Ad Code

Ticker

6/recent/ticker-posts

நெற்பயிரில் பாக்டீரியல் குலை நோய்

 paddy pest and diseases - Bacterial blight



இந்த நோயோட தாக்கம் முதலில் எங்கிருந்து வரும் என்றால் நாம் நெல் விதையை விதைநேர்த்தி சரியாக  செய்யாமல் விதைத்தால் வரும் . அல்லது சரியாக பண்படாத அல்லது சரியாக முளைக்காத விதை நெல்லாக இருந்தால் அதிலிருந்து வரும் . இதை சரி செய்வதற்கு விதைப்பதற்கு முன்பு நெல் விதையை தரையில் பரப்பி சரியில்லாத விதைகள் பூஞ்சை பிடித்த விதைகள் போன்றவற்றை நீக்கி விடவேண்டும் 


நெல் விதை நேர்த்தி

ஒருகிலோ விதை நெல்லுக்கு பவுடராக இருந்தால் 10 கிராம் திரவமாக இருந்தால் 6 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ மற்றும் 30 கிராம் அசோஸ் பயிரிலும் உடன் கலந்துசெய்யலாம் 

நெல் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here 


முதலில் விதை நெல்லை தண்ணீரில் கலந்து அழுக்கை நீக்கிவிடவேண்டும். அடுத்து சூடோமோனஸ் மற்றும் அசோஸ் பயிரிலும் கலந்து நன்றாக பிரட்டிவிடவேண்டும் . பிரட்டி விடுவதை  கடினமாக செய்க்கூடாது விதை முனை மழுங்கி விடும் ஒரு அகலமான கரண்டியில் செய்யலாம் 


நிலம் 


ஏற்கனவே பாக்டீரியல் குலை நோய்  வந்த நிலமாக இருந்தாலோ அல்லது நீங்கள் சரியாக விதை நேர்த்தி செய்யவில்லை என சந்தேகம் இருந்தாலோ நடவு செய்த பின்பு ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கவேண்டும் . இதை நாற்றங்களிலும்  கொடுக்கவேண்டும் . நான்கு திசைகளிலும் நன்றாக தெளித்துவிட்டால் நன்றாக பரவும் . 


இதை தவிர்த்து நீங்கள் கட்டாயம் தெளிக்க வேண்டும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் 


G.M

Smart Vivasayi 


Contact +919003395600

E-mail imperialhorticulturetips@gmail.com

நெல் நாற்றங்கால் பராமரிப்பு - நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு

Post a Comment

0 Comments

Ad Code