Dried flower business ideas
நம் வாழ்க்கையில் உணர்வுகளுக்கோ அல்லது உணர்ச்சிகளுக்கோ பூக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது . நம்முடைய காதலை வெளிப்பதுதலாகட்டும் , நம்முடைய நன்றியை வெளிப்படுவதாகட்டும் , சந்தோசம், துக்கம் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு உதவுவது பூக்களே . நம்முடைய வாழ்க்கையில் பூக்கள் அனைத்திற்குமே தேவைப்படுகிறது , காலையில் கடவுளுக்கு பூ வைப்பதிலிருந்து அணைத்து மத திருவிழாக்களுக்கு , கல்யாணம் இப்படி பூக்கள் இந்தியாவை வருடத்திற்கு 800 டன் பூக்கள் பயன்படுத்தப்படுகிறது
அக்ரி பிசினஸ் பற்றிய மற்ற கட்டுரைகள் Click here
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 8 லச்சம் பூக்கள் வீணாக்கப்படுகிறது . இப்படி காய்ந்து போன பூக்களையோ அல்லது வீணாக கொட்டப்படும் பூக்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
Dry Flowers Arrangement
சிலவகையான பூக்கள் காய்ந்தாலும் அழகாக இருக்கும் அதன் நிறமும் மாறாமல் இருக்கும். Helichrysum, Delphinium, Helipterum, Amaranthus, Nigella, Carathmus, Gypsophilla போன்ற பூக்களை பயன்படுத்தி தயாரிக்கலாம் . இதை வீட்டை அலங்கரிக்கவும் , முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அலங்காரமாகவும் பயன்படுத்தலாம் .
போட்பூர்ரி (Potpourri)
நாம் நல்ல வசமாக வைத்து கொள்ள சாம்புராணி போடுவோம் அல்லது ஹோம் ஸ்ப்ரே செய்வோம் . அதே வாசனையை பூக்களை வைத்து நாம் செய்வதுதான் போட்பூர்ரி. நீங்கள் பயன் படுத்தும் மல்லிகைப்பூவையோ ரோஜா பூவையோ காய்ந்த பின்பு தூக்கிபோடாமல் ஒரு ஜாரில் போட்டு அதனுடன் cinnamon cloves, nutmeg, dried citrus peel மற்றும் vanilla beans இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் போட்டு நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது செண்டை ஸ்ப்ரே செய்து துணியை வைத்து கட்டி மூடிவிடுங்கள் 10 நாட்களுக்கு பிறகு போட்பூர்ரி தயாராகிவிடும் .
சோப்பு
அழுகிய அல்லது காய்ந்த பூக்களிலிருந்து சோப்பு தயாரிக்கலாம் . இதற்கு 100% sodium hydroxide, தேவைப்படும் கலர் சேர்ப்பதற்கு கிரிஸ்டல் , பூக்கள் ,எண்ணெய் மற்றும் உங்களுக்கு தேவையான மூலிகைகள் தேவைப்படும் .
Dry Flowers Frame
அழகான பூக்களை பிரஸ் செய்து அதை வடிவமைத்து பிரேம் செய்யலாம் . வீடு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதற்கு வெள்ளை அல்லது கலர் பேப்பர் கார்ட்போர்டு தேவைப்படும் .
இதை தவிர்த்து மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும் , மண்புழு உரம் தயாரிக்கலாம் , இயற்கை விவசாயத்திற்க்காக பூச்சி விரட்டி தயாரிக்கமுடியும்
G.M
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi