Miscarriage in dairy cows - an overview
கன்று ஈனும் தேதிக்கு முன்பாகவே முழுமையாக வளர்ச்சியடையாத இறந்துப்போன அல்லது உயிரோடிருக்கும் கன்றினை வீசிவிடுதல் . முதல் மற்றும் இரண்டாவது மாதம் கர்ப்பகாலத்தில் உண்டாகும் கருச்சிதைவு பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை . மாடுகள் வழக்கம் போல் வலும்புக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடும் . ஆதலால் 120 நாட்கள் முதல் 270 நாட்களுக்குள் ஏற்படும் கருச்சிதைவு அல்லது கன்று வீச்சு பொதுவாக அனைவராலும் எளிதில் கண்டறிப்படுகிறது . மாட்டுப் பண்ணைகளில் ஒன்று , முதல் இரண்டு சதவிகிதக் கருச்சிதைவு பெரும்பாலும் பெரிதாக எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை . ஆனால் , அதுவே ஐந்து விகிதத்திற்கு மேல் உண்டாகுமேயானால் எச்சரிக்கைக்கான அறிகுறி கருதி தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பு வழிமுறைகளை உடனடியாக தகுந்த கால்நடை மருத்துவம் மூலம் செயல்படுத்துவது மிக முக்கியமாகும் .
நோய்க் காரணிகள்:
கருச்சிதைவு காரணிகள் இருவகைப் படும் . ஒன்று தொற்று காரணிகள் , மற்ரொண்டு தொற்று அல்லது காரணிகள் . தொற்று காரணிகளால் ஏற்படும் கருச்சிதைவு இது என பத்து சதவிகிததிற்கு மேல் கருச்சிதைவு புயல்களை ( Abortion storms ) பெரும்பாலும் ஏற்படுத்துகிறது . அதற்காகவே பெரும்பாலான தொற்று காரணிகளுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் . ஆதலால் கருச்சிதைவு தொற்று நோய்க் காரணியால் ஏற்பட்டதா அல்லது தொற்று அல்லது காரணிகளால் ஏற்பட்டதா என முதலில் தெரிந்துக் கொள்ளுவுது மிகவும் அவசியம் .
தொற்று காரணிகள் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி தொற்று காரணிகள் போன்றவை
1. வைரல் டயாரியா நோய் ( Bovine viral diahorrea )
2. இன்பெக்சியஸ் பொவைன் ரைனோ 191368 ) OWL 19.010 ( Infectious bovine rhinotracheity )
3. லெப்டோஸ்பைரோசிஸ் ( Leptosprosis )
4.புருசெலலோசிஸ் ( Brucellosis )
5. ஆக்டிநோமைசிஸ் ( Achnomuyces )
6. டிரைக்கோமோனியாசிஸ் ( ( Trichomo niosis )
7. லிஸ்டிரோசிஸ் ( Listerosis )
8. கிளமீடியோசிஸ் ( Chlamydiosis )
தொற்று அல்லது காரணிகள்:
1. சினைக்காலத்தில் உள்ள பசுவிற்கு கனமாக அடிபடுதல்
2. கர்ப்பப்பை முறுக்கிக் கொள்ளுதல்
3.இரட்டை கன்று உண்டாதல்
4. நச்சுக் தாக்கம் எ.கா. ) குமாரின் ( coumarin )எனப்படும் விஷத்தன்மை கொண்ட எலிக்கொல்லி.
5. நைட்ரேட்கள் , குளோரினேட்டேட் நாளுப்தலின் பொருள்கள் , ஆர்சனிக் போன்ற வேதிப்பொருட்கள்.
6. சினைமாடுகளின் கர்ப்பப்பையினை மருந்துகள் கொண்டு கழுவுதல்.
7. சினையுற்றிருப்பது தெரியாமல் சினை ஊசி போடுதல்.
8. வைட்டமின் ஐயோடின் மற்றும் செலீனியம் சத்து குறைபாடுகளாலும் மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுகிறது .
அறிகுறிகள் :
1. சினைக்காலம் முடியும் முன் பனிக்குடம் வெளிதள்ளுதல்.
2. பிறப்புறுப்பிலிருந்து கோழை போன்ற திரவம் அதிகப்படியாக வடிதல்.
3. தீவனம் எடுக்காமை
4. மாடுகள் சோர்வாக காணப்படுதல்
5. சினைக்காலம் முடியும் முன் திடீரென கன்றினை ஈனுதல்
சுகாதார மேலாண்மை மற்றும் தடுப்பு வழிமுறைகள் :
தடுப்பு வழிமுறைகளின் அடிப்படை நியதி பண்ணை சுகாதார மேலாண்மை ஆகும் .
1. பண்ணைகளுக்கு நோய்கள் நுழையா வண்ணம் சுத்தமாக பராமரிக்க வேண்டும் .
2. புதிதாக வாங்கிய கால்நடைகளை குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி மற்ற மாடுகளுடன் கலக்கா வண்ணம் பராமரிக்க வேண்டும் .
3.இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தும் எருதுகளின் சுகாதார நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் .
4. இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தும் காளைகளை சுகாதாரமாகவும் , தரமாகவும் உள்ள உயர்நிலை இருந்து வாங்க பண்ணைகளில் வேண்டும் .
5. பார்வையாளர்கள் , வேலையாட்கள் பண்ணைகளில் நுழையும் முன் சுத்தமாக உள்ளார்களா என்பதை உறுதி செய்வது முக்கியம் .
6. மாடுகளுக்கான அனைத்து உபகரணங்களையும் சுத்தமானதாக பயன்படுத்தவேண்டும் .
6. உபகரணங்களை அடிக்கடி கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் .
7. கருச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட பசுவினை தனிமைப்படுத்தி மற்ற மாடுகளுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும் .
8. முறையான ஊட்டச்சத்து நிறைந்த போதுமான உணவினை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும் . அவ்வாறு கொடுத்தால் வைட்டமின் ஏ , ஐயோடின் , செலினியம் போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கலாம் .
9. சினை பருவத்தில் உள்ள பசுக்களுக்கு நல்ல தரமான உணவினை கொடுக்க வேண்டும் .
10. நச்சு மற்றும் பூஞ்சைகளால் பாதிக்கப்பட்ட உணவு தருவதை முழுமையாக தடுக்க வேண்டும் . கருச்சிதைவு நோயினால் மாடுகளினால் வெளியேற்றப்பட்ட கன்றுகளையும் , நஞ்சுக்கொடியினையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் .
11. பண்ணையிலுள்ள உபகரணங்கள் , தீவனம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மாடுகளின் நஞ்சுக்கொடி மற்றும் கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்களால் மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் .
12. மாட்டுக் கொட்டகையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .
நோய்க்கட்டுப்பாடு வழிமுறைகள்:
1. 6 முதல் 8 மாத வயதான கிடேரிகளுக்கு இன்பெக்சியஸ் பொவைன் ரைனோடிரக்கியைட்டிஸ் மற்றும் இன்பெக்சியஸ் வல்வோ வஜைடைட்டிஸ் போன்ற நோய்களுக்கெதிராக தடுப்பூசி சினை மாடுகளுக்குத் செலுத்த வேண்டும் .
2. லிஸ்டீரிரோசிஸ் நோயினால் ஏற்படும் கன்று வீச்சினைக் கட்டுப்படுத்த மாடுகளுக்கு காரத்தன்மை அதிகம் கொண்ட தரம் குறைந்த சைலேஜினை ( Silage ) தீவனமாக அளிப்பதை தவிர்க்க வேண்டும் .
3. புரூசெல்லோசிஸ் நோயினால் மாடுகளில் ஏற்படும் கன்று வீச்சினைக் கட்டுப்படுத்த 3 முதல் 7 மாதம் வயது வரை உள்ள கிடேரிக்கன்றுகளுக்கு புருசெல்லா ஸ்டெரைன் 19 ( Brucella strain 19 ) என்ற தடுப்பூசியினைப் போட வேண்டும் .
4.நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது மாடுகளை இனப்பெருக்கம் செய்யக் கூடாது .
5.நோயினால் பாதிக் கப்பட்ட காளைகளை இனப்பெருக் கத்திற்கு உபயோகப்படுத்தக்கூடாது .
6. சினைமாடுகளின் கொட்டகைத் தரை வழுக்காமல் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும் .
Comments
Post a Comment
Smart vivasayi