tomato cultivation methods தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் . நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை தேர்ந்தெடுங்கள் மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள் . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம் வெளிச்சம் நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்