Why the banana explodes at the base
கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த 100 மேற்பட்ட வாட்ஸ்அப் குழு உள்ளன click here
இதறகு முக்கிய கரணம் என்றால் அது வெப்ப நிலை மாற்றம்தான் எங்கே அல்லது எந்த பகுதியில் அதிகமாக வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அங்கே வாழையின் அடிப்பகுதி வெடிக்கும் . இப்படி அடியில் வெடிப்பது பாக்கு மரம் , வாழை மற்றும் மென்மையான அடிப்பகுதி கொண்ட மரங்களில் அடிப்பகுதியில் வெடிப்பு வரும் . அதாவது மதியநேரத்து வெயில் 1 மணி முத்துல 4 மணிவரை கடுமையாக இருக்கும் அந்த நேரத்தில் யு வி கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனால் வாழையின் அடிப்பகுதி கிழியும் கிழிந்த இடத்தில் பூஞ்சை தொற்று உண்டாகி வெடிப்பு பெரிதாகும்
இதனை கட்டுப்படுத்த இலைகள் பெருகுகிற மாதிரியான அமைப்பில் நாம் வளர்த்திருக்க வேண்டும் . தரையில் ஊடு பயிர் போடலாம் . இதை உடனடியாக செய்யமுடியாது . எனவே முதலில் தண்ணீர் அதிகம் இருக்கிற மாதிரி கொடுக்கவேண்டும் .
TAMIL NADU AGRICULTURE CONTACTS விவசாயம் விதை மற்றும் கன்றுகள் ,உயிர் உரங்கள் , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் - CLICK HERE
தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராகலாம் - CLICK HERE
பூஞ்சாண கொல்லிகள்
சூடோமோனஸ் , விரிடி , பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ ஏதாவது ஒன்றை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து வெடிப்பு வந்த இடத்தில தெளிக்கலாம் .
சத்து குறைபாடு
இதை தவிர்த்து வாழையில் வெடிப்பு வந்தால் அது சுண்ணாம்பு சத்து அல்லது சாம்பல் சத்து குறைவாக இருந்தால் மரத்தின் வலு குறைந்து வெடிப்பு வரலாம் . இதற்கு நீங்கள் வாழை நடுவதற்கு முன்பே மண் பரிசோதனை செய்வது அவசியம் . இதற்கு 200 லிட்டர் நீரில் 3 கிலோ சுவற்றிக்கு அடிக்கும் சுண்ணாம்பை கலந்து அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பை கலந்து அந்த தண்ணீரை பாசனம் செய்யும் போது எல்லா பயிர்களுக்கும் ஊற்றிவிடலாம்
சாம்பல் சத்து
வாழை நட்ட 5வது மாதத்திலிருந்து ஓவுவொரு மரத்திற்கும் இரண்டு கை அள்ளும் அளவிற்கு உள்ள சாம்பலை கொடுப்பது நல்லது .
இந்த மாதிரி செய்வதால் வாழைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதை தங்கும் சக்தியும் கிடைக்கும் இதனால் வாழை அடி பகுதியில் வெடிப்பது நிற்கும்
Comments
Post a Comment
Smart vivasayi