Why Seed Testing இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம் எனில் அதற்கு காரணம் உழவர்களுக்கு நல்ல தரமான விதையை உரிய காலத்தில் விநியோகித்ததே என்று கூறினால்அது மிகையாகாது. நல்ல தரமான விதையானது இந்தியஅரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விதை சான்றளிப்புத்தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் விதையின் நலத்துடன் கூடிய வீரியம் கொண்டிருக்கவேண்டும். விதை உற்பத்தி விநியோகம் போன்ற முக்கியமான திட்டத்தில் விதைப்பரிசோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் நல்ல தரமான விதைகளா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் உத்திகளே விதைப்பரிசோதனையாகும். விதைப்பரிசோதனை என்பது விதைகளின் தரத்தை விஞ்ஞான பூர்வமாகத் தெரிந்து கொள்ளஉதவுவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட விதை தரமானதா என்றுகண்டறியவும் உதவுகின்றது. தரமான விதைகளின் பயன்பாடு 15 - 20 சதம் அதிகமான விளைச்சலுக்கு வழிவகுக்கின்றது. விதைப்பரிசோதனையின் பயன்கள் 1. விதைப்பதற்கு உதவியாக விதைகளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 2. விதைத்தரத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்