mosquito repellent plants indoor India
இந்த உலகத்தை ஆள்வது மனிதன்தான் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் இந்த உலகத்தை ஆள்வது பூச்சி இனங்களே . இந்த பூமியில் நாம் இதுவரை கண்டுபிடித்திருப்பது வெறும் 20 % பூச்சிகளே மீதி 80 % அப்படியே கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் இருக்கிறது. இவ்வளவு இருந்தாலும் நம் வீட்டிற்குள் புகுந்து நம்மை மிகவும் தொல்லை படுத்துவது சில பூச்சி இனங்களே அதில் முதல் இரண்டு என்று பார்த்தால் ஓன்று கொசு மற்றொன்று ஈ . அப்ப அப்ப கரப்பான் பூச்சியும் வந்து நம்மை பயமுறுத்தும். நாம் மனிதனாக இருந்து நிறைய விலங்கினத்தை அழித்திருக்கிறோம் நம்முடன் வாழ்ந்த நிறைய பறவையினங்களை கூட நாம் அழித்துவிட்டோம் ஆனால் இந்த கொசுவை மட்டும் நம்மால் அளிக்க முடியவில்லை என்பதிலிருந்தே பூச்சி இனங்களின் ஆளுமைத்தன்மை நமக்கு புரியும் .
இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்
ஒரு 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னாடி கொசு அல்லது ஈக்கள் நம்மை தொந்தரவு செய்ததா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் வரும் ஏன் என்றால் ஓரு சிறந்த சுற்றுசூழல் கட்டுப்பாடு இருந்தது அதாவது ஒரு கொசுவுக்கு தன் இனத்தை பெருக்க இரத்தம் தேவை அதற்கு மாடு, ஆடு எடுத்து கொள்ளும் கடேசியாக மனிதனிடம் வரும் . 30 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 1 மாடு அல்லது ஆடு இருந்தது ஒரு சிறு தோட்டம் இருந்தது அங்கே கொசுவை கட்டுப்படுத்த ஒண்ணான் ,தவளை , இவைகளை கட்டுப்படுத்த பாம்பு இருந்தது ,இதற்கு கழுகு இருந்தது . இவற்றை மீறி கொசு நம் வீட்டிற்குள் வந்தாலும் நாம் போடும் சாம்புராணி கட்டுப்படுத்தியது இத்தனையும் தாண்டி கொசுகடித்தால் ஒரே அடியில் கொன்றுவிடுவோம். ஆனால் . தற்போது இந்த உயிர் சூழல் அறுந்து போய்விட்டது மாடு வளர்ப்பு என்பது மிக குறைந்துவிட்டது , தவளையும் ,பாம்புகளும் காட்டிற்குள் சென்றுவிட்டன , கொசுக்களும் பூச்சிகளும் கூட்டம் கூட்டமாக வந்து மனிதனை கடிக்க ஆரம்பித்துவிட்டன
பூச்சிகளை கட்டுப்படுத்துகிற செடிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் ஓன்று பூச்சிகளை விரட்டுகின்ற செடிகள் , பூச்சிகளை உண்ணும் செடிகள் .
பூச்சிகளை விரட்டும் செடிகள்
இந்த வகை செடிகளில் இருந்து வரும் வாசம் பூச்சிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி அவற்றை விரட்டி அடிக்கும்
Krishna Tulsi Plant (துளசி)
பூச்சிகளை கட்டுப்படுத்த முதலில் தேர்வு செய்ய வேண்டுமென்றால் தாராளமாக துளசியை நாம் தேர்வு செய்யலாம் வீட்டிற்கு வெளியே 2 செடியும் உள்ளே தேவையான இடத்தில ஓன்று இருந்தாலே போதுமானது
Lemon Grass - Plant
பூச்சிகளை உண்ணும் செடிகள் .
பூச்சி உண்ணும் தாவரங்களை பொறுத்தவரை இரண்டு தாவரங்களை நாம் வளர்க்கலாம் . தனக்கு தேவையான நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களுக்காக பூச்சிகளை கவர்ந்து இழுத்து கொள்ளும் .
Comments
Post a Comment
Smart vivasayi