what is mulching in agriculture and coconut plants
ஒரு மாந்தோப்புஅல்லது கொய்யா தோப்பு என்றாலும் சரி தென்னம் தோப்பனாலும் சரி ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடைவெளி அதிகம்தான். ஆனால் , தென்னை மரத்திற்கு மட்டும் ஏன் மூடாக்கு மிக அவசியம் , அதற்கு முக்கிய கரணம் நிழல் . மா ,பலா , கொய்யா போன்ற தோட்டக்கலை பயிர்கள் பரந்து விரிந்து இருக்கும் அதன் நிழல் பரப்பும் அதிகம் ஆனால் தென்னை குறைந்தது 28 அடியாவது இடைவெளி விட்டிருப்போம் வெயில் நிழல் பரப்பு குறைவு. நாம் இந்த கட்டுரையில் தென்னையில் எப்படி மூடாக்கு செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம் .
தென்னையில் ஏன் மூடாக்கு செய்ய வேண்டும்.
களைகள்
வெயில் பரவும் இடம் அதிகம் என்பதால் கலைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இது தேவை இல்லாத பூச்சி மற்றும் நோய்களை பரப்பும் மேலும் நீருக்கும் மற்றும் சத்துக்களும் அதிக போட்டி இருக்கும்
நீர்
தென்னையை பொறுத்தவரை நாம் வட்ட பாத்தியில்தான் தண்ணீர் விடுவோம் , ஆனால் மற்ற பகுதிகளில் வெயில் அதிகம் பட்டு நீர் ஆவியாகும் போது இந்த நீர் அந்த பகுதிக்கு போக வாய்ப்புள்ளது எனவே தென்னைக்கு தேவையான சமயத்தில் நீர் கிடைக்காது .
2) உயிர் மூடாக்கு .
மேல் சொன்ன இரண்டும்தான் முக்கிய பிரச்னையாக இருக்கும் நிறைய மூடாக்கு வகைகள் இருந்தாலும் இதனை கட்டுப்படுத்த நாம் இரண்டு வகையாக மூடாக்கு பயன்படுத்தலாம்
1) தழை மூடாக்கு
மூடாக்கு + உயிர் உரம்
களிமண் நிலமாக இருந்தால் அதிக உப்பான தன்மை உடைய நிலமாக இருந்தால் தக்கை பூண்டு விதைக்கலாம் மற்ற எந்த நிலமாக இருந்தாலும் சணப்பு, அவுரி , கொழுஞ்சி விதைகளை வாங்கி உழுது உள்ளபோட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து 45 நாள்கள் கழித்து மடக்கி உழுகலாம் .
மூடாக்கு + ஊடு பயிர்
உங்களிடம் தண்ணீர் இருந்து 4 தென்னை மரங்களுக்கிடையே அதிக வெயிலும் இருந்தால் தாராளமாக ஊடு பயிர் பண்ணலாம் . பயறு வகை பயிர்கள் பண்ணலாம் , காய்கறி பயிர்கள் பண்ணலாம் முக்கியமாக மலர் பயிர்கள் பண்ணலாம் . வாழை ஊடுபயிர்ராக பண்ணலாம் நமக்கு நிறைய வருமானமும் வரும்
Comments
Post a Comment
Smart vivasayi