Why Seed Testing
இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம் எனில் அதற்கு காரணம் உழவர்களுக்கு நல்ல தரமான விதையை உரிய காலத்தில் விநியோகித்ததே என்று கூறினால்அது மிகையாகாது. நல்ல தரமான விதையானது இந்தியஅரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விதை சான்றளிப்புத்தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் விதையின் நலத்துடன் கூடிய வீரியம் கொண்டிருக்கவேண்டும்.
விதை உற்பத்தி விநியோகம் போன்ற முக்கியமான திட்டத்தில் விதைப்பரிசோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் நல்ல தரமான விதைகளா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் உத்திகளே விதைப்பரிசோதனையாகும். விதைப்பரிசோதனை என்பது விதைகளின் தரத்தை விஞ்ஞான பூர்வமாகத் தெரிந்து கொள்ளஉதவுவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட விதை தரமானதா என்றுகண்டறியவும் உதவுகின்றது. தரமான விதைகளின் பயன்பாடு 15 - 20 சதம் அதிகமான விளைச்சலுக்கு வழிவகுக்கின்றது.
விதைப்பரிசோதனையின் பயன்கள்
1. விதைப்பதற்கு உதவியாக விதைகளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
2. விதைத்தரத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அதற்குண்டான காரணங்களையும் அறிய முடிகிறது.
3. விதைகளைக்காய வைக்கவும், சுத்தம் செய்ய வேண்டியதன் தேவையையும் அறிந்து அதற்குண்டான தக்க வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.
4. விதைத்தரத்திற்கு உட்பட்டு சான்றளிப்புக்கு ஏற்றதுதானா என்பதை கண்டறிய உதவுகிறது.
5. விதைத்தரம் உறுதி செய்யப்பட்டு அதன் அடிப்படையில்விலையை நிர்ணயிப்பதால் பொருள் நுகர்வோர், தரம் அறிந்துபெற முடிகிறது.
6. விதைச்சட்டம் அமலாக்கத்திற்கு மிகவும் பயன்படுகிறது.
1. புறத்தூய்மை பயிர் அறுவடை முடிந்து, கதிரடித்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதைக் குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகள் உடனடியாக விதைப்பதற்கோ, நடவு செய்வதற்கோ
தகுதியானதாக இருக்காது. அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி மற்றும் பொக்கு விதைகள் கலந்து இருக்கும். எனவே, அறுவடை முடிந்து பிரித்தெடுக்கப்படும் விதைகள் சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றி இருக்கவும் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். புறத் தூய்மை சோதனை இதனை உறுதி செய்ய மேற்கொள்ளப் படுகிறது.
விதையின் புறத்தூய்மை என்பது குறிப்பிட்ட பயிர் விதையைத்தவிர பிற பயிர் வகைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களின் கலப்பு இல்லாமல் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெவ்வேறு பயிர் விதைகளில், குறைந்தளவு புறத்தூய்மையானது 95 முதல் 100 சதவிகிதம் வரை இருத்தல் வேண்டும். வெண்டை (99%), ராகி, எள்( 97%), நிலக்கடலை (96%) காரட், கொத்தமல்லி (95), மற்றவை (98%).
2. இனத்தூய்மை விதைத்தரம் பேணப்படுவதில் இனத்தூய்மை முக்கிய பங்கு வகிக்கின்றது. இனத்தூய்மை என்பது விதைப் பயிரானது தாயாதிப் பயிரின் மரபியல் குணங்களை ஒத்திருக்க வேண்டும். இனத்தூய்மை கொண்ட விதைக்குவி-
யலால் அதிக விளைச்சலும், வம்சாவழியின் குணங்களும் கிடைப்பது சிறப்பம்சமாகும்.
3. முளைப்புத்திறன் என்பது நாம் விதைக்கும் விதையின் எவ்வளவு விதைகள் நன்கு முளைத்து நல்ல செடிகளை கொடுக்கின்றன என்பதைக் குறிக்கின்றது.நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை விதைப்பதன்மூலம் வயலில் பயிர்கள் நிறைவான பயிர் எண்ணிக்கையில் செழித்து வளரும்
ஆனால், அதே சமயம் முளைப்புத்திறன் குறைந்த
விதைகளை பயன்படுத்தினால் குறைந்த எண்ணிக்கையில்பயிர்கள் வளர்ந்து விளைச்சல் பாதிக்கப்படும். விதைச்சட்டம் 1966 பிரிவு 7ன்படி ஒவ்வாரு பயிருக்கும் மேற்கூறியவாறு
குறைந்த அளவு முளைப்புத்திறன் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
1. நெல் 80. 16. கீரை 70.
2. சோளம் 75 17. வெண்டை 65
3. கம்பு 75 18. புடலை 6௦
4. ராகி 75 19. பூசணி 6௦
5. பாசிப்பயறு 75 20. பாகற்காய் 6௦
6. உளுந்து 75 21. காரட் 6௦
7. துவரை 75 22. பீட்ரூட் 6௦
8. தட்டைப்பயறு 75 23. முள்ளங்கி 60
ஓ. நிலக்கடலை 70 24. நூல்கோல் 7௦
10. சூரியகாந்தி 70 25. காயம் 7௦
1. எள் 80 26. சீனிஅவரை 70
12. வீரியப்பருத்தி 75 27. முருங்கை 70
13. இரகப்பருத்தி 65 28. கொத்தமல்லி 65
14. தக்காளி 70 29. ஃபிரெஞ்சு பீன்ஸ் 75
4. ஈரப்பதம் சோதனை
விதையில் ஈரப்பதம் உள்ளதைப் பொறுத்தே அவ்விதைக்குவியலின் ஆயுள் நிர்ணயிக்கப்படுகின்றது. ஒரு விதையின்
ஈரத்தன்மை அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோஇருக்கக்கூடாது. சரியான ஈரப்பத நிலையில் உள்ள விதைகள் பூச்சி, பூஞ்சாண தாக்குதல் இன்றி நீண்ட நாட்கள் சேமித்து
வைக்கக்கூடிய நிலையில் இருக்கும்.
நீண்டகால சேமிப்புக்கு - 8 சதவிகிதம் மற்றும் அதற்குகுறைவாக
குறைந்த கால சேமிப்புக்கு - 10 முதல் 13 சதவீதம்
5. பிறரக விதை சோதனை
விதைக்குவியலில் பிற ரக விதைகள் கலந்துள்ளனவா என்பதை நுண்ணோக்கி மூலம் கண்காணித்து இரகத்தின் குணநலன்களைக் கருத்தில் கொண்டு பிரித்தறியப்படுகிறது. இதனால் விதையின் இனத்தூய்மை பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக, சான்று நெல் விதைகளில் பிற. இரக விதைகள் ஆயிரம் விதைகளில் இரண்டூ விதைகள் மட்டுமே (அதாவது ௦.2 சதவிகிதம்) இருக்கலாம். ஆதார விதைகளில் இரண்டு ஆயிரம் விதைகளில் ஒரு விதை (அதாவது 0.05 சதவிகிதம்) மட்டுமே இருக்கலாம். விதைகளில் ஒரு விதை கூட கலப்பு விதையாக இருக்கக்கூடாது.
விதை நல பரிசோதனை
தரமான விதைகள் என்பது, பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள்இல்லாமல் தூய்மையானதாக இருக்க வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாணங்களால் பாதிக்கப்பட்ட விதைகள் முளைப்புத்திறன்மற்றும் வீரியத்தை இழப்பதால் பெருமளவு விளைச்சல் பாதிப்பையும் ஏற்படுத்தும். கண்களுக்குத் தெரியாத கிருமிகளால் தாக்கப்பட்ட விதைக்குவியல்கள் தரம் குறைவானதாகவும், நீறம் மாறியும் இருக்கும். எனவே, பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதலைக் கண்டறிய விதை நலப்பரிசோதனை செய்வது அவசியம்.
Comments
Post a Comment
Smart vivasayi