தமிழ்நாட்டில் ஒரு ஆர்கானிக் ஷாப் எப்படி தொடங்கலாம்
நீங்கள் இயற்கை விவசாயம் செய்பவராக இருக்கலாம் அல்லது நாம் இயற்கையாக விளைவித்த பொருளை நாமே விற்பனை செய்யலாமா என்ற எண்ணத்தில் இருக்கலாம் , அல்லது விவசாயியாக இல்லாமல் அவர்களிடம் இருந்து இயற்கை விளைந்த பொருளை வாங்கி விற்பனை செய்யலாமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கும் .குறைந்த விலையிலும் ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் அதிக விலையிலும் ஆரம்பிக்கலாம் நாம் இந்த கட்டுரையில் என்ன ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பார்க்கலாம் .
கவனிக்க வேண்டியவை ,,,,
நீங்களே சொந்தமாக நிலம் வைத்திருந்தால் அதில் விளைவித்து அதை நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டியோ ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் அதற்காக நீங்கள் அங்கக சான்றிதழ் வாங்கவேண்டும் . இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது உங்கள் நிலத்தில் எல்லா பொருட்களையும்
கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part -2
2) ஒருவேளை உங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் உதாரணமாக கீரை மட்டும் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் அதற்கு கிழே உள்ள வெப்சைட்டை பார்க்கவும் (கண்டிப்பாக அங்கக சான்றிதழ் வாங்க வேண்டும் ).
3) நீங்கள் வெளியிலிருந்து வாங்கி விற்கப்போகிறீர்கள் என்றால் அங்கக சான்றிதழ் உள்ளவர்களிடம் மட்டுமே வாங்கவேண்டும் .
நீங்கள் இரண்டு விதமான ஆர்கானிக் ஷாப் அரமிப்பிக்கலாம்
1 நேரடியாக விற்பனை செய்யலாம்
2 வாங்கி மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம்
இப்படி என்ன ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் என்று பார்க்கலாம்
ஆர்கானிக் மளிகை கடை
இது நான் முன்னமே சொன்னதுதான் நீங்கள் உற்பத்தி செய்தும் விற்கலாம் அல்லது வங்கியும் விற்கலாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அங்கக சான்றிதழ்
ஆர்கானிக் உணவு கபே
உங்களிடம் இடம் இருக்கிறதா அல்லது வாடகைக்கு இடம் எடுத்து ஒரு இயற்கை உணவு அங்காடி ஆரம்பிக்கலாம் . அதில் ஆர்கானிக் ஸ்னாக்ஸ் , ஆர்கானிக் ஜூஸ் போன்றவை விற்கலாம்
ஆர்கானிக் ஸ்னாக் பார்
கூட்டம் அதிகமாக கூட கூடிய இடங்கள் , ஹை-வே போன்ற இடங்களில் திறக்கலாம் இதற்கு அதிக இன்வெஸ்ட்மென்ட் இருக்காது
ஆர்கானிக் ஜூஸ் ஸ்டால்
இது ஆரம்பிப்பதற்கு அதிகம் செலவு ஆகாது . தேவையான பழங்களை நீங்கள் சொந்தமாக உற்பத்தி செய்தோ அல்லது வாங்கியோ ஆரம்பிக்கலாம் .
காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை
இயற்கை ஆக விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு எப்பவுமே ஒரு முக்கியத்துவம் உண்டு விளையும் கொஞ்சம் அதிகம் கூட நீங்களே விற்பனை செய்யலாம் அல்லது அருகில் உள்ள சின்ன சின்ன கடைகளுக்கு கொடுக்கலாம்
Comments
Post a Comment
Smart vivasayi