How to become a member of Tamil Nadu Agricultural Co-operative Society
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4000 மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்தியாவில்… ஏன் உலக அளவில் கூட ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால் அந்த சங்கத்தின் செயல் எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த கூட்டுறவு சங்கத்தின் அன்றாட செயல்கள் தொடர்பான செயல்களை நீங்கள் அந்த செயல் எல்லையில் நடத்துபவராக இருக்க வேண்டும். உதாரணமாக மேலே உள்ள தலைப்பில் உள்ளவாறு நீங்கள் ஒரு தொடக்க வேளாண்மை சங்கத்தின் உறுப்பினராக வேண்டுமெனில் அந்த சங்கம் செயல்படும் ஒரு வருவாய் கிராமத்தில் உங்களுக்கு வேளாண் நிலம் இருக்க வேண்டும். அதுவே வேறு வேறு கிராமங்களில் உங்களுக்கு நிலம் இருந்து நீங்கள் அந்த சங்கத்திலும் உறுப்பினராக வேண்டும் என்றால் முதலில் சேர்ந்த சங்கத்தில் இருந்து தடையின்மை சான்று (No objection certificate) வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே செயல்பாடு தொடர்பான சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் ஏதேனும் ஒரு சங்கத்தில் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற முடியும் — அதாவது நிர்வாக குழு உறுப்பினராகவோ அல்லது தலைவராகவோ ஒரு சங்கத்தில் மட்டுமே நீங்கள் இருக்க முடியும். அதேநேரம் பிற சங்கங்களில் இருந்து உங்களுக்கு தேவையான உரம் பணத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதேபோல் தொடக்க நிலையில் வீட்டுவசதி சங்கங்கள், மீன்பிடி சங்கங்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் என பல துறைகளில் தொடக்க நிலை சங்கங்கள் உள்ளன.
தொடக்க வேளாண்மை வங்கியில் நிலம் யார் பெயரில் இருக்கிறதோ அவர் முதன்மை உறுப்பினராக (A class member) சேரலாம். நில உரிமையாளர் நேரடியாக வர முடியாத பட்சத்தில் (அவர் முதலில் நேரில் வந்து உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும். மேலும் அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ, வெளியூர் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது பணம் - பொருளாதார குற்றங்களுக்கு சிறை தண்டனை பெறாமல் மற்ற காரணங்களுக்காக அல்லது சிவில் வழக்கில் சிறை தண்டனை பெற்று இருந்தாலும் ) அவரது மனைவி, மகன், மகள் இணை உறுப்பினராகி (B class member) கடன் வசதிகளை பெறலாம். எப்போதும் போல 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக சேரலாம்.

Comments
Post a Comment
Smart vivasayi