Terrace and soil mix types
மாடி தோட்டத்தை பொறுத்தவரை ஒரு மண் கலவை தேர்ந்தெடுத்தல் என்பது உங்கள் மாடித்தோட்டத்தை எவ்வளவு காலம் சரியாக கொண்டு செல்விர்கள் என்பதை முடிவு செய்யக்கூடியது . எனவே மாடித்தோட்டத்தில் சரியான மண் கலவை என்பது உங்கள் விதையை விரைவாக முளைக்க செய்யும் , நன்றாக வளர செய்யும் , பூக்க செய்யும் , காய்க்க செய்யும் . நாம் இந்த கட்டுரையில் மண் கலவையில் உள்ள நன்மைகளும் மற்றும் என்ன வகையான மண் கலவைகள் பயன்படுத்தலாம் என்பதை நாம் பார்ப்போம் .
1) சிறந்த மாடி தோட்ட மண் கலவையென்பது களைகள் இன்றி இருப்பது . ஆனால் மண் , மணல் பயன்படுத்தும் போது களைகள் அதிகம் வரலாம் இதற்கு நீங்கள் மண் கலவையை தொட்டி அல்லது பையில் போட்டு மூன்று நாள் தொடர்ந்து தண்ணீர் விடுங்கள் களை விதைகள் இருந்தாள் முளைத்துவிடும் பின்பு நீங்கள் விதைகளை தூவலாம் .
2) மண் கலவைகள் மட்டுமே பயன் படுத்தும் போது சில விதமான பிரச்சனைகள் ஏற்படலாம் .
A ) ஆரம்பத்தில் மண்கலவை நன்றாக இருந்தாலும் போக போக மண் இறுகி போய்விடும் செடிகளால் சரியாக சுவாசிக்க முடியாது . வெண்டை , கத்தரி , முள்ளங்கி போன்ற ஒருபருவ பயிர்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் பூச்செடிகள், பழங்கள் , பயிர் செய்தால் மண் கலவையை தவிர்த்துவிடலாம்.
B ) மண் கலவையில் எடை சற்று கூடுதலாக இருக்கும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது கடினம் . அதே போல் ஒரு பையிலிருந்து மாறுவது சிரம்மமாக இருக்கும் .
மாடித்தோட்டத்திற்கு செடி நட என்னவிதமான கலவைகள் பயன்படுத்தலாம்
1) மண்
2) மணல்
3) ரெட் சாயில்
4) கோகோ பிட்
5) மண் புழு உரம்
6) பெர்லைட்
7) வெர்மிகுலேட்
மேல் கூறிய ஏதாவது மூன்றை 1:1:1 என்ற சதவிகிதத்தில் கலந்து கொள்ளலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi