How to start profitable organic farming
திட்டமிடல்
ஒரு இயற்கை விவசாயத்தின் முதன்மை மற்றும் அடிப்படை இதை தொடர்ந்த வெற்றி அனைத்துமே இந்த திட்டமிடலில்தான் உள்ளது . இன்றய காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டு ஒரு பகுதி நேரமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று உள்ளனர் . இவர்கள்தான் திட்டமிடல் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் . இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினாலே நம்மால் பெரிய அளவு ஜெயிக்க முடியும் .
கொசு ,பூச்சிகளை விரட்டும் மற்றும் உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா
நுண்ணுயிர்கள்
நீங்கள் எவ்வளவுதான் இயற்கை உரங்கள் போட்டாலும் இந்த நுண்ணுயிரிகள் இருந்தால்தான் பயிர்களுக்கு ஏற்ற வடிவத்தில் தங்களுக்கான சத்தை எடுத்துக்கொள்ள முடியும் . நுண்ணுயிரிகளை அதிகரிக்க தொழு உரங்களை போடலாம் , அசோஸ்பைரில்லம் ,பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை இடலாம் .
நிலவளம்
இயற்கை விவசாயத்தின் முதல் தேவை நிலவளம் . இந்த நிலவளத்தை மேம்படுத்த தொழு உரம் போடலாம் , கோடை உளவு செய்து நிலத்தை பண்படுத்தலாம் , பசுந்தாள் உரப்பயிர்கள் , எண்ணெய்வித்து பயிர்கள் , நறுமணம் மற்றும் தானிய வகை பயிர்கள் ஏதாவது நான்கு வகை பயிர்களை எடுத்து ஒரு கிலோ வீதம் பயிரிட்டு மடக்கி உழ வேண்டும் . இதன் மூலம் மண்வளம் பெருகும் .
விதை தேர்ந்தெடுத்தல்
உங்கள் இயற்கை விவசாயத்தின் வெற்றியை தீர்மானிக்க கூடிய முக்கியமான காரணிகளில் ஓன்று . உங்கள் நிலம் என்ன வகை அதில் என்ன வகையான பயிர் செய்யலாம் , நீர் ஆதாரம் எப்படி உள்ளது இவை அனைத்தும் கவனத்தில் கொண்டு விதை தேர்ந்துஎடுக்கவேண்டும் . அதிகம் முளைப்பு திறன் கொண்ட விதைகள் ,நோய் எதிர்ப்பு திறன் கொண்ட விதைகள் மற்றும் தரமான விதைகள் பயன்படுத்தலாம் .
விதை நேர்த்தி
சரியான விதை நேர்த்தி செய்தாலே பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றிவிடலாம். சூடோமோனஸ் , அசோஸ்பயிரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி .பஞ்சகாவியா கரைசல்கள் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்
பயிர் வளர்ச்சியூக்கி மற்றும் பூச்சி விரட்டி
பயிருக்கு தேவையான நேரத்தில் சரியான சத்துக்கள் கொடுத்தால்தான் சீரான வளர்ச்சி , பூக்கள் பூப்பது மற்றும் காய்கள் பெருக்கம் இருக்கும் . எனவே ஒரு அட்டவணை போட்டுக்கொள்ளுங்கள்
1) என்ன பயிர் செய்ய போகிறீர்கள்
2) எத்தனை நாள் பயிர்
3) எத்தனை நாள் இடைவெளியில் இடு பொருட்கள் கொடுக்க வேண்டும்
4)என்ன இடுபொருட்கள் கொடுக்கவேண்டும்
5) நாம் இடுபொருட்களை வாங்கியும் கொடுக்கலாம் தயாரித்தும் கொடுக்கலாம் . ஒருவேளை நீங்களே தயாரித்தால் ,தயாரிக்க வேண்டியநாள் என்று ஒரு தனி அட்டவணை போட்டுக்கொள்ளுங்கள்
பூச்சி விரட்டி என்றால் முதலில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்வது நீங்கள் பயிரிட போகும் பயிரில் என்ன பூச்சி மற்றும் நோய்கள் தாக்கும் என்பதை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள் மேலும் எந்த பருவத்தில் தாக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக 7 அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொண்டே இருக்கவேண்டும் .
காய்ந்த பூக்களில் எப்படி வருமானம் பார்க்கலாம்
சந்தை படுத்துதல்
உங்களுடைய முழு வெற்றியை தீர்மானிக்க கூடியது இந்த சந்தை படுத்துதல் . இது சிறு புள்ளியில் இருந்து பெரிய வட்டமாக செல்லவேண்டும் . புரியும்படி சொல்லவேண்டுமென்றால் முதலில் உங்கள் ஊரில் விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம் உங்கள் மாவட்டம் அடுத்து மாநிலம் அடுத்து நாடு இறுதியாக இந்த உலகம் இப்படி படிப்படியாக இருந்தால் வெற்றி நிச்சயம்
Comments
Post a Comment
Smart vivasayi