agriculture startup ideas in tamil
விவசாயத்தை பொறுத்தவரை இந்தியா உலகளவில் மிக முக்கியமான நாடு . பருப்பு வகைகள் சணல் மற்றும் மசாலா பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்திலும் , அரிசி கோதுமை , கரும்பு , நிலக்கடலை , காய்கறிகள் , பழங்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளன . ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை பெருக்கம் . மக்கள் தொகை பெறுக பெறுக விவசாயம் செய்யும் நிலம் அளவு குறையும். நாடு தற்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தேவைக்கு அதிகமாக செயற்கை உரங்களை போடுவதால் நிலம் தன் வளத்தை இழக்கும் , காலநிலை மாறுபடும் , நீர் அதிகம் தேவைப்படும் மேலும் விவசாயிகளிடம் தொழில் நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படலாம் . இந்த குறையை போக்குவதற்கு கடந்த 10 வருடங்களாக நிறைய விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் உருவாகி உள்ளன இந்த ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் விவசாயிகளின் முன்னேற்றத்தில் பெரிய பங்குவகிக்கின்றன மேலும் இவை விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளன நாம் இந்த கட்டுரையில் இந்தியாவின் முதல் ஐந்து நிலையில் உள்ள ஸ்டார்ட் -அப் நிறுவனங்களை பற்றி பார்ப்போம் .
பாரத் அக்ரி
இது புனேவில் தொடங்கப்பட்ட விவசாய ஸ்டார்ட்-அப் ஆகும் 2017 ஆம் ஆண்டு Siddharth dialani and Sai gole ஆகியோரால் 2,5 மில்லியன்னில் 30 பேர் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது . 2021 நில் பிளான்டிக்ஸ் ,FASAL, CROP DATA போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக இன்று பாரத் அக்ரி இருக்கிறது .
இன்றய தேதியில் 4.5 லச்சம் இலவச உறுப்பினர்களையும் 45000 paid உறுப்பினர்களையும் கொண்டுள்ளது மேலும் இதுவரை 7லச்சம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது .
2017 நடந்த UberPITCH போட்டியில் வென்றதால் uber நிறுவனம் 50000 டாலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது .
அஃரோ வேவ் (agroWave)
ஐ ஐ டி மாணவியான அணு மீனா ராஜஸ்தான் மாநிலத்தில் மோனாலி கிராமத்தை சேர்ந்தவரான இவர் தன் நண்பர்களான Payal Jawalkar and Arun yadav உடன் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு அஃரோ வேவ் ஸ்டார்ட் - ஆப் நிறுவனத்தை ஆரம்பித்தனர் . விவசாயிகள் அறுவடைக்கு பின் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் ஏற்பட்ட சிரமத்தை குறைக்க இந்நிறுவனம் பெரிதும் உதவுகிறது .
2107 லில் 7 லச்சம் Us டாலரில் 40 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது இன்று வருடத்திற்கு 14 கோடி வருமானம் ஈட்டுகிறது என்றால் விவசாயிகள் இதன் மூலம் எவ்வளவு பயன் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம் இந்த நிறுவனமும் 2017 நடந்த UberPITCH போட்டியில் வென்றதால் uber நிறுவனம் 50000 டாலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது
BigHaat
2015 தில் Sachin Nandwana and Sateesh N ஆகியோரால் 70 உறுப்பினர்களுடன் 3 மில்லியன் டாலரில் இந்த BigHaat ஸ்டார்ட் -அப் நிறுவனம் பெங்களூரில் தொடங்கப்பட்டது . இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு. ஆன்லைன் ஆர்டர் மூலம் பொருட்களை விற்பது , விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது . இதனால் காய்கறிகள் உங்கள் பகுதியின் அருகிலேயே கிடைக்கச்செய்து போக்குவரத்துக்கு செலவை குறைப்பது போன்றவையாகும்
2021 னின் கணக்கின் படி 4 மில்லியன் விவசாயிகளை இணைத்துள்ளது இந்த நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் மட்டும் 52 பில்லியன் ஆகும் .
0 Comments
Smart vivasayi