organic weed control
ஒரு களை அதோட பயன்பாடு என்பது மிக அதிகம் , களை உணவாக பயன்படுகிறது , களை மருந்தாக பயன்படுகிறது , களை அழகு பொருட்கள் செய்ய பயன்படுகிறது இப்படி களைகளோட பயன்கள் இருக்கத்தான் செய்கிறது . ஆனால் களை கட்டுப்பாடு என்பது எங்கே வருகிறது என்று பார்த்தால் , உங்களுடைய முக்கிய பயிரின் இடையே வளரும் போது அது களையாகிறது இந்த கட்டுரையில் நாம் எப்படி இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் .
முதலில் ஒரு களை ஏன் அகற்றப்பட வேண்டும்
விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த நேரடி கள பயிற்சிகள் ஆன்லைன் பயிற்சிகள் பற்றிய விவரங்கள்- JOIN Here
உழவு
ஒரு களையை கட்டுப்படுத்துவதில் முதல் பங்கு முக்கிய பங்கு வகிப்பது உழவு . விவசாய பயிர்களை பொறுத்தவரை நாற்று விட்டு நடுவதை விட நேரடி விதைப்பில்தான் களைகள் அதிகம் வரும் இதனை கட்டு படுத்த உழவே சிறந்தது .
நீர்
களையை கட்டுப்படுத்துவதில் நீருக்கும் பங்கு உண்டு . ஒருதடவை உழுதபின்னர் உங்கள் வயலில் இரண்டு நாளைக்கு நீரை நிறுத்தி வைத்து வடித்துவிடுங்கள் , அந்த நீரை வைத்து புதியக்கலைகள் முளைக்கும் அதையும் உழுது பின்பு விதைக்கலாம் .
கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க்
ஊடுபயிர் .
இது பெரும்பாலும் தோட்டக்கலை பயிர்களுக்கே இது பொருந்தும் . மற்ற பயிர்களை விட தோட்டக்கலை பயிர்களுக்கு இடைவெளி அதிகம் அதனால் களைகள் வருவதும் அதிகம் அதனை கட்டுப்படுத்த ஊடுபயிரே சிறந்தது மேலும் நமக்கு உபரி வருமானமும் கிடைக்கும்
அடர்த்தியாக வளரக்கூடிய பயிர்களைபயிரிடுவதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம் . அல்லது ஏதாவது ஒருபோகத்திற்கு முள்ளங்கி , தீவன பயிர்கள் அல்லது எண்ணெய்வித்து பயிர்கள் போன்றவற்றை மூடு பயிர்களாக பயிரிட்டு கட்டுப்படுத்தலாம்
மூடாக்கு
காய்கறி பயிர்களில் நாம் மூடாக்கு பயன்படுத்தினாலும் நாம் அதிகம் பயன்படுத்துவது பந்தல் காய்கறிகளுக்குத்தான் , இதில்தான் இடம் அதிகம் இருக்கும் . இதற்கு சொட்டுநீர் பாசனம் செய்தால் ஓரளவுக்கு களைகளை கட்டுப்படுத்தலாம்.
பாலிதீன் பேப்பர்களை கொண்டு மூடாக்கு செய்யலாம் . அல்லது வைக்கோல் கொண்டு மூடாக்கு செய்யலாம்
களைக்கொல்லி
முதலில் இயற்கை களைக்கொல்லி என்றால் என்ன ? நமக்கு தேவையில்லாத பயிரில் வளர்ச்சியை தடுத்து அதை எரிக்கிறதோ அல்லது அழிகிறதோ அந்த பொருட்களை எல்லாம் களைக்கொல்லி எனச்சொல்லலாம் நான் ஏன் இந்த களைக்கொல்லி கடேசியா சொல்லுறேன்னா நீங்கள் செயற்கை முறையில் களைக்கொல்லி தெளித்தாலும் சரி இயற்கை முறையில் களைக்கொல்லி தெளித்தாலும் சரி கட்டாயமாக உங்கள் நிலம் பாதிக்கப்படும் ஆனால் இயற்கை முறையில் செய்த களைக்கொல்லியால் நிலம் பாதிக்கப்படும்போது அதை நம்மால் சரிசெய்ய முடியும்
இயற்கை களை கொல்லி செய்ய இந்த மூன்று பொருட்கள் கட்டாயம் தேவை
1) கல்லு உப்பு
2) சுண்ணாம்பு
3) மாட்டு கோமியம்
இந்த பொருட்களை எல்லாம் அளவாக பயன்படுத்தினால் பயிருக்கு நன்மையாக இருக்கும் அதுவே ஒரு அளவுக்கு மீறினால் பயிரை அழிக்கும் .
Comments
Post a Comment
Smart vivasayi