7 things about mangrove trees
நாம் கிட்டத்தட்ட எல்லாவகையான மரங்களையும் ரசிப்போம் , இளைப்பாறுவோம் அவ்வளவு ஏன் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது விளையாட கூட செய்திருப்போம் . ஆனால் இந்த மரங்களை எல்லாம் தவிர்த்து நமக்கு தனித்துவமாக இருப்பவை இந்த சதுப்பு நில காடுகள் . இந்த சதுப்பு நில காடுகளை புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீரில் அடர்த்தியாக வளரக்கூடிய பெரிய மரங்களாகும் . இவை பெரும்பாலும் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில்தான் இருக்கும் . தமிழ் நாட்டில் பிச்சாவர கடற்கரையில் காணலாம் .
1) சதுப்பு நில மரங்கள் மட்டுமே உப்பு தண்ணீரில் வாழும் தன்மையை பெற்றுள்ளன . சதுப்பு நில மரங்களுக்கு அனைத்திற்குமே இந்த உப்ப தண்ணீரிலும் தாங்கியும் வளரும் தன்மை கொண்டுள்ளது .
2) சதுப்பு நில காடுகள் புயல் சுனாமி போன்றவற்றை இயற்கை அரணாக இருந்து தடுப்பதோடு வேர்கள் அடி ஆழம் வரை பரவி மண் அரிப்பையும் பெருமளவு தடுக்கிறது .
3) 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டை ஆக்சைடை கிரகிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது . துரதிஷ்ட வசமாக சதுப்பு நில காடுகளை அழிப்பதால் 122 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் அளவு அதிகரித்திரிக்கிறது .
4) கடல் வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாக இந்த சதுப்பு நில காடுகள் உள்ளன 1000 மேற்பட்ட மீன் இனங்கள் இந்த சதுப்பு நில காடுகளை நம்பி வாழ்கின்றன .கடற்கரைக்கு அருகில் வசிக்கும் பலர் இந்த சதுப்பு நிலங்களில் மீன் பிடிப்பதையே
5) 35 வகையான சதுப்பு நில மரங்கள் இருந்தாலும் , வெள்ளை , கருப்பு , பட்டன் வுட் மற்றும் ரெட் நிற மரங்களே அதிகமாக உள்ளன . அதன் வகைகளை பொறுத்து சின்ன குத்து செடி முதல் 40 அடி வரை வளருகின்றன
6) சதுப்பு நில மரங்களின் அடர்த்தியான வேர்கள் அலைகளை தடுத்து நிறுத்தி மண் அரிமாணத்தை தடுக்கிறது , ஊட்டச்சத்து மிகுந்த வண்டல்மண்ணை சேமித்து வைக்கிறது . ஒருவேளை நாம் இந்த காடுகளை இழக்க நேரிட்டால் மறுபடியும் நிறுவுவது கடினம் .
7) சுற்று சூழல் பாதுகாப்பதில் இந்த சதுப்பு நில காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன அவை காலநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன, கடற்கரையோரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன, மீன், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான உணவை வழங்குகின்றன, பல்வேறு உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடத்தை உருவாக்குகின்றன.
இப்படி பல வகைகளில் நமக்கு உதவும் இவை பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அழிவை சந்தித்து வருகின்றன . இதனால் பல்லுயிர் பெருக்கம் குறையும் இதனால் கடலின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் . எனவே இந்த சதுப்பு நில காடுகளை பாதுகாப்பது இன்றய காலத்தின் தேவையாகும்
Comments
Post a Comment
Smart vivasayi