி போட்டாலும் பால் கொடுப்பதில் எந்த பிரச்னையும் வராது  . பிறந்த குட்டியோட எடை 2 கிலோ வரை இருக்கும் மூன்று மாத குட்டி 11 கிலோ எடை வரைகூட வாய்ப்புள்ளது இது தீவனத்தை பொறுத்து வேறுபடலாம் . இந்த தளிச்சேரி ஆடுகள் ஆறு மாதம் வரும்பொழுது சராசரியாக 15 கிலோ வரை எட்டும் 9 வது மாதத்தில் 20 கிலோ எடை வரை போகும் . நல்ல தாய்மை பண்பு உடையது .



காது ஆடு என்று அழைக்கப்படும் ஜமுனாபாரி ஆடுகள் அதிக பால் வளம் கொண்டவை ஒரு சில பகுதிகளில் மட்டுமே இதன் விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது . வெளிநாட்டு ரகம் என்று பார்த்தால் போயர் ரக ஆடுகள் நல்ல பெரிதாக கன்னுகுட்டி மாதிரி வளரும் . விற்பனை வாய்ப்பு என்பது மிக குறைவு இந்த ரகத்தில். தீவன  மாற்று திறன் இருக்கக்கூடியது , வேகமாக அதிக எடையை அடையக்கூடியது 


வெள்ளாடு வளர்ப்பின் சிறப்புகள் 


குறைந்த முதலீட்டில் சிறந்த சுய தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் வெளாடு வளர்ப்பை தேர்வு செய்யலாம் . இந்த வெளாடுகள் சராசரியாக 2 குட்டிகள் வரை ஈனும் தன்மை கொண்டது . பெட்டை ஆடுகள் 1 வருடத்திற்கு அப்புறம் குட்டிகள் ஈன ஆரம்பிக்கும் , 2 வருடத்திற்கு மூன்று முறை வரை குட்டிகள் ஈனும் . இதை தவிர்த்து இறைச்சி , பால் , மற்றும் தோல் விற்பனை செய்யலாம் . ஆட்டு புழுக்கை உரமாக பயன்படுத்தப்படுவதால் அதையும் விற்பனை செய்யலாம் .


ஆடுகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம் 


ஒரு பண்ணை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது மிக முக்கியம் . நீங்கள் குட்டி ஆட்டுக்களாக வாங்கி அதைவளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்கலாம் அல்லது பெரிய ஆடுகளாக வாங்கி அந்த ஆடுகள் மூலம் இனப்பெருக்கம் செய்து குட்டிகளாகவோ இறைச்சிக்காகவோ விற்கலாம் .

ஆடுகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம்


கிடா ஆடுகள் 


கிடா ஆடுகள் வாங்கும் போது நல்ல கூடுதலான உயரம் , அகன்ற மார்புகள் கால்களோடு பலம் , நீளமான உடல் வாகு போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் . ஆணுறுப்புகள் பெருத்து உடலோடு ஒட்டியிருக்க வேண்டும் விதை பை 25 முதல் 35 சுற்றளவு இருக்கவேண்டும் .


பெட்டை ஆடுகள் 


பெட்டை ஆடுகளின் தோல் நல்ல மினு மினுப்பாக இருந்தாலே ஆடு ஆரோக்கியமானதாக இருக்கு என்று அர்த்தம்  . அடுத்து முகப்பகுதியில் , சலியில்லாமல் நன்றாக மூச்சு விடுகிறதா என்று பார்த்து கொள்ளவேண்டும் . அசை போடக்கூடிய பண்புகள் இருக்க என்பதையும் கவனிக்க வேண்டும் . கண் பகுதி பாருங்கள் சிகப்பாக இருந்தால் நல்ல ரத்த ஓட்டம் உள்ள ஆடு .


ஒரு மாவட்டத்திலிருந்து தூரமாய் போய் வாங்குவதை விட உங்கள் மாவட்டத்திலேயே ஆடுகள் வாங்குவது நன்றாக இருக்கும் . முடிந்தளவு சந்தைகளில் ஆடு வாங்குவதை தவிர்த்துவிடவும் , சந்தைகளில் விற்கப்படும் ஆடுகள் 75 சதவீதம் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன . நீங்கள் பண்ணைகளிலோ அல்லது விவசாயிகளிடமோ வாங்குவது நல்லது .

         G.M






Post a Comment

0 Comments

Comments

Ad Code