Organic fertilizer for leaf banana cultivation
வாழை பொறுத்தவரை காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் வருமானத்தை கொடுப்பதில்லை சரியாக திட்ட மிட்டால் இலையும் நல்ல வருமானத்தை கொடுக்கும் . இலைக்காக பயிரிட படும் ரகங்கள் என்று பார்த்தால் பூவன் சிறந்தது அடுத்ததாக கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் வாழை ரகங்களை இலைக்காக பயிர்செய்யலாம் .
வாழை பற்றிய மற்ற கட்டுரைகள் Click Here
வாழை இலைக்காக பயிர் செய்யும் போது மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
காற்று
இலையையோ அல்லது மரத்தையோ சுலபமாக சாய்க்க கூடியது . முடிந்த அளவு அதிக கற்று அடிக்கும் பகுதிகளில் தவிர்ப்பது நல்லது . காற்று தடுப்பாக வரப்பு ஓரங்களில் உள்வரிசையில் அகத்தி , கிளரிசிடியா போன்ற மரங்களையும் வெளி வரிசையில் சவுக்கு , யூக்கலிப்டஸ் மரங்களை நடலாம் .
இடைவெளி
இலைகள் நன்றாக விரிவடைந்து வளர சூரிய ஒளி முக்கியம் எனவே வாழையை நெருக்கமாக நடாமல் தேவையான இடைவெளி விட்டு நடலாம்
இயற்கை உரங்கள்
இலைக்காகத்தான் நாம் வாழை பயிர் செய்கிறோம் என்றால் தழை சத்துதான் மிக முக்கியம் மற்றும் இலை நன்றாக பிடித்து வளர வேண்டுமென்றால் கால்சியம் சத்து வேண்டும் . மேலும் இலை கிழியாமல் இருக்க , வழுவழுப்பாக இருக்க சில நுண்ணூட்ட சத்துகள் தேவை . பொதுவா 80:10:10 தழை ,மணி ,சாம்பல் சத்தும் கொடுக்க வேண்டும் . இந்தமாதிரி அமைப்பு இருந்தாலே இலைப்பெருக்கம் நன்றாக இருக்கும் .
தழை சத்து
தழை சத்துக்கு உரிய இயற்கை உரங்கள் சாணம் , ஊட்டம் ஏற்றிய தொழு உரம் , மீன் அமிலம் , பஞ்சகாவிய தரைவழியும் ஈ.எம் கரைசல் ,பஞ்சகாவியவை தெளித்தும் கொடுக்கலாம் .
சாம்பல் சத்து
சாம்பல் தேவையான இடைவெளியில் வைத்துக்கொள்ளலாம் ஒரு மரத்திற்கு இரண்டு கை அள்ளுகிற அளவு வைக்கவேண்டும் அல்லது பொட்டாஷ் பாக்டீரியா 10 மில்லி கொடுக்கலாம் .
மணிச்சத்து
கடலை புண்ணாக்கு கரைசல் கொடுக்கலாம் அல்லது மாட்டு கோமியம் கொடுக்கலாம் அல்லது மண்புழு உரம் கொடுக்கலாம்
இதை தவிர்த்து இலைகள் காயம்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் பூச்சிகள், புழுக்கள் மற்றும் நோய்களிடம் இருந்து காப்பாற்றவேண்டும் இதை கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் வேலமர பட்டைக்கரைசல் இதையெல்லாம் அப்ப அப்ப தயார் செய்து கொடுத்துக்கொண்டு இருந்தாலே கட்டுப்படுத்தி விடலாம் .
G.M
Smart Vivasayi
Contact- +919003395600
Email- imperialhorticulturetips@gmail.com
Comments
Post a Comment
Smart vivasayi