ants control methods vegetable garden
விவசாயத்தை பொறுத்தவரை எறும்புகள் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேள்வி கேட்டால் பதில் சில நேரங்களில் நல்லவன் சில நேரங்களில் கெட்டவன் என்றுதான் பதில் சொல்ல முடியும் . எறும்புகள் நல்லவன் என்பதற்கு உதாரணம் சொல்லணுமுனா , உங்களுக்கு ஜாதவ் பயேங் பற்றி தெரியுமா , அவர்தான் பிரம்மபுத்திரா நதி வறண்ட தீவுகளில் தனி ஒரு ஆளாக பெரிய காட்டை உருவாக்கியவர் . அந்த வரண்ட இறுகிய நில மண்ணை பண்படுத்த அவர் பயன்படுத்தியது சிவப்பு எறும்புகளைத்தான் , இதிலிருந்து புரிந்திருக்கும் ஒரு மண் வளமாக்க எறும்பு எவ்வளவு முக்கியம் என்று . சில சமயங்களில் எறும்புகள் சிறந்த பால்லினேட்டராகவும் செயல் படுகிறது . அப்ப எறும்புகளால் என்ன பாதிப்பு ? இப்ப ஒரு தேனியை எடுத்துக்கொண்டால் பறந்து சென்று மகரந்தத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் . அதுவே எறும்பு ஊர்ந்து சென்று எடுக்கும் அதன் கால்களில் ஓட்டும் தேன் செடிகளில் பரவி பூஞ்சை நோயை உருவாக்கும் . மண் பகுதியில் இருக்கும் போது செடிகளின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் , சில சமயம் பழங்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும். நாம் இந்த கட்டுரையில் இயற்கை முறையில் எறும்புகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம் .
நம்ம தோட்டத்தில் உள்ள பலவகையான எறும்புகள் - Types of ants
பலவகையான எறும்புகள் இருந்தாலும் சிலவகை எறும்புகளால் மட்டுமே செடிகள் பாதிக்கப்படுகின்றன . சித்தெறும்பு , கருப்பு எறும்பு இந்த வகை எறும்புகளை ஆங்கிலத்தில் Nuisance Ants (தொல்லை தரும் எறும்புகள் ) என்று சொல்வார்கள் . இவை பொதுவாக மரங்கள் அல்லது செடிகளின் அருகில்தான் காலணிகளை அமைக்கும் . இதனால் , செடிகளின் வேர்கள் பாதிக்கப்படும் . அடுத்ததாக கருப்பு எறும்புகளில் கடிப்பவை இவை தன் காலனி பாதையை சுற்றி மேடு எழுப்பி வைக்கும் (Mound -building Ants ) இவை செடிகளின் மேல் ஏறி தேன் எடுக்கும், Aphids செடியில் இருந்தால் எடுத்துவந்து தன் காலனியில் வைத்துக்கொள்ளும் . அடுத்ததாக நெருப்பு எறும்பு இந்தவகை எறும்புகள்தான் புற்றுக்கட்டும் இதன் அடிப்பகுதியில் கொடுக்கு இருக்கும் புற்றுக்கு ஆபத்து ஏற்படும்போது கொட்டும் . பெரும்பாலும் இந்தவகை எறும்புகளே வயல்களிலும் வீட்டுத்தோட்டத்தில் காணப்படும் இவற்றை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்
சிட்ரஸ் பழ தோல்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழ தோலை எடுத்து நீரில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வையுங்கள் செடிகளின் மேல் தெளிக்கலாம் ஏறும்போட புற்று பார்த்து அதை சுற்றி தெளிக்கலாம் . வீட்டுத்தோட்டம் , மரங்களில் உள்ள எறும்புகளை விரட்ட நல்ல பலன்தரும் .
போராக்ஸ்
இந்த மிக்ஸர் எறும்புகளை அழிப்பதில் சிறந்தது . போராக்ஸ் மிக்ஸர் இதனுடன் பாதியளவு சக்கரை கலந்து எறும்புகள் இருக்கும் பகுதிகளில் தெளிக்கும்போது , சக்கரையால் கவர்ந்திழுக்கும் எறும்புகள் அதை சாப்பிடும்போது அழியும் .
பூண்டு
பூண்டு ஒரு 5 பல்லு எடுத்துக்கொள்ளுங்கள் எறும்பு எந்தவழியாக வருகிறதோ அந்த ஓட்டையில் 2 வையுங்கள் . அடுத்த சில தினங்களில் எறும்பு இடத்தை காலிசெய்துவிட்டு போய்விடும் .
இலவங்கப்பட்டை
இந்த இலவங்கப்பட்டையின் வாசம் ஒரு எறும்புக்கும் மற்றொரு எறும்புக்கு உள்ள தொடர்பை அறுத்துவிடும் எறும்பு மறுபடியும் புற்று நோக்கி செல்லாது இலவங்கப்பட்டை அரைத்து உங்கள் காய்கறி தோட்டத்தில் எறும்புகள் நடமாடும் பகுதிகளில் தூவி விடுங்கள்
சுடுதண்ணீர்
எறும்புகளை அளிப்பது நல்ல பலன்தரக்கூடியது இந்த முறை மட்டுமே . மேல் கூறிய அணைத்து வழிகளிலும் நாம் அழிப்பது வேலைக்கார எறும்புகளை மட்டும் , ஆனால் இதில் புற்றுக்குள் இருக்கும் ராணி எறும்பை அழிக்க முடியும் . 5 லிட்டர் சுடுதண்ணீரை நன்கு கொதிக்கவைத்து எறும்பு எறும்பு புற்று ஓட்டைக்குள் ஊற்றுங்கள் , ராணி எறும்பு அழிந்துவிடும் . ராணி இல்லைனா எறும்பு புற்று அழிந்துவிடும் . இந்த முறை நல்லது என்றாலும் செடிக்கு அருகில் புற்று இருந்தால் மற்ற முறைகளை கையாளவும் .
By
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi