Home And Garden
வீட்டுத்தோட்டம் vs மாடித்தோட்டம் .
விவசாயம் விதை மற்றும் கன்றுகள் ,உயிர் உரங்கள் , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் -Click Here
வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பற்றி குழப்பம் இருக்கலாம் . இங்கே மாட்டித்தோட்டம் என்பது நீங்கள் உங்கள் செடிகளை மாடியில் மட்டுமே வளர்த்தால் அது மாடித்தோட்டம் . அதுவே நீங்கள் வீட்டின் முன்னாலோ அல்லது பின்னாலோ உள்ள காலியிடத்தில் உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வளர்த்தால் அது வீட்டுத்தோட்டம் . கிராமம் , சிறுநகரம் , நகரம் இந்த வீட்டுத்தோட்டம் அதிகம் இருக்கிறது அதுவே , பெரு நகரங்களில் பெரும்பாலும் மாடித்தோட்டங்களே அதிகம் உள்ளன . நாம் இந்த கட்டுரையில் நீங்கள் வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்கப்போகிறீகள் அதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம் .
1) முதலில் உங்கள் வீட்டை சுற்றி எவ்வளவு இடம் உள்ளது என்று பாருங்கள் . அரை செண்டிற்கு குறைவாக இருந்தாலும் சரி இரண்டு அல்லது மூன்று சென்ட் நிலமாக இருந்தாலும் சரி நீங்கள் முதலில் முடிவு செய்யவேண்டியது என்னவிதமான காய்கறிகள் அல்லது மரங்கள்
2) அடுத்து காய்கறிகளில் இரண்டு வகை உண்டு ஓன்று செடி வகை மற்றொன்று கொடிவகை . இதில் உங்களுக்கு என்னவகையான காய்கறிகள் தேவை என்பதை பொறுத்து வீட்டுத்தோட்டத்தை திட்டமிடுங்கள் சில காய்கறிகள் உங்களுக்கு தினமும் தேவைப்படலாம் தக்காளி , வெங்காயம் , பச்சைமிளகாய் , புதினா ,கொத்தமல்லி ,கருவேப்பில்லை . அடுத்ததாக வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தேவைப்படும் காய்கறிகள் வெண்டைக்காய் , கத்தரிக்காய் , முள்ளங்கி மற்றும் கொடிவகை காய்கறிகள்
3) எந்த பருவத்தில் எந்தவிதமான காய்கறிகள் பயிர் செய்யவேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது தக்காளி வெண்டை போன்ற பயிர்கள் வருடம் முழுவதும் வரும்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த , கால்நடை மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ் ஆஃப் லிங்க்ஸ் Click Here
4) நீங்கள் வீட்டுத்தோட்டம் அமைக்கும் பகுதியில் எவ்வளவு வெயில் கிடைக்கும் என்று பாருங்கள் . வெயில் சரியாக இருந்தால் ஓட்டுவகை மரங்களை நடலாம் . இந்த ஒட்டு வகை செடிகளின் அடிப்படை குட்டையாக இருக்கும் விரைவாக காய் காய்க்கும் . ஒருவேளை கட்டிடங்களால் வெய்யில் பாதிக்கப்பட்டால் குட்டை ரக மரங்கள் தங்கள் இயல்ப்பை மீறி வேகமாக வளரும் எனவே சூரிய ஒளி தேவையான இடைவெளி இரண்டும் மிக முக்கியம் .
5) வீட்டு தோட்டத்தை பொறுத்தவரை குறைந்த இடத்தில் அதிக செடிகள் நடுவதை தவிர்த்து விடலாம் . குறைந்த இடத்தில் அதிக இடத்தில் நடுவதால் பூச்சி நோய்க்கு சுலபமாக தாக்கும் செடிகள் இயல்ப்பை மீறி வளரும் தமிழ் நாட்டை பொறுத்தவரை பழமரங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் வெயிலை விரும்புபவை அதை நிழலுக்கு கொண்டு செல்லும்போது விளைச்சல் பாதிக்கலாம்
6) வீட்டுத்தோட்டத்தை பொறுத்தவரை நீர் அளவாக கொடுக்கவேண்டும் காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தால் மிக நன்று தேவையான இடு பொருட்களும் சீரான இடைவெளியில் கொடுக்கவேண்டும் .
7) பொதுவா வீட்டுக்கு தேவையான பொரியலுக்கு தேவையான காய்கறிகள் கொடி வகை காய்கறிகளாக இருக்கும் வெர்ட்டிகள் ஆக இந்த கொடி வகைகளை வளர்க்கலாம் .
8) வீட்டுத்தோட்டம் நல்ல முறையாக செயல்பட தேவையான நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும் ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு இலையும் பார்த்து மக்கி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். செடி உயரமாக வளர்ந்தால் குச்சி கட்டி விட வேண்டும்.வேர்கள் வெளியே தெரிந்தாலும் மண்கலவை போட வேண்டும்.
எவ்வளவு நேரம் நாம் மாடித் தோட்டத்திற்கு என செலவிடுகிறேமோ அவ்வளவு விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம்.பொறுமைதான் மாடி,வீட்டுத்தோட்டத்திற்க்கு ரொம்ப முக்கியம் வீட்டுத் தோட்டம் என்பது ரசாயனங்கள் தெளிக்காமல் வளர்த்து விளைச்சல் எடுப்பதுதான் அடிப்படையே
இவையெல்லாம் தான் நாம் தோட்டத்தில் ஜெயிக்க அடிப்படை விஷயம்.
G.M
Smart Vivasayi
0 Comments
Smart vivasayi