Tomato cultivation in india - tomato value-added -dry fruit tomato
100 க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ் ஆப் குரூப் இணைந்து பயன்பெறுங்கள் Click Here
நம் உணவில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் தக்காளி முக்கிய பங்குவகிக்கிறது. தக்காளி இல்லாமல் குழம்பு என்பது சாத்தியமற்றது. அப்படிபட்ட தக்காளி அதிகமாக கிடைக்கும் காலங்களில் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியாமல் விவசாயிகள் கீழே கொட்டும் அவலம் இன்று வரை தொடர்கிறது. இந்த நிலை மாற நம் விவசாயிகளே தக்காளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட
உணவுகள் தயாரித்து விற்கலாம். நம் அரசாங்கமும் வேளாண் வணிகத்துறை மூலம் நிறைய உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி விவசாயிகளையே வியாபாரிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட வருகின்றது. இம்மாதிரியான குழுக்கள் தக்காளியிலிருந்து மற்றும் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்து விற்று இலாபம் பெறலாம். தக்காளியிலிருந்து சாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம் என்றாலும் உலர் தக்காளி பழ துண்டுகள் தயாரித்தால் நீங்கள் தக்காளி பழமாகவே நான்கு மாதங்களுக்கு வைத்திருக்கலாம் . அதை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம் .
உலர் தக்காளிதுண்டுகள்
நன்கு பழுத்த நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாத தரமான தக்காளி பழங்களை தேர்த்தைடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் நன்றாக கழுவி 0.5 செ .மீ தடிமனில் வட்ட வடிவமான சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
நன்றாக கழுவி ஐந்து நிமிடம் கொதிநீரில் போட்டு உடனடியாக குளிர்ந்த நீருக்கு மாற்றி தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
தோலுரித்த தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வாணலியில் சிறிதளவு எண்ணய் ஊற்றி அனைத்து மசாலா பொருட்களையும்போட்டு தாளித்து பின் வெட்டி வைத்த தக்காளியை போட்டு வதக்க வேண்டும்
இவற்றை ஒரு மல் துணியில் பரப்பி வைத்து சூரிய வெப்பம் அல்லது மின் உலர்ப்பான் அல்லது சூரிய உலர்த்தியில் உலர்த்தலாம்.
சூரிய வெப்பத்தில் உலர்த்தும் போது இரண்டு முதல் 3 நாட்கள் ஆகும் கூரிய உலர்த்தியில் (50-55 c) உலர்த்த 48 மணி நேரம் ஆகும். மேலும் மின் உலர்ப்பானில் (60-65 c) 8 மணி நேரத்தில் உலர்த்தலாம் .
பிறகு காற்றுபுகா வண்ணம் நைகிழிப்பைகளில் அடைத்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு உலர்த்தப்பட்ட தக்காளி பழத்துண்டுகள் 4 மாதம் வரை கெடாமல் இருக்கும்
இவ்வாறு உலர்த்தப்பட்ட தக்காளி பழத்துண்டுகளை தேவைப்படும்போது அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் நீரை உறிஞ்சி அழகான தக்காளி பழத்துண்டுகளாக மாறிவிடும்.
இவற்றை தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் போன்ற உணவு வகைகள் தயாரிக்க பயன்படுத்தலாம்
உலர்த்தப்பட்ட பழத்துண்டுகளை பொடி செய்து பொடியாகவும் நெகீழி பைகளில் அடைத்தும் பாதுகாக்கலாம்.
G.M
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi