How to start profitable organic farming திட்டமிடல் ஒரு இயற்கை விவசாயத்தின் முதன்மை மற்றும் அடிப்படை இதை தொடர்ந்த வெற்றி அனைத்துமே இந்த திட்டமிடலில்தான் உள்ளது . இன்றய காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டு ஒரு பகுதி நேரமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று உள்ளனர் . இவர்கள்தான் திட்டமிடல் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் . இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினாலே நம்மால் பெரிய அளவு ஜெயிக்க முடியும் . கொசு ,பூச்சிகளை விரட்டும் மற்றும் உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா நுண்ணுயிர்கள் நீங்கள் எவ்வளவுதான் இயற்கை உரங்கள் போட்டாலும் இந்த நுண்ணுயிரிகள் இருந்தால்தான் பயிர்களுக்கு ஏற்ற வடிவத்தில் தங்களுக்கான சத்தை எடுத்துக்கொள்ள முடியும் . நுண்ணுயிரிகளை அதிகரிக்க தொழு உரங்களை போடலாம் , அசோஸ்பைரில்லம் ,பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை இடலாம் . நிலவளம் இயற்கை விவசாயத்தின் முதல் தேவை நிலவளம் . இந்த நிலவளத்தை மேம்படுத்த தொழு உரம் போடலாம் , கோடை உளவு செய்து நிலத்தை பண்படுத்தலாம் , பசுந்தாள் உரப்பயிர்கள் , எண்ணெய்வித்து...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்